பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 இரத்தச்‌ சுழற்சி

584 இரத்தச் சுழற்சி இணை குழாய் வழியாக இரத்தம் கலப்பதால் மகா தமனியில் ஆக்சிஜன் குறைந்து காணப்படுகிறது. இதயத்தில் மேலறை, கீழறை இவற்றின் சீரான சுருக்கங்களும், விரிவுகளும் குறிப்பிட்ட முறையில் நடைபெறுகின்றன. மேலறைச் சுருக்கம் ஒரு வினாடி யும், கீழறைச் சுருக்கம் 3 வினாடியும், பொது இடை வெளி 4 வினாடியும் நீடிக்கின்றன. இதயம் நிமிடத் திற்கு 75 முறை சுருங்கி விரிகிறது. உடற்பயிற்சி மற்றும் காய்ச்சலின்போது இதயத்துடிப்பு அதிக மாகிறது. வளர் இதயத்தில் ஒவ்வோர் அறைப்பகுதியிலும் ஒரே அளவான இரத்தம் ஒரே காலத்தில் வெளி வருகிறது (சராசரி 60 மி.லி,). இந்த இரத்தம் தமனிகள் மூலம் வெளியேறி மெல்லிய நுண்குழாய்களாகி சிதை மாற்றத்திற்கு உதவிய இதயத்தை நோக்கி வரும்பொழுது சிரைகள் மூலம் கீழ்ப்பெருஞ்சிரை வழியாக வல ஆரிக்கிளுக்கு வந்து சேர்கின்றது. இரத்த நுண்குழாயின் மெல்லிய சுவர்களின் வழியாக ஆக்சிஜனும் சத்துப் பொருள்களும் திசுச் செல்களுக்குள் சென்று அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் சில கழிவுப் பொருள்களையும் இரத்தத்தில் சேகரித்துச் சிரையாக மாறி, உடலில் மேற்பகுதியிலிருந்து மேற்பெருஞ்சிரை வழியாகவும் உடலில் கீழ்ப்பகுதியிலிருந்து கீழ்ப் பெருஞ்சிரை வழி யாகவும் வல ஆரிக்கிளைச் சேர்கின்றன. வயிற்றில் சிறுகுடல் போன்ற உறுப்புகளில் இருந்து வரும் இரத்தம் கீழ்ப்பெருஞ்சிரையை அடையும் முன்பு போர்ட்டல் சிரை என்ற இரத்தக்குழாய் மூலம் கல்லீரலை அடைந்து அங்கு சிறிய தந்துகி வலைப் பின்னலாக மாறுகிறது. இரத்தம் நடுக் கல்லீரல் சிரைகளுக்குச் சென்று பின்னர் கல்லீரல் சிரையை அடைந்து கீழ்ப் பெருஞ்சிரையில் கிறது. வந்தடை இட மேலறையிலிருந்து புறப்படும் இரத்தம் வல ஆரிக்கிள் வந்தடையும்போது ஏற்படும் சுழற்சியே பொது இரத்த ஓட்டமாகும். நுரையீரல் தமனி வலக் கீழ் அறையிலிருந்து ஆரம்பமாகிறது. இத்தமனி நுரையீரலுக்குச் சென்று அங்குள்ள பல காற்று நுண்ணறைகளிலும் தந்துகி வலைகளாக மாறுகிறது. அங்குதான் சுவாசிக்கும் போது வளிம மாற்றம் ஏற்படுகிறது. நுரையீரல் இரத்த நுண்குழாய்களின் வழியாக இரத்தம் நுரை யீரல் சிரைகளைச் சேருகிறது. இங்கிருந்து இரத்தம் இட ஆரிக்கிளை அடைகிறது. வல வெண்ட்ரிக்கிளி லிருந்து இட ஆரிக்கிளை இரத்தம் அடையும்போது ஏற்படும் சுழற்சியே நுரையீரல் இரத்த ஓட்டம் எனப்படுவதாகும். நுரையீரல் இரத்த ஓட்டத்தின்போது, காற்று நுண்ணறைகளை நுண்குழாய் வலைப் பின்னலாக மூடியிருப்பதால் ஆக்சிஜன் இரத்தத்தில் கலக்கிறது. இந்த ஆக்சிஜன் உள்ளிழுத்த காற்றில் உள்ள தாகும். ஆக்சிஜனை உறிஞ்சிக் கொண்டு, இரத்தம் கார்பன் டை ஆ ஆக்சைடைக் கொடுத்துவிடுகிறது. இந்தக் கார்பன் டை -ஆக்சைடு வெளிச்சுவாசத் தின் போது நுரையீரலை விட்டு அகன்றுவிடுகிறது. எனவே பொது இரத்த ஓட்டத்தின்போது தந்துகி களில் இரத்தத்தின் வேதியியல் தன்மையில் மாற் றம் ஏற்படுகிறது. ஆனால் இந்த மாற்றம்; உடலின் திசுக்களில் ஏற்பட்ட மாற்றத்திற்கு நேர் எதிரானது. அதாவது இப்பொழுது இரத்தம் மறுபடியும் நல்ல சிவப்பு நிறம் அடைகின்றது. இந்த ஆக்சிஜன் நிறைந்த இரத்தம் இதயத்தின் மூலம் மறுபடியும் பொதுச் தமனிகளில் நுழைந்து சுழற்சியைத் தொடங்குகிறது. போர்ட்டல் சிரை வயிற்றுக் குழிவினுள் சிறிய ஓமெண்ட்டத்தின் வலப் பகுதியில் காணப்படுகிறது. அது கீழ்க்காணும் தனிமையான உறுப்புகளிலிருந்து சிரை இரத்தத்தைச் சேகரிக்கிறது. இரைப்பை, சிறு குடல், பெருங்குடல் (மலக்குடலின் கீழ்ப் பகுதியைத் தவிர), மண்ணீரல், கணையம், பித்தநீர்ப்பை முதலி யன போர்ட்டல் சிரை கல்லீரலுக்குள் அதன் முகப்பு வழியாக நுழைந்து சிறிய கிளைகளாகப் பிரிந்து கல் லீரலின் நுண்மடல்களுக்குள், நுண்குழாய் வலைப் பின்னலாக மாறுகிறது. இரத்தம் நடுக் கல்லீரல் சிரைகளுக்குள் சென்று, பின்னர், கல்லீரல் சிரை களுக்குச் சென்று கீழ்ப்பெருஞ்சிரையை அடை கின்றது. வயிற்றுக் குழியின் தனியான உறுப்புகளின் சிரை இரத்தம், பொது இரத்த மண்டலத்திற்குள் செல்வதற்கு முன்பு கல்லீரல் வழியாகச் செல்கிறது என்பது தெளிவு. மேலே குறிப்பிட்டவாறு கல்லீரல் தனது பாது காப்புப் பணிகளையும் வளர்சிதை மாற்றத்தில் அதன் பங்கினையும் இவ்விதமே நிறைவேற்றுகிறது. பெருங்குடலிலிருந்து போர்ட்டல் சிரைக்குள் செல் லும் நச்சுப் பொருள்களின் நச்சுத் தன்மை அகற்றப் படுகின்றது. போர்ட்டல் சிரையால் சிறுகுடலிலிருந்து கொண்டு வரப்பட்ட குளுகோஸ் கிளைக்கோஜனாக மாற்றப்படுகின்றது. சு நரேந்திரன் Human நூலோதி. Chandicharan Chatterjee, Physiology, Vol. 1., Ninth Edition, Medical Allied Agency, Calcutta, 1979; E. Babsky, B. Kho dorov, et. al., Human Physiology, Vol-1., Mir Publi- shers, Moscow, 1977; A. L. Mudaliar and M. K. Krishna Menon, Clinical Obstetrics, Eighth Edition, Orient Longman, Bombay, 1981.