பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 இரத்தச்சோகை

588 இரத்தச்சோகை சோகை, மாமூலச் இரத்தத்தில் குறைவாகக் காணப்படும். இவற்றுள் இரும்புக்குறை செல்சோகை megaloblastic anaemia), வளப்பமில் இரத்தச்சோகை (aplastic anaemia) இரத்தமழிச் சோகை (hemolytic anaemia) போன்றவை மக்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றன. இரும்புக்குறை சோகை, உணவில் இரும்புச்சத்துக் குறைவாக உட்கொள்வதாலும், குறைவான அளவு உட்கவரப்படுவதாலும், அதிக அளவில் உடம்பி லிருந்து வெளியேற்றப்படுவதாலும் இரும்புக்குறை சோகை ஏற்படுகிறது. இரும்பு பொரஸ் நிலையில் மேல் சிறுகுடலிலிருந்து உட்கவரப்படுகிறது. ஃபைட் டேட், பாஸ்ஃபேட் போன்றவை, இரும்பு உட்கவரப் படுவதைத் தடுக்கின்றன. குடல் நோய்களில், இரும்பு குறைவாக உள்ளுறிஞ்சப்படுகிறது. பெண்களுக்கு மாத விலக்கின்போது அதிகமான இரத்தம் வெளி யேறும் போதும், கருவுற்ற காலத்திலும் இரத்தச் சோகை ஏற்படும். சோர்வு, மூச்சிறைப்பு, நெஞ்சு படபடப்பு, பசி யின்மை, பார்வைக்குறைவு, உறக்கமின்மை, நாக்கு எரிச்சல், நெஞ்சுவலி போன்றவை இந்நோயின் அறி குறிகளாகும். மருத்துவர் பரிசோதிக்கும்போது இதயத்துடிப்பு அதிகரித்தும், தோல் வெளிறியும், நகங்கள் உடையும் தன்மை பெற்றும், காலில் நீர்க் கட்டியும். இதயத்தில் முணுமுணுப்பும் இருக்கும். நோயாளியிடம் கண்டதுண்ணல் (pica) பழக்கமும் இருக்கும். இரத்தத்தை நுண்நோக்கியில் நோக்கும்போது சிறிய, குறைந்த நிறம் கொண்ட இரத்த அணுக்கள் காணப்படும். ஹீமோகுளோபின் அளவு, சராசரிச் சிவப்பணுவின் கன் corpuscular அளவு (mean volume) சராசரிச் சிவப்பணு ஹீமோகுளோபின் போன்றவை குறைவாக இருக்கும். மல ஆய்வு மூலம் இரைப்பையினுள்ளும், குடலின் உள்ளும் இரத்தம் கசிதலைக் கண்டுபிடிக்கலாம். கொக்கிப் புழு இருப் பதையும் கண்டுபிடிக்கலாம். பெர்ரஸ் சல்ஃபேட் 200 மி.கி. வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை வாய்வழியாக இரத்தத்தில் ஹீமோக்குளோபுலின் சமநிலை அடையும் ஆறு மாதங்கள்வரை தொடர்ந்து சாப்பிட வேண்டும். இரும்பு சார்பிட்டால் என்ற மருந்தை நாளொன்றுக்கு 1.5 மி.கி/கிலோ எடைவீதம் ஊசி மூலம் செலுத்த லாம். இரும்பு டெக்ஸ்ட்ரான் என்ற மருந்தைச் சிரைமூலம் செலுத்தலாம். மாமூலச்செல்சோகை. டி. என். ஏ. உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் B,ம், போலேட்டும் குறைந்தால் மாமூலச் செல்சோகை ஏற்படும். வைட்ட மின் B., கீழ்ச் சிறு குடலிலிருந்து இரைப்பை உள்ளகக் காரணியின் உந்துதலால் உட்கவரப் 12 படுகிறது. ஃபோலேட் மேல் சிறுகுடலில் உட்கவரப் படுகிறது. இரைப்பை உள்ளகக் காரணிகுறைவதால் அடி சோனியன் பெர்னீசியஸ் சோகை ஏற்படும். இந்நோயின் அறிகுறிகள் இரும்புக்குறை சோகையின் அறிகுறிகள் போலவே இருக்கும். மேலும் கை, கால் விரல்கள் உணர்ச்சியற்றுமிருக்கும். தண்டுவடத்தில் தாழ்தீவிரக் கூட்டு நசிவும் உளக்கேடும் ஏற்படும். நுண்நோக்கியால் இரத்தத்தை நோக்கும்போது பெரிய செல்கள் (macrocytes) அசம செல்கள் (anisocytes) பலவிதச் செல்கள் (poikilocytes) போன்றவை காணப்படும். வெள்ளையணுக்களும் நுண் வலைச்செல்களும் இரத்தத்தில் வைட்டமின் B அளவும் குறைந்தும் காணப்படும். சில்லிங் ஆய்வு மூலமும் இந்நோயை அறியலாம். 12 ரண்டு சையனோகோபாலமின் என்ற மருந்தை 1000 மைக்கிரோ கிராம் வீதம் முதல் வாரம் முறையும், பின்னர் வாரம் ஒரு முறையும் இரத்தம் பொதுநிலை அடையும் வரை கொடுக்க வேண்டும். உணவில் ஃபோலேட் சத்துக் குறைந்தாலோ மேல் சிறு குடல் நோயினாலோ ஃபோலேட் குறைவு மாமூலச் செல்சோகை ஏற்படலாம். இந்நோயின் அறிகுறிகள் அடிசோனியன் பெர்னீசியச் சோகையைப் போலவே இருக்கும்.5 மி.கி. ஃபோலிக் அமிலம் தினமும் உட்கொள்ளுவதன் மூலம் இதைக் குணப்படுத்தலாம். வாய், வளப்பமில் இரத்தச்சோகை. எலும்புச் சோற்றி லுள்ள தாய்ச்செல் (stemcells) நோயுற்றால் இந் நோய் ஏற்படுகிறது. இச்சோகை ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகமாகக் காணப்படும். எந்த வயதிலும் வரலாம். குறிப்பாக 30 வயதில் அதிகமாகக் காணப்படும். சிவப்பு, வெள்ளையணுக் கள், நுண்தட்டுகள் உற்பத்திக் குறைவினால் நுண்ணு யிர்நோய்களும், இரத்தக் கசிவும் ஏற்படும். தோலி லும், சீதச்சவ்விலிருந்தும். மூக்கிலிருந்தும், தொண்டை, மூளை, சிறுநீரகங்களிலிருந்தும் இரத் தம் கசியலாம். எலும்புச்சோறு தாய்ச்செல்களின் திறன் மருந்துகளாலும், வேதிப்பொருள்களாலும். வைரஸ், நுண்ணுயிர் நோய்களாலும், குறைவதால் அணுக்களின் உற்பத்தி குறைகிறது. இரத்தத்தை நுண்ணோக்கியில் நோக்கும்போது எல்லா இரத்த அணுக்களும் குறைந்து காணப்படும். எலும்புச் சோற்றை ஊசிமூலம் உறிஞ்சியெடுத்துப் பரிசோதிக் கும்போது தாய்ச்செல்கள் நோயுற்றிருப்பது தெரியும். இரத்தத்தைக் நோயாளிக்குப் பொருத்தமான கொடுப்பதன் மூலமும், எலும்பு மஜ்ஜை தாய்ச் செல், இரத்த அணுக்கள் இவற்றை உற்பத்தி செய்ய ஆக்சி மெத்தலோன் என்ற ஊக்கி மருந்தை வாய் மூலமும் நாண்ட்ரலான் டெக்கானேட் என்ற மருந்தை தசை ஊசிவழிச் செலுத்துவது மூலமும், எலும்புச் சோற்றை மாற்றீடு செய்வதன் மூலமும் இந்நோயைக் குணப்படுத்தலாம்.