பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தநாள உறைகட்டி 595

எடுத்துச் செல்லப்பட்டு உடலின் பல்வேறு இடங் களில் பரவுகின்றன. பிரசவத்தின்போதும், அறுவை மூலம் பிரசவிக்கும்போதும் பனிப்பை நீர் தாயின் சிரையினுள் சென்று நுரையீரல் தமனியை அடைத் துத்திடீரென மயக்கம் ஏற்படுத்தலாம். இந்நோயாளி கள் பெரும்பாலும் இறந்துவிடுவர். ஆ. வாசுகிநாதன் நூலோதி. Cyril A. Keele, Eric Neil, et al. Samson Wrights Applied Physiology, Thirteenth Edition, Oxford University Press, Oxford, 1983; Arthur M. Brown, Donald Stubbs Medical Physiology, A Wiley Medical Publication, New York, 1983. இரத்தநாள உறைகட்டி இரத்தநாளச் சுவர்களினுள் அசாதாரண முறையில் உண்டாகும் இரத்தக்கட்டி இரத்தநாள உறைகட்டி (thrombosis) எனப்படும். இரத்தநாள உள்திசுக்கள் நோயினாலோ, காயத்தினாலோ ஒழுங்கற்றிருந்தா லும், தமனித்தடிப்பு கொலஜன் *இரத்தக்குழாய் நோய்கள் புரதச் சத்துக் குறைவு, இரத்த அடர்த் தீயை அதிகரிக்கும் நோய்களாகிய பல செறிவு இரத் தம் நோய் போன்றவற்றாலும், இரத்த ஓட்ட வேகம் இருந்தாலும் இந்நானத்தினுள் நுண் குறைவாக தட்டுகள் (platelets) ஃபைபிரின் மற்ற இரத்த உறை காரணிகளும் படிந்து திண்மப் பொருளாகி அந்த இரத்த நாளத்தை அடைக்கலாம். சில நேரம் இதிலிருந்து சிறு சிறு பகுதிகள் விடுபட்டு இரத்த ஓட்டத்தினூடே சென்று உடலின் பல்வேறு பகுதி களிலுள்ள தமனிகளை அடைக்கும். இந்நோய் உடம்பின் எப்பகுதியிலுமுள்ள தமனி களிலோ, சிரைகளிலோ ஏற்படலாம். இவ்விடங் களைப் பொறுத்து இந்நோயின் அறிகுறிகள் வேறு படும். சிறுமூளைப் பரப்பிலுள்ள பெசில்லார் தமனிக் கீழ்ப்பகுதியில் தமனி உள் தடிப்பு இருக்குமிடத்திலோ இரு முதுகெலும்புத் தமனியிலோ, ஒரு முதுகெலும் புத் தமனியிலோ இரத்தக் கட்டி ஏற்படலாம். உணர்ச்சி நரம்புகளும், இயக்கு நரம்புகளும் சிறு மூளை நரம்புகளும், மூளைத்தண்டு நரம்புகளும் இதனால் பாதிக்கப்படும். நோயாளி மயக்கத்திலிருப் பார். கைகால்களில் வாதம், போலி முகுளவாதம் pseudo balbarpalsy) ஏற்படும். மூளை நரம்புகளும் (cranial nerves) பாதிக்கப்படும். மேல் சிறுமூளைத் தமனி (superior cerebellar artery) அடைபட்டால் அதே பக்கம் சிறுமூளைத் தள்ளாடல் (ataxia), குமட் டல், வாந்தி, இழுத்துப் பேசுதல், எதிர்ப்பக்க உடம்புப் பகுதியில் வலி, வெப்பம், உணரா அ.க.4-38அ இரத்தநாள உறைகட்டி 595 திருத்தல், காது நன்றாகக் கேட்காமை, கை நடுங்கல், ஹார்னரின் கூட்டியம் போன்றவையும் ஏற்படலாம். முன்சிறுமூளைத் தமனியடைப்பால் அதே பக்கம் காது கேளாமை, தலைச்சுற்றல், வாந்தி, கண்பாவை அதிர்தல், காதினுள் இரைச்சல், சிறுமூளைத் தள்ளாடல், ஹார்னரின் கூட்டியம், வலி, வெப்பம் எதிர்ப்பக்க உறுப்புகளில் உணராதிருத்தல் போன்றவையும் வாதமும் ஏற்படும். உள் கழுத்துத் தமனியில் இரத்த உறைகட்டி ஏற்பட்டால் சில சமயம் அறிகுறிகளின்றிக் காணப்படும். சில சமயம் மூளையில் பெரிய இரத்தக் கசிவு ஏற்பட்டுச் சில நாள்களில் நோயாளி இறக்க நேரிடலாம். மேலும் நடுமூளைத்தமனியிலும், இரு முன் மூளைத் தமனி களிலும் பின் மூளைத்தமனியிலும் இரத்த உறை கட்டி ஏற்படலாம். ஒரு பக்க உள்கழுத்துத் தமனி உறைகட்டியினால் அடைபட்டால் மறுபக்க உள் கழுத்துத் தமனியிலிருந்து பரிவு இரத்த ஓட்டம் தொடங்கி மூளையின் எல்லாப் பகுதிக்கும் இரத்தம் கொடுக்கும். ஒரு பக்க உள்கழுத்துத் தமனி முன்பே அடைபட்டிருந்தால் மறுபக்க உள்கழுத்துத் தமனியை அடைக்கும்போது கால் கை வாதப்பட்டு மயக்கம் ஏற்படும். ஒரு பக்க உள் கழுத்துத் தமனி அடைப்பால் எதிர்ப்பக்கவாதம், உணர்ச்சிக்குறைவு, பேசக் கடினமாயிருத்தல், தலைவலி போன்றவை ஏற்படும். இரத்தச் செறிவு அதிகரித்தால் திசுக்களுக்கடியில் இருக்கும் சிரைகளில் இரத்த உறைவு ஏற்படும். கல்லீரல் வாயிற் சிரையில் (portal vein) இரத்த உறைகட்டி ஏற்பட்டால் கல்லீரல் வாயிற்சிரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரகச் சிரையில் இரத்த உறைகட்டி ஏற்படலாம். கீழ்ப் பெருஞ் சிரையில் (infeior venacava) இரத்த உறைகட்டி உருவானால் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு, கால்சிரை அழற்சி நோய் உருவாகி அதன் மூலம் தமனி அழற்சிநோயை உண்டுபண்ணி இதய வழுவல் அல்லது நீர் வற்றல் (dehydration) வரலாம். சிறு நீரக நோயினாலும் சிறுநீரக இரத்த ஓட்டம் குறைந்து இரத்த உறைகட்டி வரலாம். திடீரெனச் சிறுநீரகச் சிரை அடைப்பு ஏற்படுவதால் கீழ்முதுகு வலி, இரத்த மூத்திரம், புரத மூத்திரம், மூத்திரக் குறைவு, யுரேமியா போன்றவை ஏற்பட்டு நோயாளி இறக்க நேரிடலாம். பாதிக்கப்பட்ட சிறுநீரகம் பெரிதாகலாம். சிரையில் உறைகட்டி மெதுவாக ஏற்பட்டால் பரிவுச் சிரை ஓட்டத்தால் சிறுநீரகப் பணிகள் ஓரளவேனும் நடைபெறும். முடிவில் சிறு நீரகக் கூட்டியத்தை ஏற்படுத்தும். இவ்வுறை கட்டி களைச் சிரைவழித்தொட்டி வரைவு படம் (intra- venous pyelogram) மூலம் கண்டுபிடிக்கலாம். பரிவு வயிற்றுச் சிரைகள், அவற்றில் இரத்தம் மேல் நோக்கிப் பாய்வது, கீழ்வயிற்றிலும். காலிலும் காணப்படும் காரணம் காணமுடியாத இரத்தக்கட்டு