பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தப்‌ புழு 605

கிளம்பும் அண்டக்குழாய், கருப்பையில் திறக்கிறது. இதைச் சுற்றிலும் மெஹலிஸ் சுரப்பிகள் உள்ளன கருவுணவுச் சுரப்பிகளிலிருந்து கிளம்பும் கருவுணவுக் குழாய் அண்டக்குழாயுடன் இணைகிறது. அண்டக் குழாய் கருப்பையுடன் இணைகிறது. கருப்பை பெண் இனப்பெருக்கப்புழை வழியாக வெளிப்புறமாகத் திறந்துள்ளது. கருவுறுதலுக்குப் பின்பு பெண் புழு தனியே பிரிந்து இரத்த நுண்குழாய்களை அடைந்து முட்டை யிடுகிறது.ஷி. ஹிமட்டோபியத்தில் முட்டைகள் இரத்த நுண்குழல்களைத் துளைத்துச் சென்று சிறு நீர்ப்பையை அடைந்து சிறுநீருடன் வெளியேறு கின்றன. முட்டை உறைக்குள் கருமுட்டை பிளவிப் பெருகி மிராசிடிய இளவுயிரியாக மாறும். இது நீரில் முட்டையிலிருந்து வெளிவந்து நீந்திச் செல்லும். 130 மைக்ரான் நீளமும் 60 மைக்ரான் அகலமும் உடைய இந்த இளவுயிரியின் உடற்பரப்பு, குற்றிழை களைக் கொண்டது. இதில் உணவு மண்டலம், நரம்பு மையம் மூல இனச்செல்கள் ஆகியவை உள்ளன. மிராசிடியம் இரத்தப்புழுவின் இடைநிலை ஓம்புயிரியான நத்தையின் உடலைத் துளைத்துச் சென்று அதன் கல்லீரலை அடையும். அங்கு குற்றிழை கள் உதிர்ந்து ஸ்ப்போரோசிஸ்ட்டு (sporo cyst) நிலையை அடையும். சில சமயங்களில் ஸ்ப்போரோ சிஸ்ட்டுகள் மீண்டும் மிராசிடியங்களை உண்டாக்கி அவை மீண்டும் ஸ்ப்போரோசிஸ்ட்டுகளை உண் டாக்குகின்றன. இத்தகைய முதல் தலைமுறை அல்லது இரண்டாம் தலைமுறை ஸ்ப்போரோசிஸ்ட்டுகளி லிருந்து செர்க்கேரியா (cercaria) இளவுயிரிகள் வெளி வருகின்றன. இரத்தப் புழு 605 செர்க்கேரியாவின் உடல், முட்டை வடிவத் தலை யும் பிளவுபட்ட வாலும் உடையது. ஒட்டுறுப்புகள், செரிமான மண்டலம், கழிவு உறுப்புகள், நரம்பு மையம் ஆகியவற்றைக் கொண்டது. செர்க்கேரியா நத்தையின் உடலைவிட்டு வெளிவந்து நீரில் நீந்திச் செல்கிறது. மனிதர்கள் கை, கால்களைக் கழுவும் போதும் குளிக்கும்போதும், நீர் குடிக்கும்போதும் உடலினுள் புகும் செர்க்கேரியா, இரத்த ஓட்டத்தின் வழியாக இதயத்துக்குச் சென்று அங்கிருந்து நுரை யீரலை அடைந்து பின்பு கல்லீரலை அடைகிறது. கல் லீரலில் வளர்ச்சியடைந்து கல்லீரல்சிரைகளில் அல்லது இடுப்புப் பகுதிச் சிரைகளில் இனமுதிர்ச்சியடையும். ஒரு முட்டையிலிருந்து உருவாகும் அனைத்துச் செர்க் கேரியாக்களும் ஆண் பெண் புழுக்களாகவோ, புழுக்களாகவோ அதாவது, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவையாக உருவாகின்றன. ஆண் புழுக்கள் இல்லாவிட்டால் பெண்புழுக்கள் இன முதிர்ச்சி யடைவதில்லை. ஆண்புழு, பெண்புழுவைச் சந்திக் கும்போது அதன் உடலின் பெண் தாங்கு வாய்க் காலில் இணைத்துக்கொள்கிறது. இரத்தப்புழு வளர்புழு மனிதனில் செர்க்கேரியா மனிதனில் செர்க்கேரியா நீரில் கருமுட்டை/ஈர நிலத்தில் அல்லது நீரில் மிராசிடிய இளவுயிரி நீரில் மிராசிடியம் நத்தையில் ஸ்ப்போரோ சிஸ்ட்டு நத்தையில் 1.குடல் 2. 3 படம் 2. செர்க்கேரியா கழிவுநீக்கப் புழை 3. வால் 4. சுடர்செல் செர்க்கேரியா நத்தையில் சேய், ஸ்ப்போரோ சிஸ்ட்டு நத்தையில் இரத்தப்புழுவின் வாழ்க்கைச் சுற்று எகிப்தில் 60%, மக்களுக்கு இரத்தப்புழு நோய் உள்ளது. எகிப்திய முதுமக்கள் தாழிகளில் இந்தப் புழுவின் முட்டைகள் காணப்படுகின்றன. விளை நிலங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்நோய் தொற்றுகிறது. இதன் முட்டைகள் அதிக அளவில் உடல் திசுக்களில் தங்குவதால் இரத்தப் போக்கு, வீக்கம், புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவை தோன்று கின்றன. சிறுநீரகத்தில் கற்களும் இரத்த ஒழுக்கும் ஏற்படுவதால் சிறுநீருடன் இரத்தமும் வெளியேறு