598 இரத்தப் பிரிவுகளும் அவற்றின் மரபு வழியும்
598 இரத்தப் பிரிவுகளும் அவற்றின் மரபுவழியும் குறிகள் நுரையீரலுக்குச் செலுத்தும் இரத்தத்தின் அளவைப் பொறுத்துள்ளன. நுரையீரல் அதிக அளவு இரத்தத்தைப் பெறும்பொழுது, நீலம் பாய்ச் சல் அதிகமின்றிக் கீழறை இடைத்துளை போன்று செயல்படுகிறது. நுரையீரல் குறைந்த அளவு இரத் தத்தைப் பெறும் பொழுது, கடுமையான நீலம் பாய்ச்சலுடன் அதிகத்துன்பத்திற்குள்ளாகிறார்கள். உடல் வளர்ச்சியும் முன்னேற்றமும் குன்றி, எளிதில் களைப்புறுகிறார்கள். மூச்சிரைப்பு, இதய அயர்வு போன்ற குறிகள் இளமையிலேயே உண்டாகின்றன. நாளவளையங்கள். பிறவியிலேயே பெருந்தமனி வளைவும் அதன் கிளை நாளங்களும் மூச்சுக்குழல், உணவுக்குழல் இரண்டையும் வளைத்து அழுத்துவது நாளவளையங்கள் எனப்படும். இரட்டைப் பெருந்தமனி வளைவும் வலப்பெருந் தமனி வளைவும் இடப்பந்தகத்தமனியும் மாறுபட்ட இடக் காரையடித்தமனி மாறுபட்ட பெயரில்லாத் தமனி மாறுபட்ட இடப்பொதுக்கழுத்துத் தமனி ஆகிய மேற்கூறிய அமைப்புகளில் பெருமூச்சுக் குழலும் உணவுக் குழலும், இரத்தக் குழாய்களால் சூழப் பட்டு அழுத்தப்படுகின்றன. பெருமூச்சுக் குழல் அழுந்தும் பொழுது, நீலம் பாய்ச்சல், நிமோனியா மூச்சு இளைப்பு போன்றவை தோன்றுகின்றன. வாந்தி, விழுங்குவதில் துன்பம் போன்ற குறிகள் உணவுக்குழல் அழுந்தும்பொழுது உண்டாகின்றன. கடும் அழுத்தம் இருக்கும் குழந்தைகளில் உடல் வளர்ச்சி குன்றுகிறது. தொண்டையில் இழுப்பு ஒலி யும் மூச்சு இளைப்பும் ஏற்படுகின்றன. மூச்சுக்குழல் அழுந்துவதைத் தடுக்கக் கழுத்து, பின்னோக்கி நிமிர் கிறது. உணவு அருந்தும்பொழுது இழுப்பு ஒலியும் இளைப்பும் அதிகரிக்கின்றன. இரட்டைப் பெருந் தமனி உள்ள குழந்தைகளில் மூச்சுக்குழலில் அடைப்பு பாலப் பருவத்திலேயே ஏற்படுகிறது. வலப்புறப் பெருந்தமனியும், இடப்புறப் பந்தகமும், பாலப் பருவத்தில் துன்பம் அளிக்கா விடினும், பூப்புப் பருவத் தில் மூச்சுக்குழல் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையான காரையடித்தமனி மாறுபாடு கள் மூச்சுக்குழல் அழுத்தத்தை ஏற்படுத்துவதில்லை. பெரும்பான்மையானவர்கள் துன்பம் ஏதுமின்றி வாழ்கின்றார்கள். வெகுசிலருக்கு விழுங்குவதில் துன்பம் இருக்கலாம். இதய ஒலிகளும் இதய மின் பதிவும் இயல்பாகவே இருக்கும். பேரியம் எக்ஸ் கதிர் படம் மிகவும் பயனுடையது. பெரும் மூச்சுக் குழலில் லிப்பிடாலைச் செலுத்திப் படம் எடுத்தலும் உதவியளிக்கும். சில வேளைகளில் சாயமேற்றிய சலனப்படத்தின் மூலம் நாளமாறுபாட்டை அறிய லாம். குணங்குறிகள். உடல் வளர்ச்சி குன்றுதல், விழுங்குவதில் துன்பம், மூச்சுக் குழல் அடைப்பினால் நுரையீரல் தொற்றுக்கள் ஏற்படின், தகுந்த அறுவை மருத்துவம் செய்தல் வேண்டும். இரத்த நிறமிகள் காண்க: சுவாச நிறமிகள். ஞா.இராஜராஜேஸ்வரி இரத்தப் பிரிவுகளும் அவற்றின் மரபுவழியும் மனித இரத்தம் சிவப்பு நிறமாக இருந்தாலும் ஆய்வுகள் மூலம் இரத்தத்தில் பல வகைகள் உள்ளன என்பதனைக் கார்ல் லேண்ட்ஸ்ட்டீனர் (Kar) Land- steiner) என்பவர் 1900 ஆம் ஆண்டில் கண்டறிந்து வெளியிட்டார். இரத்தப் பிரிவுகளைப் பற்றிய இவர் தம் ஆய்வுகளுக்காக 1930 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரத்தச் சிவப்பணுவிலுள்ள திரள்செனிகள் agglutinogens) அல்லது எதிர்செனி (antigen) என்ற புரதங்களின் அடிப்படையில் குறைந்தது பதினைந்து வகையான இரத்தப் பிரிவுகள் காணப்பெறுகின்றன. ஆயினும் மனிதர்களில் மூன்று சிறப்பான இரத்த வகைகளைக் காணமுடிகிறது. இவை முறையே ABO, MNS, Rh என அழைக்கப்பெறுகின்றன. ABO வகைப் பிரிவுகள். இவ்வகையில் ஒவ்வொரு வரும் அதன் நான்கு பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்த இரத்தத்தைப் பெற்றிருக்கின்றனர். இந்த நான்கு பிரிவுகள் முறையே A,B, AB, 0 என அழைக்கப்பெறுகின்றன. இரத்தச் சிவப்பணுவில் காணப்படும் திரள்செனி என்ற புரதங்கள் A,B என இருவகைப்படும். இரத்தச் சிவப்பணுவில் திரள்செனி A இருந்தால், அந்த இரத்தம் A பிரிவு இரத்தம் எனவும் இரத்தச் சிவப் பணுவில் திரள்செனி B இருந்தால் B பிரிவு எனவும் A,B ஆகிய இரண்டு வகைத் திரள்செனிகளும் சிவப் பணுக்களில் காணப்பெறின் அது AB பிரிவு எனவும் இவ்விரு திரள்செனிகளும் சிவப்பணுவில் இல்லாம விருப்பின் அது 0 பிரிவு எனவும் அழைக்கப்பெறும். இரத்தப் பிளாஸ்மாவில் திரட்டிகள் (agglutinins) என்ற புரதங்கள் உள்ளன. இவையும் இருவகைப் படும். A பிரிவைச் சேர்ந்தவர்களின் பிளாஸ்மாவில் B திரட்டியும், B பிரிவைச் சேர்ந்தவர்களின் பிளாஸ் மாவில் A திரட்டியும் காணப்பெறும். AB பிரிவைச் சேர்ந்தவர்களின் பிளாஸ்மாவில் திரட்டிகளே