610 இரத்தம் (மருத்துவம்)
610 இரத்தம் (மருத்துவம்) ஹீமோகுளோபினை நீராற்பகுத்தால் அது குளோபின் என்ற புரதமாகின்றது. ஹீம் என்ற புரதம் அல்லாத கரிமப் பொருளாகவும் பிரியும். ஹீமோ குளோபினின் வேதி அமைப்பு படம் 2 இல் காட்டப் பட்டுள்ளது. CH, றுக் கொள்கிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஹீமோ குளோபினாக மாற்றம் பெறுகிறது. பிறகு இரத்தம் திசுக்களை அடையும் போது (திசுக்களில் ஆக் சிஜன் அழுத்தம் குறைவு) அங்கு ஆக்சிஜன் ஹீமோ குளோபினிலிருந்து பிரிவதால் திசுக்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. CH H.C A HC H C. CH, Oz 1- B CH=CH; நுரையீரல் Hb + 0 9 ஹீமோகுளோபின் ஆக்சிஜன் HbO₁₂ ஆக்சிஹீமோகுளோபின் திசுக்கள் HC C/CH, CH NO H,C \D CH, H CH₂ CH₂ CH₂ COOH COOH ஹீமோகுளோபின் ஹீம் மூலக்கூறுகளில் பைரோல் என்ற கரிமப் பொருளின் நான்கு மூலக்கூறுகள் மையத்தில் உள்ள இரும்பு அணு ஒன்றுடன் இணைந்துள்ளன. இவ் வமைப்பு, குளோபின் என்ற புரதத்தோடு சேர்ந்து ஹீமோகுளோபின் ஆகும். ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூற்றில் 0.34 விழுக்காடு இரும்பணுக்கள் காணப்படுகின்றன. ஹீமோகுளோபினின் மூலக்கூறு எடை 68,000 குளோபின், புரதம் என்ற இருவகை கொண்டுள்ளது. யான பாலி பெப்டைடுகளைக் ஆல்ஃபா பாலிபெப்டைடில் 141 அமினோ அமிலங் களும் பீட்டா பாலி பெப்டைடில் 146 அமினோ அமிலங்களும் உள்ளன. ஹீமோகுளோபினில் 2:2 என்ற விகிதப்படி இவை அமைந்துள்ளன. இவ்வகை வேதி அமைப்பினால் ஹீமோகுளோபின் ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு போன்றவற்றுடன் எளிதில் இணையவும், பிரியவும் முடியும். நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை நுண்குழாய் களுக்கும் திசுக்களுக்கும் கொண்டு செல்வது சிவப் பணுக்களின் குறிப்பிடத்தக்க பணியாகும். ஆக்சிஜ னைக் கொண்டு செல்லும் திறன் ஹீமோகுளோபி னைப் பொறுத்தே அமையும். சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் சென்றடைவதால் அங்கு ஆக்சிஜன் அழுத்தம் மிகும். இதனால் குறைந்த ஆக்சிஜன் அழுத் தம் கொண்ட இரத்தம் எளிதில் ஆக்சிஜனைப் பெற் டை இதே நேரத்தில் திசுக்களில் உள்ள கார்பன் ஆக்சைடு இரத்தத்தில் சேர்வதால் அது மாசடை கிறது. தூய்மையற்ற இரத்தம் பல்வேறு கழிவுப் பொருள்களுடன் மீண்டும் நுரையீரலுக்கு வருகிறது. கார்பன் டை -ஆக்ஸைடு இரத்தத்தில் எளிதில் கரையும் தன்மையுடையது. அதன் பெரும்பகுதி இரத்தத்தில் பைகார்பனேட்டாக உள்ளது. மற்றொரு பகுதி கார்பமினோ சேர்மங்களாகவும் காணப்படும். இவற்றுடன் ஹீமோகுளோபினும் கார்பன் ஆக்சைடை எடுத்துச் செல்லும் பணியில் ஓரளவு உதவும். டை சிவப்பணுக்கள் உருவாதல். சிவப்பணுக்கள் கருவி லிருந்து உருவாகத் தொடங்குகின்றன. கல்லீரல், மண்ணீரல், தைமஸ் முதலியன சிசு வளர்ச்சியடையும் காலத்தில், சிலப்பணுக்கள் படிப்படியாக உருவாக உதவுகின்றன. ஐந்துமாதக் கருக்காலம் முடிந்த பின்னர் எலும்பு மஜ்ஜையில்தான் பெரும்பகுதி சிவப்பணுக்கள் உருவாகின்றன. மேற்கை எலும்பு. தொடை எலும்பு. முதுகெலும்பு, மார்பெலும்பு முதலியன சிவப்பணுக்களை உருவாக்கும் சிறப்புப் பகுதிகளாகும். மண்ணீரல், கல்லீரல் முதலிய வற்றிலும் ஓரளவு சிவப்பணுக்கள் உருவாகும். சிவப்பணுக்கள் உருவாகும் போது மூன்று பெரும் மாற்றங்கள் ஏற்படும். வளர்ச்சியற்ற சிவப்பணுக் களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த சிவப்பணுக்கள் சிறியனவாய் உருவாதல், ஹீமோகுளோபின் உரு வாதல், நியூக்ளியஸ் மறைதல் அவற்றைக் குறிப்பிடலாம். சிவப்பணுக்கள் உற்பத்தியாக ஏழு நாள்கள் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகுமெனக் என எனவே இரத்த தானம் செய்யும்போது இழக்கும் சிவப்பணுக்களை ஒருவார காலத்திற்குள் திரும்பப் பெற்றுவிடலாம். சிவப்பணுக்கள் சிதைதல். சிவப்பணுக்களின் வாழ் நாள் ஏறக்குறைய 120 நாள்களேயாகும். அதற்குப்பின் சிவப்பணுக்கள் தாமாகவே உடைபடுகின்றன. இத னால், ஹீமோகுளோபின் வெளிப்பட்டுப் பல மாற் றங்கள் பெறும். குறிப்பாகப் பிலிவர்டின், பிலிரூபின் போன்ற பொருள்கள் தோன்றும்.