596 இரத்தநாளங்களில் மாறுபட்ட தோற்றுவாய்கள்
596 இரத்தநாளங்களில் மாறுபட்ட தோற்றுவாய்கள் உறை போன்றவற்றின் மூலம் இரத்தநாள் கட்டியைக் கண்டுபிடிக்கலாம். கீழ்ப்பெருஞ்சிரை வரைபடமும் இதற்கு உதவும். ராக்கி மெளண்டன் ஸ்பாட்டட் காய்ச்சலிலும் சிறிய இரத்தக் குழாய்களில் உண்டாகும் மோன்டார் நோயிலும் நெஞ்சு வயிற்றுச் சிரையிலும் இரத்த நாள உறைகட்டி ஏற்படலாம். இரவில் ஹீமோ குளோபின் நீரழிவு நோயில் புறச்சிரைகளிலும், வயிற்றுச்சிரை, கல்லீரல்சிரை, கல்லீரல் புறலாயில் சிரை, மூளைச்சிரைகளிலும் இரத்தநாள உறைகட்டி ஏற்படுவதால் நோயாளி இறக்க நேரிடலாம். கால் வெளிச்சிரைகளிலும் உள்சிரைகளிலும், இணைப்புச் சிரைகளிலும் தீவிர நோய் இருந்தாலும் காயமேற் பட்டாலும் நீண்டகாலம் படுக்கையிலிருந்தாலும் இரத்த நாள் உறைகட்டி ஏற்படலாம். வெளிச் சிரையில் ஏற்பட்டால் கால்கள் வேதனையாகவும், கட்டியாகவும், நீர்கட்டியாகவும், சிவந்தும் காணப் படும். உள்சிரை இரத்தநாளக் கட்டிகளைக் கண்டு பிடிப்பது கடினம். காலில் பரவிய வலி, காலில் நீர் கட்டுதல், பாதத்தை மேல் நோக்கி வைக்கும் போது கெண்டைக்கால் தசைவலி போன்றவை ஏற்படும். இவற்றிலிருந்து இரத்தநாள் அடைப்பான்கள் (emboli) உருவாகி நுரையீரலினுள் சென்று நுரை யீரல் இரத்த நசிவை உண்டு பண்ணுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிரைவரைபடம் மூலம் இதனைக் கண்டுபிடிக்கலாம். சிரை இரத்த உறைகட்டி சிரை களிலுள்ள வால்வுகளை அழிக்கிறது. காலை மேலே உயர்த்தும் போது இரத்தம் இதயத்தை நோக்கியும், இணைப்புச் சிரைகள் மூலம் தசையினுள் புதைந்திருக்கும் சிரைக்குள் செல்வ தாலும் காலிலுள்ள நீர்க்கட்டு கால் வலி, தோலுக் கடியிலுள்ள இரத்தக் கசிவு இரத்த வண்ணப்படிவு. போன்றவை மறைந்து கால்புண் குணமடையத் தொடங்கும். பின் புண்ணுக்கும் சிரையழற்சிக்கு முரிய மருத்துவம் செய்யலாம். இரத்த உறையுள்ள சிரைகளைச் சிரைவரைபடம் மூலம் கண்டுபிடித்து அவற்றைத் திறந்து இரத்த உறை கட்டியை அகற்ற லாம். இரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளை யும் கொடுக்கலாம். ஆ. வாசுகிநாதன் நூலோதி. Krishnankuty, P. K., Text Book of Internal Medicine, First Edition, Orient Longman Ltd., New Delhi., 1977. இரத்தநாளங்களில் மாறுபட்ட தோற்றுவாய்கள் உடலில் பல்வேறு பகுதிகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் பெருஞ்சிரைகளும், இரத்தத்தை இதயத்திலிருந்து பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பெரும் தமனிகளும் இயல்பாக அமையாமை இரத்த நாளமாறுபாடுகள் (vascular abnormalities) என அழைக்கப்படுகின்றன. இது இப்பெரும் இரத்த நாளங்களின் மாறுபட்ட தோற்று வாய்களையும் இதயத்திலிருந்து இயல்பாகத் தோன் றும் நாளங்களின் இடமல்லாத வேறு இடத்தி லிருந்து தொடங்குவதையும் உள்ளடக்கியது. இவற் றுள் முதல்வகை மிகுந்த வல்லது. இரண்டாம் வகை என அழைக்கப்படுகின்றது. துன்பத்தை அளிக்க நாள வளையங்கள் மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை வழியாக வல் மேலறைக்குக் கொண்டுவரப்பட்ட இரத்தம், மூவிதழ் வால்வைக் கடந்து வலக் கீழறையையடைகிறது.பின்னர் புப்புசத் தமனி மூலம் நுரையீரலுக்குச் செலுத்தப்படு கிறது. நுரையீரலால் தூய்மைப்படுத்தப்பட்டதும் ஆக்சிஜன் செறிவுள்ளதுமான தூய இரத்தம் நான்கு புப்புசச்சிரைகளால் இட மேலறைக்குக் கொண்டு வரப்பட்டு, ஈரிதழ் வால்வு வழியாக இடக்கீழறையை யடைந்து, பின்னர் பெருந்தமனி மூலம் பல்வேறு உறுப்புக்களுக்குச் செலுத்தப்படுகிறது. இது இயல் பான இரத்தச் சுழற்சி ஆகும். எப்பொழுதும் இதயத்தின் இடப்புற அறைகளில் வலப்புறத்தை விட இரத்த அழுத்தம் உயர்ந்து காணப்படும். முழுமையான பெருநாள மாறுபட்ட தோற்றுவாய். இதில் பெருந்தமனி வலக்கீழறையிலிருந்தும் புப்புசத் தமனி இடக்கீழறையிலிருந்தும் இயல்பிற்குப் புறம் பாகக் கிளம்புகின்றன. இதயம் கருப்பையில் வடி வமையும் பொழுது ஒரே அடித்தண்டுத் தமனியாகத் தோன்றிப் பின்னர் அதனுள் ஒரு சுருள் தடுப்பு வளர்ந்து, அது இரு பெரும் நாளங்களாகப் பிரிக்கப் படுகின்றது. பெருந்தமனி முன்பும், புப்புசத்தமனி பின்பும் ஒன்றுக்கொன்று இணையாகக் காணப் படுகின்றன. உயிர் வாழ்வதற்கு இருபுற இரத் தமும் கலப்பது மிக அவசியமாகிறது. இப்பெரு நாள் மாறுபட்ட தோற்றுவாயில் பொதுவாக இருபுற இரத்தமும் கலப்பதற்கு உதவியாக இதய மேல்றை இடைத்துளை, இதயக்கீழறை இடை த் துளை, திறந்த தமனி நாளம் போன்ற குறை பாடுகளுடன் காணப்படுகின்றன. பெரும்பாலான குழந்தைகளிடம் இக்கலப்பு தேவையான அளவு இல்லாததால் நீலம் பாய்ச்சல் உண்டாகிறது. கடும் நீலம் பாய்ச்சல் நோய்களில் இது இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. நுரையீரலுக்கு அதிக அழுத் தத்துடன் இரத்தம் செலுத்தப்படுவதால் நோயாளி கள் எளிதில் இதய அயர்விற்கு உள்ளாகிறார்கள். இதயத் தசைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தாலும், தய அயர்வு ஏற் படலாம். பிறக்கும் பொழுது இக்குழந்தைகள் நல்ல எடை யுடன் பிறக்கிறார்கள். பெரும்பாலானவர்களிடம்