பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம்‌ (மருத்துவம்‌) 609

மில்லாச் சுரப்பிகள் மூலம் உற்பத்தியாகும் ஹார் மோன்கள் நேரடியாக இரத்தத்தில் கலந்து வினை புரிய வேண்டிய திசுக்களைச் சென்றடைகின்றன. உடலில் உண்டாகும் கழிவுப் பொருள்களை இரத்தம் எடுத்துக் கொள்கிறது. பிறகு அவற்றைக் கழிவு நீக்க உறுப்புகளான தோல், சிறுநீரகம், நுரையீரல் களுக்கு அனுப்பி வைக்கிறது. இவ்வாறாக இரத்தம் ஒரு போக்குவரத்துக் கருவி போல் பயன்படுகிறது எனலாம். இவையன்றி இரத்தம் உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திடவும் உடல் நோயுறும் போது எதிர்ப் புச் சக்தியை உருவாக்கவும் உதவுகிறது. உடலில் காயம் ஏற்படும்போது இரத்தம் உறைவதால் இரத் தப்போக்குத் தடுக்கப்படுகிறது. அமைப்பு. இரத்தம், பலதரப்பட்ட பணிகளை எவ்வாறு செய்கிறது என்பதை உணர அதன் அமைப் பைப் பற்றி அறிதல் வேண்டும். இரத்தத்தில் பல பொருள்கள் காணப்படுகின்றன. இரத்தச் செல்கள் 45 விழுக்காடும், பிளாஸ்மா 55 விழுக்காடும் உள் ளன. இரத்தச்செல்களை மூன்று வகைப்படுத்தலாம். அவை சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் நுண் தட்டுகள் ஆகியவையாகும். படம் 1 இல் இவை காட்டப்பட்டுள்ளன. பிளாஸ்மா 91 அல்லது 92 91 அல்லது 92 விழுக்காடு நீரா லானது. மீதமுள்ள 8 அல்லது 9 விழுக்காடு திண்மப்பொருள்கள் கலந்துள்ளன. திண்மப்பொருள் கள் இரு வகைப்படும். அவை: கனிமப்பொருள்கள் (சோடியம் பொட்டாசியம், ஃபாஸ்ஃபேட்டுகள், கால்சியம், மக்னீசியம், தாமிரம் இரும்பு முதலியன). கரிமப் பொருள்கள் (புரதப் பொருள்கள், மாவுப் பொருள்கள், கொழுப்பு, யூரியா, அம்மோனியா முதலியன ). பிளாஸ்மாவில் உள்ள பல்வேறு பொருள் களும் அவற்றின் சராசரி அளவும் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளன. கனிமப்பொருள்கள் 100 மி.லி. பிளாஸ்மாவில் கலந்திருக்கும் அளவு கால்சியம் தாமிரம் 9-11 மி.கி. 8-16 மை.கி. சோடியம் பொட்டாசியம் ஃபாஸ்ஃபேட்டுகள் இரும்பு மக்னீசியம் அ.க.4-39 310-350 மி.மி. 141-24.2 மி.கி, 2.5-4.5 கிமி. 80-165 மை கி. (ஆண்கள்) 65-130 மை.கி.(பெண்கள்) 2-3 மி.கி. கரிமப் பொருள்கள் புரதங்கள் ஆல்புமின் குளோபுலின் ஃபைபிரினோஜன் குளுகோஸ் கொலஸ்டிரால் யூரியா யூரிக் அமிலம் கிரியாட்டினின் பிலிரூபிஸ் இரத்தம் (மருத்துவம்) 609 6.5-7.5 கி 4.0-5.5 1.7-3.0கி 0.2.0.4 கி 80-120 மி.கி. 150-250 மி.கி 16-35 மி.கி. 2-6 மி.கி. 1.2-1,5 மி.கி. 0.2-0.8 மி.கி. இவற்றைத் தவிர அமைலேஸ், அமில ஃபாஸ்ஃ படேஸ், கார ஃபாஸ்ஃபடேஸ் அஸ்பார்டேட் டிரான்ஸ் அமினேஸ் லேக்டேட் டீஹைட்ராஜனேஸ் போன்ற நொதிகளும் காணப்படு இரத்தத்தில் கின்றன. பிளாஸ்மாவில் உள்ள புரதங்கள் பல சிறப் புப் பணிகளைச் செய்கின்றன. ஃபைபிரினோஜன் இரத்தம் உறைவதற்கு உதவுவதுடன் சவ்வூடு அழுத் தம் இரத்த அழுத்தம் பாகுநிலை (viscosity) முதலிய வற்றைச் சீராகக் குறிப்பிட்ட அளவில் வைத்திருக்க வும் உதவுகிறது. காமாகுளோபுலின் என்ற புரதம் உடலில் நோய் எதிர்ப்பொருளாகப் பயன்படுகிறது. பிளாஸ்மா புரதங்கள் புரதச் சத்துக்களின் சேமிப் பாகவும், கார அமிலத் தன்மையினை நிலைப்படுத்த வும் உதவுகின்றன. இப்புரதங்கள் இரும்பு, தாமிரம். ஹார்மோன்கள் போன்ற பல பொருள்களைப் பல் வேறு திசுக்களுக்கு எடுத்துச் செல்கின்றன. சிவப்பணுக்கள். இவை இருபுறம் குழிந்த வட்டத் தட்டு வடிவில் அமைந்துள்ளன. இவற்றில் நியூக்ளி யஸ் இல்லை. இவற்றின் குறுக்களவு சராசரி 7. 2 மைக்கிரான்கள், பருமன் சுமார் 2. 2 மைக்கிரான்கள். சிவப்பணுக்களின் நடுப்பகுதி சுற்றுப்பகுதியை விட மிகவும் கனக்குறைவாக இருப்பதால் அவை இருபுறக் குழி ஆடி போல் தோற்றமளிக்கின்றன. ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில், ஆண்கள் 5 மில்லியன் சிவப்பணுக்களையும், பெண்கள் 4.5 மில்லியன் சிவப்பணுக்களையும் கொண்டிருப்பர். சிவப்பணுக்கள் ஒவ்வொன்றும் ஒரு மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும். இதில் புரதம், கொலஸ்டிரால், பாஸ்ஃபரக் கொழுப்பு முதலிய பல பொருள்கள் உள்ளன. ஹீமோகுளோபின் என்ற நிறமிப் பொருள், ஸ்ட்ரோமா எனப்படும் வலை போன்ற அமைப்பினால் இப்பொருள்களோடு இணைந்துள்ளது. இரத்தம் சிவப்பு நிறத்துடன் இருப்பதற்குக் காரணமாக இருப்பது ஹீமோ குளோபின் ஆகும்.