பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 இரத்தச்‌ சேமிப்பகம்‌

586 இரத்தச் சேமிப்பகம் bank) ஆகும். இரத்தம் கொடுப்பவர், பெறுபவர் ஆகியோரின் இரத்தத்தை வகைப்படுத்துதல், இரத்தம் கொடுப்பவர்களின் இரத்த ஹீமோகுளோபின் அளவைக் கணக்கிடல், இரத்தச் சேமிப்பு, இரத்தத்தை உறையாமலும் கெடாமலும் நோய் உருவாகாமலும் பாதுகாத்தல், இரத்தம் பெறுபவர்களின் இரத்தத் திற்குப் பொருத்தமான இரத்தத்தை ஆய்வு மூலம் போன்றவை தேர்ந்தெடுத்துக் கொடுத்தல் நிலையத்தின் பணிகளாகும். இந் இரத்தம் கொடுப்பவர் உடல் நலமிக்கவராக இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே இரத்தம் கொடுக்கவேண்டும். இரத்தம் வழங்குபவர்களின் ஹீமோகுளோபின் பொதுவான அளவில், அதாவது ஆண்களுக்கு 13-18 கி/100 மி.லி இரத்தமும் பெண்களுக்கு 11-16 கி/100 மி.லி இரத்தமும் இருக்கவேண்டும். இவர்களுக்குக் கல்லீரல் அழற்சி நோய், கிரந்தி நோய், எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டிருக்கக் கூடாது. இரத்த ஹீமோகுளோபின் அளவை ஒளிமின் முறைப்படி (photoelectric method) கணக்கிடலாம். இரத்தத்தைப் பொட்டாசியம் சயனைடு, பொட்டா சியம் ஃபெர்ரிசயனைடு அடங்கிய கரைசலோடு சேர்க்கும்போது ஆக்சிஜன் ஏற்றம் ஏற்பட்டு, பல மாற்றங்களுக்குப் பிறகு சயனோ மெத்தமோ குளோ பினாக மாறுகிறது. இத்திரவத்தின் அடர்த்தியை ஒளிசார்கலோரி மீட்டரில் (photocalorimeter) வைக் கப்பட்டிருக்கும் தரமான அயனோ மெத்தமோ குளோபினோடு ஒப்பிட்டுப் பார்த்து ஹீமோகுளோ பின் அளவைக் கணக்கிடலாம். இரத்தத்தை வகைப்படுத்தல் முறையில் கண் ணாடிப் பரப்புமுறை தான் (slide test) தற்போது வழக்கிலுள்ளது. விரலில் ஊசிமூலம் குத்தி ஒரு துளி இரத்தத்தையெடுத்துக் கண்ணாடிப் பரப்பில் வைக்க வேண்டும். இந்த அளவைப்போல் 50 அளவு காண்ட உப்பு நீரால் அதை நீர்த்து இரத்தம் உறையாமல் செய்யவேண்டும். இதிலிருந்து நுண் ணோக்கியினடியிலிருக்கும் கண்ணாடிப் பரப்பில் இரண்டு துளிகளைத் தனித்தனியாக வைக்க வேண்டும். பின்ஒருதுளி 'A' எதிர்செனி சீரத்தைக்(anti 'A' agglutin serum) கண்ணாடியிலிருக்கும் ஒரு துளியிலும், மற்ற துளியில், 'B' எதிர் செனி சீரத்தை யும் (anti 'B' agglutin serum) வைக்க வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு நுண்ணோக்கியின் மூலம் இரத்தச் செல்கள் திரட்சியடைந்துள்ளனவா எனப் பார்க்க வேண்டும். இந்தச் செல்கள் சேர்ந் திருந்தால் சீரத்திற்கும் செல்களுக்குமிடையே தடுப்பு femer (immune reaction) ஏற்பட்டிருக்கிறதென அறியலாம். சிவப்பணு 'A' எதிர் செனி சீரம் 'B' எதிர் A B AB 1 + 1 + செனி சீரம் + + 1 1 மேலேயுள்ள அட்டவணையில் 'O' வகை இரத்தத் தில் திரள்செனி (agglutinogen) ஏதுமில்லாததால் எதிர் செனி சீரங்களின் மீது வினைபுரிவதில்லை. 'A' வகை இரத்தத்தில் 'A' திரள்செனியிருப்பதால் 'A' எதிர்செனி சீரம் திரட்சியடைகிறது. அதுபோல் 'B' வகை இரத்தத்தில் 'B' திரள் செனியிருப்பதால் B எதிர்செனி சீரம் திரட்சியடைகிறது. 'AB வகை யில் A, B திரள்செனிகள் இருப்பதால் A, B எதிர் செனி சீரங்கள் திரட்சியடைகின்றன. இரத்தத்தை எதிர் Rho எதிர்செனி சீரத்தோடு சேர்க்கும்போது திரட்சி ஏற்பட்டால் அது Rh உள்ள இரத்தம் எனவும், திரட்சி இல்லாவிடில் அது Rh இல்லாத இரத்தம் எனவும் கொள்ளலாம். 120 மில்லி நோய்க்கிருமியகற்றப்பட்ட நீரில் 2.5 கிராம் டைசோடியம் சிட்ரேட், 3 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் கலந்த இரத்த உறைவைத் தடுக்கும் பொருள் கொண்ட நோய்க் கிருமியகற்றப்பட்ட புட்டி அல்லது பிளாஸ்டிக் பையில் இரத்தம் சேமிக்கப்படுகிறது. அதன் ரப்பர் அடைப்பானின் மேல் 0.05 விழுக்காடு குளோர்ஹெக்சிடின் 70 விழுக் காடு ஆல்கஹால் தோய்க்கப்பட்ட துடைப்பான் (swab) ஏறக்குறைய 2 நிமிடங்கள் வைக்கப்பட்டி ருக்கும். காற்று வெளியேற்றும் ஊசியை '1' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் செருகவேண்டும். வெளியேற்றும் பகுதியிலுள்ள ஊசியை 'I' எனக் குறிப்பிடப்பட்டுள்ள மற்றப்பகுதி வழியாகக் குப்பி யினுள் செருக வேண்டும். காற்று, வெளியேற்றும் ஊசி, ரப்பர் போன்றவற்றால் அடைபட்டால் ஆபத்தை விளைவிக்கும். குப்பியிலிருக்கும் காற்ற ழுத்தம் சிரையிலிருக்கும் இரத்த அழுத்தத்திற்குச் சமமாகும்வரை இரத்தம் புட்டியினுள் செல்லும். இரத்த அழுத்தமானியிலுள்ள அழுத்தத்தைத் திறந்து விட்டால் காற்று, புட்டியிலிருந்து சிரையி னுள் சென்று காற்று இரத்தநாள அடைப்பானை (air embolism) உருவாக்கும். ஆதலால் இரத்த அழுத்தமானியைத் திறக்குமுன் குழாயைச் சரியாக அடைக்கவேண்டும். இரத்தம் கொடுப்பவர் கையை நீட்டியவாறு படுத்திருப்பார். இரத்த அழுத்த மானியை 40-60 மி.மி பாதரச அளவில் அழுத்தம் வைத்து மேல் கையில் கட்டவேண்டும். நடுக்கைச் திரையிருக்குமிடத்திலுள்ள தோலை 0.5 விழுக்காடு