இரத்தப்புரதக் குறைவு 603
குழாயிலுள்ள சீரத்தை எடுத்து நுண்ணோக்கி மூலம் ஒட்டுதல் (agglutination) உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அறை வெப்ப நிலையிலுள்ள குழாயில் ஒட்டுதல் காணப்பட்டால், அதற்கு உப்புநீர் ஆய்வு 28-30°C இல் செய்து காணவேண்டும். உப்புநீர் ஆய்வு 20-25°C இல் செய்யவேண்டும். ஏனென்றால் அவ்வெப்ப நிலையில்தான் இயற்கையில் தோன்றும் எதிர்ப்புப் பொருள்கள் மிக நன்றாக வினைபுரியும். மேற்கூறிய முறைகளில் சிறிய குழாய்களில் ஓட்டுதல் பண்பு இல்லாமல், எதிர் குளோபுலின் எதிர்ப்பு மற்றும் அல்புமின் ஆய்வுகள் எதிர்விளைவு களைத் (negative results) தருமேயானால், அத்தகைய நேரங்களில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தப் படலாம். அவசரமான பொருத்த ஆய்வு செய்தல். அவசர மான முறை ஏறத்தாழ அவசரமற்ற முறையைப் போன்றதே ஆகும். இதில் கால அளவுகள் குறைக் சுப்படுகின்றன. குறைந்தது பதினைந்து நிமிடங்கள் அறை வெப்ப நிலையிலுள்ள உப்புநீர் கலந்த குழாயையும், 37°C இல் உள்ள அல்புமின் குழாயை யும் நிமிடத்திற்கு 1000 சுற்றுகள் வீதம் 1 - 2 நிமிடங்கள் மையவிலக்கியில் (ultracentrifuge) சுற்றவேண்டும். பிறகு 30% அல்புமினை அதனுடன் சேர்த்து, அதை 15 நிமிடங்கள் 37°C இல் வைக்க வேண்டும். அதே நேரத்தில் அறை வெப்பநிலை யிலுள்ள உப்புநீர்க் குழாயை அளவிட வேண்டும். இரத்தத்தில் ஒட்டுதல் பண்பு காணப்படவில்லை யெனில், ABO பொருத்த வேற்றுமை இல்லை என்று உணரப்படும். அதேநேரத்தில் குளோபுலின் எதிர்ப்புச் சோதனையும் அளவிடப்பட்டு, அல்புமின் ஆய்வும் செய்யப்பட்டு நோயாளிக்கு இரத்தம் அனுப்பப்பட வேண்டும். அனைத்து ஆய்வுகளையும் முப்பது நிமிடத்திற்குள் முடித்து நோயாளிக்கு உடனடியாக இரத்தம் செலுத்தலாம். பயன்கள். இத்தகைய பொருத்த ஆய்வுகள் செய்யப்படுவதால் பல வகைகளில் இரத்தம் குறைந்த நோயாளிகளும், அறுவை மருத்துவம் செய்துகொண்ட நோயாளிகளும் காப்பாற்றப்படுகிறார்கள். இரத்தம் உறையாக் கேடு நோய் போன்ற கடுமையான, தொல்லை தரும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், எளிதில் நோயினைக் கண்டறிந்து மருத்துவம் பெறு வதற்கு வழி உண்டாகலாம். கவனிக்க வேண்டியவை. இரத்தத்தை வகைப்படுத் தும்போதும், பொருத்த ஆய்வுகள் செய்யும்போதும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறிய தவறுகள் கூட உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம். மேலும் நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு முன்னரே நோயாளியின் இரத்தமும், கொடுப்பவரின் இரத்தமும் பெறப்பட்டு, அனைத்துச் ஆய்வுகளுக் இரத்தப்புரதக் குறைவு 603 கும் அவற்றை உட்படுத்தி, பின்னர் செலுத்தப்பட் டால் தேவையற்ற குழப்பங்கள் தடுக்கப்படுவதுடன், நோயாளி முழுமையாகக் குணமடையவும் வழி ஏற்படும். -எஸ்.பி.தியாகராஜன் இரத்தப்புரதக் குறைவு இரத்தம் திரவ வடிவிலுள்ள ஒரு திசுவாகும். இதில் பிளாஸ்மா திரவமும், இரத்த அணுக்களும் உள்ளன. பிளாஸ்மாவில் நீர்,சில புரதங்கள், கால்சியம், நொதிகள், நாளமில்லாச் சுரப்புகள் ஆகியவை உள்ளன. இதில் புரதச் சத்து என்பது ஆக்சிஜன் கார்பன் டைஆக்சைடு, ஹைட்ரஜன், நைட்ரஜன். இவற்றால் ஆன கூட்டுப் பொருள். உயிரினங்களுக்கு இது மிகவும் முக்கியம். பால், முட்டை, மாமிசம், பயறு வகைகள் முதலியவற்றிலிருந்து புரதம் கிடைக் கின்றது. புதிய திசுக்களைத் தோற்றுவிக்கவும், அவற்றின் வளர்ச்சியில் சேதம் அடைந்த திசுக்களைப் புதுப் பிக்கவும் புரதம் தேவைப்படுகின்றது. வயது வந்த மனிதனுக்கு நாள் ஒன்றுக்குச் சுமார் எழுபது கிராம் புரதம் தேவை எனக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. புரதப் பற்றாக்குறையினால் இளம்பிள்ளைகள், புரதக் குறை நோயால் பாதிக்கப்படுகினறனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரம் பத்தில் எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். நோய் தீவிரமானால் அவை எதிலும் பிடிப்பு இல்லாமல் மந்தமான குழந்தைகளாகிவிடும். மேலும் பசியின்மை, வயிற்றுப்போக்கு இவற்றால் அவதிப் படலாம். இக் குழந்தைகளின் தலை மயிர் மிக மெல்லியதாகவும், செம்பட்டையாகவும் மாறி விட லாம். கல்லீரல் பெரியதாகிச் சேதம் அடைய வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தோல் கெட்டியாகவும், கறுப் பாகவும். எளிதில் உரிந்து விடுபவையாகவும் காணப் படும். தொற்று வியாதிகளால் எளிதில் பாதிக்கப் படுவர். அல்புமின், குளோபுலின், என்னும் பிரிவுகளால் ஆனது. ஃபைரினோஜன் அல்புமின். புரதச் சத்தின் பெரும் பகுதியை அல்பு மின் வகிக்கின்றது. சுமார் ஒரு லிட்டர் பிளாஸ்மா வில் அறுபது கிராம் புரதச் சத்து உள்ளது. இதில், அல்புமின் அளவு சுமார் நாற்பது கிராம் ஆகும். இந்த அளவு இருபது கிராமிற்குக் குறைந்து விட்டால் உடம்பில் நீர்வீக்கம் உண்டாகின்றது. உடம்பிலுள்ள கால்சியம், பித்த நீர், கொழுப்பு அமிலங்கள், சில சில வகை மருந்துகள் எப்போதும்