604 இரத்தப் புழு
604 இரத்தப் புழு அல்புமின் உடன் சேர்ந்து இரத்தத்தில் செயலற்றவை யாக இருக்கின்றன. அல்புமின் அளவு குறையும் போது இவற்றுடன் சேர்வதற்கு அல்புமின் இல்லாத தால் இவை தம்மிச்சையாகச் செயல்பட ஆரம்பித்துப் பல தீய விளைவுகளை உண்டாக்குகின்றன. குளோபுலின். இவ்வகைப் புரதத்தைக் குளோ புலின்கள் என்றும், எதிர்ப்பு ஆற்றல் குளோபுலின் கள் என்றும் பிரித்திருக்கின்றார்கள். இதில் எதிர்ப்பு ஆற்றல் குளோபுலின்கள் என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் உடம்பின் எதிர்ப்பு ஆற்றலுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. புரதக் குறைவு ஏற்படும்போது இவற்றின் அளவும் குறைய அதன் மூலம் பல நோய்களால் உடம்பு எளிதில் பாதிக்கப்படுகின்றது. ஃபைபிரினோஜன். இந்தப் புரதம், இரத்த உறை விற்கு மிக முக்கியம். புரதக் குறைவு ஏற்படக் காரணங்கள். புரதச் சத்து கல்லீரலில் உற்பத்தியாகின்றது. எனவே, கல்லீரலைப் பாதிக்கும் நோய்கள் அனைத்திலும் புரதப் பற்றாக் குறை ஏற்படுகின்றது. சில சிறுநீரக நோய்களில் புரதச் சத்து, கூடுதலாக வெளியேற்றப்படுவதாலும், சில வியாதிகளில் கூடுதல் புரதச் சத்து தேவைப் படுவதாலும், போதிய அளவு புரதச் சத்து உட் கொள்ளாமல் இருப்பதாலும் புரதப் பற்றாக்குறை கள் ஏற்படுகின்றன. எஸ். விஸ்வநாதன் இரத்தப் புழு, மனித உடலிலுள்ள இரத்தச் சுற்றோட்ட மண்டலச் சிரைகளில் குறிப்பாகக் கல்லீரல் வாயில் சிரைகள் அல்லது இடுப்புப் பகுதிச் சிரைகளில் ஒட்டுண்ணியாக வாழும், இரத்தத்தை மட்டுமே உணவாகக் கொள்ளும். இப்புழு ஒரு பாலின் வகையைச் (dioecious) சேர்ந்ததாக இருந் தாலும் ஆண்புழுவும் பெண்புழுவும் இணைந்தே காணப்படுகின்றன. ஆண்புழுவின் தடித்த உடலின் அடிப்புறத் தோல் மடிப்புற்று வாய்க்கால் போன்ற ஒரு வரிப்பள்ள அமைப்புக் காணப்படுகிறது. பெண் தாங்கு வாய்க்கால் (gynecophoric canal) எனப்படும் இதில் பெண்புழு பொதிந்துள்ளது. ஆணைவிடப் பெண்புழு நீளமாகவும் மெல்லியதாகவும் காணப்படு கிறது. இரத்தப் புழுவின் உடற்பரப்பு சொரசொரப் பானது; சிறு முள்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டது. ஆண், பெண் ஆகிய இரு புழுக்களிலும் உடலின் முன்முனையில் வாயைச் சூழ்ந்துள்ள ஒரு வாய்ப்புற ஒட்டுறுப்பு உள்ளது. உடலின் கீழ்ப்பக்கத் தில் சற்றுப் பெரிய கீழ்ப்பக்க ஒட்டுறுப்பு உள்ளது. இதற்கு அருகில் இனப்பெருக்கப் புழையும் கழிவு நீக்கப் புழையும் காணப்படுகின்றன. செரிமான மண் டலம், வாய், உணவுக் குழல், உணவுக் குழல் சுரப்பி கள் குடல் ஆகிய பகுதிகளைக் கொண்டது. குடல் தொடக்கத்தில் இரண்டாகப் பிரிந்த இரண்டு கிளை களும் உடலின் நடுப்பகுதியில் மீண்டும் இணை கின்றன. ஆண்புழுவில் நான்கு விந்தகங்கள் உள்ளன. இவற்றிலிருந்து செல்லும் விந்து நாளங்கள் விந்துப் பையில் சேர்கின்றன. விந்துப்பை இனப்பெருக்கப் புழை வழியாக வெளியே திறக்கிறது. பெண்புழுவில் ஒரு நீண்ட அண்டச்சுரப்பி உள்ளது. இதில் இருந்து இரத்தப் புழு இரத்தப் புழுக்கள் (blood flukes), சிஸ்ட்டோசோமா என்னும் பொதுவினத்தைச் சேர்ந்தவை. பில்ஹார் சியா என்பது இந்தப் பொதுவினத்தின் பழைய பெயராகும். 1851 இல் சிஸ்டோசோமா ஹிமட்டோ பியத்தைக் கண்டறிந்த தியோடர் பில்ஹார்ஸ் என்னும் ஜெர்மானிய மருத்துவரின் பெயரால் இ பெயர் ஏற்பட்டது. சிஸ்ட்டோசோமாவில் மூன்று சிறப்பினங்கள் உள்ளன. 1. சிறுநீர்ப்பை இரத்தப் புழு! இது சிறுநீர்ப்பை இரத்தப் புழுநோயை உண்டாக்குகிறது. 2. குடல் இரத்தப்புழு. இது குடல் இரத்தப் புழு நோய் (intestinal bilharziasis ) உண்டாகக் காரணமாகிறது. 3. ஜப்பானிய இரத்தப் புழு . இதுவும் குடல் இரத்தப்புழு நோயை உண்டாக்குகிறது. இந்த மூன்று வகை இரத்தப் புழுக் களும் உண்டாக்கும் நோய்கள் பொதுவாக, சிஸ்ட் டோசோமிய நோய் அல்லது பில்ஹார்சியா நோய் எனப்படுகின்றன. இவை உலகில் காணப்படும் இடங்களும் அவற்றின் இடைநிலை ஓம்புயிரிகளும் intermediate host) வேறுபடுகின்றன. 2 படம் 1. சிஸ்ட்டோசோமா ஹிமட்டோபியம் 1. ஆண்புழு 2. பெண்புழு 3. பெண் தாங்கு வாய்க்கால் 4. முன்முனை ஓட்டுறுப்பு. 5. வாய்.