592 இரத்தத்தூள்
592 இரத்தத்தூள் இரத்தக் குழாய்களின் உள் அழுத்தம், கார அமில நிலை ( LPM), சவ்வூடு பரவல் அழுத்தம், அனிச்சை நரம்பு மண்டலம், ஹார்மோன்கள், நச்சுப் பொருள் கள் ஆகியவை தந்துகிகளின் சவ்வு நிலையை மாற்று கின்றன. நுண்குழாய்களின் சவ்வு வழியே ஊடுருவும் நீரின் வேகமும், செல்லும் விசையும், அதன் வழியே ஊடுருவும் பிளாஸ்மாக்கரைபொருளின் அளவைப் பொறுத்தும், அவை ஊடுருவும் அளவைப் பொறுத் தும் மாறும். இரத்தத்தின் கொள்ளளவு குறையும்போது இரத்தக் குழாய்கள் சுருங்கி, இதயத்தின் துடிப்பு மாறி, இரத்த ஓட்டம் சீராக அமைந்து, மூளை, இதயம், சிறுநீரகங்கள், ஈரல் முதலிய பாகங்களுக்கு அதிகமாகச் செல்கிறது. இரத்தத்தின் கொள்ளளவு அதிகமாகும்பொழுது இரத்தக் குழாய்கள் விரி வடைந்து, இதயத் துடிப்பு மாறி இரத்த ஓட்டம் சீராக அமைகிறது. இரத்தத்தின் கொள்ளளவு வளர்சிதை மாற்றத் தின் தேவைக்குத் தக்கவாறு மாறுகிறது. பிறந்த குழந்தைக்கு இரத்தத்தின் கொள்ளளவு குறைவாக உள்ளது. ஏனென்றால் அதன் வளர்சிதை மாற்றத் தின் வேகம் குறைவாக உள்ளது. உடலின் வளர்ச் சிக்கு ஏற்றவாறு சிவப்பு அணுக்களின் கொள்ளளவு சரிக்கட்டப்படுகிறது. பெண்களுக்கு, கொழுப்புச் சத்தின் பங்கீடு அதிகமாவதாலும், வளர்சிதை மாற்ற வேகத்தின் காரணத்தாலும், இரத்தத்தின் கொள்ளளவு குறைவாக உள்ளது. சுறுசுறுப்பாக உள்ளவர்களுக்கும், உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கும் இரத்தத்தின் கொள்ளளவு வேறுபடுகிறது, உடற்பயிற்சி செய்ப வர்களுக்கு இரத்தத்தின் கொள்ளளவு அதிகம். உயர்ந்த மலை போன்ற இடத்தில் உள்ளவர்களுக்கு இரத்தத்தின் கொள்ளளவு அதிகம்.வளிமண்டலத்தின் அழுத்தம் காரணமாகவும், ஆக்சிஜனின் அழுத்தம் காரணமாகவும் இரத்தத்தின் கொள்ளளவு கிறது. குறைந்த அழுத்தத்தைச்சரிக்கட்டச் சிவப்பு அணுக்களின் கொள்ளளவு விரிவடைகிறது. மாறு சூழ்நிலை வெப்பமாக உள்ளபோது இரத்தக் குழாய்கள் விரிவடைந்து, இரத்தத்தின் அடர்த்தி குறைந்து இரத்தத்தின் கொள்ளளவு விரிவடைகிறது. சூழ்நிலை குளிராக இருக்கும்பொழுது இரத்தக் குழாய்கள் சுருங்கி இரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி இரத்தத்தின் கொள்ளளவு குறைகிறது. இரத்தத்தின் அதிகப் பகுதி சிரைக் குழாய்கள் மண்டலத்தில் (venous system) உள்ளது, 5-7.5%; நுண்குழாய்களின் பகுதியில் உள்ளது. இரத்தத்தின் கொள்ளளவு மாறுதல், இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்திற்கு நேர் விகிதத்தில் மாறுகிறது. 15-20% தமனி மண்டலத்தில் Yarteical system) உள்ளது. புவிஈர்ப்புச் சக்தி காரணமாக இரத்தத்தின் 20% கொள்ளளவு உடலின் அடிப்பகுதியில் தங்கி விடுகிறது. கால்களை உயர்த்தும்போது இதன் அதிக பட்சக் கொள்ளளவு பொது இரத்த ஓட்டத்தில் சேர்கிறது. இக்கொள்ளளவு மாற்றம் இரத்த ஓட் டத்தை மாற்றுகிறது. ரவுன்ட்ரி என்பவர் முதன் முதலில், இரத்தத் தின் கொள்ளளவை, சிவப்பு அணுக்களின் கொள்ள ளவு, பிளாஸ்மாவின் கொள்ளளவு ஆகிய இரண்டும் சேர்ந்த மொத்த இரத்தக் கொள்ளளவு என வகைப் படுத்தினார். (67.517) இரத்தச் சிவப்பணுக்களின் கொள்ளளவு: 1800 மி. லிட்டர். பிளாஸ்மாவின் கொள்ளளவு 2700 மொத்த இரத்தக் கொள்ளளவு 4500 சில நோய்கள் காரணமாக இரத்தத்தின் கொள் ளளவு மாறுபடுகிறது. ஒரு யூனிட் இரத்தத்தின் அளவிலுள்ள இரத்த அணுக்களின் அடர்த்தியை அறிவது ஹிமட்டோக்ரிட் ஆகும். இதனை அறிந்து இரத்தத்தின் கொள்ளளவைக் கணிக்க முடியும். இவான்ஸ் நீலம் டி. 1824ஐக் கொண்டு இரத்த ஓட் டத்திலுள்ள பிளாஸ்மாக் கொள்ளளவைக் கணிக்க முடியும். கதிரியக்க அயோடின் கலந்த மனிதச்சீரம் ஆல்பு மின் மூலம் இரத்தத்தின் கொள்ளளவைக் கணிக்க முடியும். கதிரியக்கமுள்ள பாஸ்ஃபரஸ் பி 32, குரோ மியம் ஜி.51 மூலம் சிவப்பு அணுக்களின் கொள்ள ளவைக் கணிக்கலாம். ஏ.சாம்ஜான் நூலோதி. John R. Brobeck, Best and Tayors Physiological Basis of Medical Practice, Tenth Edi- tion, The Williams and Wilkins Company, Tokyo, 1979. இரத்தத்தூள் இது உலர்த்தித்தூளாக்கப்பட்ட கலவைப் பொருள். இதில் இரத்தத்தின் அனைத்துத் திண்மப் பொருள்கள் அணுக்கள் மற்றும் பிளாஸ்மா ஆகியவை உலர்ந்த நிலையில் உள்ளன. இரத்தத்தூளில் (blood meal) முக்கியமாகப் புரதப் பொருள்கள், அதிலும் குறிப் பாக உடல் வளர்சிதை மாற்றத்திற்குகந்த அமினோ அமிலம், லைசின் ஆகியவை மிகுதியாக உள்ளன.