இரத்த நாள அடைப்பான் 593
இரத்தம் உலர்த்தப்பட்டு இரத்தத் தூளாக்கப்படும் போது லைசின் அமினோ அமிலத்தின் குணங்கள் மாறு பட்டால் அதனால் பலன் முழுமையாகக் கிடைப் பதில்லை. எனவேதான் இரத்தத்தூளில் மிகுந்த புரதச் சத்து இருப்பினும், அது கால்நடைகளின் தீவனத்திற்கு உகந்ததில்லை. ஆனால் தற்போது மிகு விரைவு உலர் முறை (flash drying) மூலம் விரைவாக இரத் தம் உலர்த்தப்பட்டுத் தூளாக்கப்படுவதால் அதில் உள்ள அமினோ அமிலங்களின் தன்மைகள் மாறு படுவதில்லை. இவ்வகையில் உலர்த்தப்பட்ட இரத்தத் தூளினால் கால்நடைகளுக்குப் பயன் உண்டு. கால் நடைகளின் தீவனக் கலவையில் பத்து விழுக்காடு வரையிலும், கோழிகளின் தீவனக் கலவையில் இரண்டு விழுக்காடு வரையிலும் இரத்தத்தூள் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. இரத்த நாள அடைப்பான் அ. முகமது பஷீர் உறை இரத்த நாளச் சுவர்களினுள் அசாதாரண முறையில் உண்டாகும் இரத்தக்கட்டி, இரத்த நாள கட்டி (thrombosis) எனப்படும். இக்கட்டி உருவான பின் இரத்தம் தொடர்ந்து இந்நாளங்களினுள் செல் லும்போது இக்கட்டிகள் இருப்பிடத்திலிருந்து விடு பட்டு, ஓடும் இரத்தத்தினோடு சென்று சிறு தமனி களை அடைக்கிறது. இது இரத்த நாள அடைப்பான் (embolism) எனப்படும். சில சமயம் கொழுப்புப் பொருள்கள், காற்று, கருப்பையினுள் இருக்கும் பனிக்குடநீர் (amniotic fluid), புற்றுநோய் செல்கள் போன்றவையும் இரத்த நாளங்களை அடைக்கலாம். இரத்தநாள உள் திசுக்கள், நோயினாலோ, காயத்தினாலோ ஒழுங்கற்று இருந்தாலும், தமனித் தடிப்புநோய் (arteriosclerosis) கொலஜன் இரத்தக் குழாய் நோய்கள், புரதச்சத்துக் குறைவு போன்ற வற்றிலும் இரத்த நாளத்தினுள் நுண்தட்டுகள், ஃபைபிரின், மற்ற இரத்த உறை காரணிகளும் படிந்து திடப்பொருளாகி, அந்த இரத்த நாளத்தை அடைக்கலாம். இரத்த ஓட்டத்தினூடே இக்கட்டிகள் பல சிறு தமனிகளுக்குச் சென்று அடைபட்டுப் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த இரத்த நாள் அடைப்பான்களை, பொது இரத்த ஓட்ட இரத்தநாள அடைப்பான்கள் நுரையீரல் இரத்த ஓட்ட இரத்தநாள அடைப்பான்கள் என இருவகை யாகப் பிரிக்கலாம். பொது இரத்த ஓட்ட இரத்த நாள அடைப்பான்கள் இதயத்தின் இடப்புறத்தி லிருந்து வருகின்றன. இதயச்சுவரில் இரத்தக்கட்டி {mural thrombosis ) ஈரிதழ் வால்வு நோய்கள், இதய மேலறை நுண்ணாரசைவு {atrial fibrillation) இதய அ.க.4-38 இரத்த நாள அடைப்பான் 593 உள்தசை நுண்ணுயிர் அழற்சி (bacterial endocarditis ) தமனி உள் தடிப்பு நோய் (atherosclerosis) போன்ற இதய நோய்களில் இரத்த நாள் ரத்த நாள அடைப்பான்கள் உருவாகி, பொது இரத்த ஓட்டத்தினுள் செல்லும் போது, தமனிகள் குறுகுமிடத்திலும் பிரியுமிடத் திலும் நுண்தமனிகளிலும் தங்குகின்றன. நோயின் அறிகுறிகள், இத்தமனிகள் இரத்தம் கொடுக்கும் உறுப்புகளைப் பொறுத்து வேறுபடும். இந் இதயத்திலிருந்து பெருந்தமனி, கழுத்துத்தமனி, உள்கழுத்துத் தமனி வழியாக மூளையினுள் செல்லும் போது மூளைத்தமனியில் முக்கியமாக நடுமுளைத் தமனியில் அதிலும் மேற்பிரிவில் அடைப்பு ஏற்படு கிறது. இதனால் மூளையின் இருசமபாகங்களும் சம மாசுப் பாதிக்கப்படுகின்றன. மூளை இரத்த நுண் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் வீழ்தாக்கு (stroke) ஏற்படும். அடைபடும் கிளைத்தமனிகளைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். பொதுவாக இவ்வடைப்பான்கள் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்து நுண்குழாய்களை அடைந்து முடிவில் அழிந்துவிடும். ஆதலால் நோயாளி ஓரிரு நாள்களில் வீழ்தாக்கி லிருந்து சரிநிலைக்கு வருவார். இவ்வடைப்பான் களின் இருப்பிடத்தைக் குறிப்பிடுவது கடினம். இவ் வடைப்பான்கள் வெகுவிரைவில் ஏற்படுவதால் அச்சமயம் பரிவு இரத்த ஓட்டம் ஏற்பட வாய்ப் பில்லை. இதய உள்தசை நுண்ணுயிர் அழற்சியில் சீழ் இரத்தநாள அடைப்பான் (septic embolism) உருவாகி மூளையினுள் செல்லும்போது பல சிறிய இரத்தக் கசிவோடு சேர்ந்த சீழ்க் கட்டிகள் மூளை யினுள் உருவாகின்றன. அத்துடன் மூளையுறை அழற்சிநோயும் (meningitis) ஏற்படலாம். பிற இடங் களில் தோன்றும் புற்றுநோயிலிருந்து புற்றுச்செல் அடைப்பான்கள் மூளையினுள் செல்லும்போது சீழ்க் கட்டியோடு சேர்ந்தும் காணப்படும். மூளையில் வீழ்தாக்கு ஏற்படுத்தும் மற்ற காரணி களைவிட இரத்தநாள அடைப்பான்கள் மிக விரை வில் சில வினாடிகள் முதல் சில நிமிடங்களுக்குள் அறிகுறிகளைக் கொடுக்கின்றன. இரவு பகல் என் றில்லாமல் எந்நேரத்திலும் இந்நோய் ஏற்படுவதால் தூக்கத்தில் வரும்போது வீழ்தாக்கு ஏற்பட்ட விதத்தை அறிவது கடினம். உள் கழுத்துத் தமனி யிலோ நடு மூளைத்தமளியிலோ அடைப்பு ஏற் பட்டால் பக்கவாதம் ஏற்படும். நடுத்தமனியில் ஏதேனும் ஒரு கிளை அடைபட்டால் ஓருறுப்பு வாதம் (monoplegia) பேசத்தோன்றாமை போன் றவை ஏற்படலாம். இவ்வறிகுறிகள் அடைப்பான்கள் சிதறி மறைந்தபின், தானே மறைந்துவிடும். முது கெலும்புத் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் உடல் முழுதும் வாதப்பட்டு வாதப்பட்டு நோயாளி உணர்வின்றிப் படுக்கையிலிருப்பார்.பின் மூளைத்தமனியில்(posterior cerebral artery) அடைப்பு ஏற்பட்டால் ஒருபக்க அல்லது இருபக்கப்பார்வை சரிவரத் தெரிவதில்லை.