பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/636

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 இரத்தம்‌ அகற்றல்‌

6/2 இரத்தம் அகற்றல் வெள்ளை செய்கின்றன. காமாகுளோபுலின் நோய் எதிர்ப்புப் பொருளாகப் பயன்பட்டு உடலைப் பாதுகாக்கிறது. வெள்ளையணுக்களின் எண்ணிக்கை. ஒரு கண மில்லி மீட்டர் இரத்தத்தில் 4000-11,000 யணுக்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் இவ் வெண்ணிக்கை மாறுபடும். ஒரே நாளில் கூட வேறு படக் கூடும். பெண்கள் கருவுற்றிருக்கும்போது அதிக வெள்ளையணுக்கள் தோன்றும். வெள்ளை யணுக்கள் அதிகமாக இருப்பதை வெள்ளையணு மிகுநிலை என்பர். ஆஸ்த்துமா, காய்ச்சல், தோல் நோய்கள் முதலியவற்றில் இயோஸின் ஏற்பிகள் மிகு நிலை (eosinophilia) ஏற்படும். எலும்பு பஜ்ஜை நோய்கள் கதிரியக்க நோய்கள் முதலியவற்றில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறையும். வெள்ளையணு இரத்தப்புற்று நோயில் முதிர்ச்சி பெறாத வெள்ளையணுக்கள் மிகுந்திருக்கும். இவை தவிர நுண்மணியணுக்கள் மிகுநிலை, நுண்மணி யணுக்கள் இன்மை போன்றவையும் உண்டு. நுண்மணியணுக்கள் எலும்பு மஜ்ஜையிலிருந்து உற்பத்தியாகும். நிண அணுக்கள், ஒற்றை அணுக்கள் முதலியன மண்ணீரல், நிணநீர்ச் சுரப்பிகள், எலும்பு மஜ்ஜை ஆகிய பகுதிகளில் உற்பததியாகின்றன. வெள்ளையணுக்களின் வாழ்நாள் மிகக்குறைவு. நான்கு நாள்களில் பெரும்பகுதி வெள்ளையணுக்கள் அழிந்து விடும். இயோஸின் ஏற்பிகளும், காரச் சாயமேற்பிகளும் 15 நாள்கள் வரை இருக்கும். நுண்தட்டுகள். இவை வட்ட வடிவில் அமைந் திருக்கும். சிவப்பணுக்களைப் போன்றே இவற்றி லும் நியூக்ளியல் இருப்பதில்லை. ஏறக்குறை 2.5 மைக்ரான் அளவில் உள்ள நுண்தட்டுகள் தம் உருவ அளவை மாற்றும் தன்மையுடையவை. இவற்றில் பல நுண் குழல்களும், நுண் இழைகளும், மைட்டோ காண்டிரியா (mito chondria) ஆகியன வும் உள்ளன. நுண் குழல்கள் இவற்றிற்கு வடிவம் தருகின்றன. நுண் இழைகளில் உள்ள திராம்போஸ் தெனின் (thrombosthenin) என்ற பொருள் சுருங்கக் கூடியது. இதன் மூலம், நுண்தட்டுகளின் வடி வத்தை மாற்ற இயலும். நுண்தட்டுகளில் பல நுண்மணிகள் உள்ளன. இவற்றைத் தவிர மூன்றாம் காரணி (factor 3) எனப்படும் ஒரு வகைக் கொழுப்புப் புரதமும் (lipoprotein) பல நொதிகளும், செரட்டோனின் என்னும் பொருளும் உற்பத்தியா கின்றன. நுண்தட்டு வேலைகள். நுண்தட்டு ஒன்றோ டொன்று ஒட்டிக் கொள்ளக் கூடியவை. இத்தன்மை யால், உடலில் உள்ள இரத்தக் குழாய்கள் அறுபடும் போது இரத்தம் வெளியேறாமல் ஒரு தடுப்பான் போல நுண்தட்டு செயல் புரியும். இரத்த வெளி யேற்றத் தடை எனப்படும் இச்செயல் நுண்தட்டு களின் உதவியின்றி நடைபெறுவதில்லை. காண்க. இரத்தம் உறைதல். தே. கருணாகரன் நூலோதி. Penington D. Rush, and Castaldi, P., Clinical Haematology in Medical Practice, CBS Publishers, New Delhi, 1985; Cyril A. Keela Erieneil et. al., Samson Wrights Applied Physiology. Thirteenth Edition, Oxford University Press, Oxford, 1983. இரத்தம் அகற்றல் இது ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவ முறையாகத் தொன்றுதொட்டே உலகெங்கிலும் இருந்து வந்துள் ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குளிர் காலத்தில், இரத்தம் அகற்றல் (venisection) உடல் நலத்துக்கு உகந்ததாகச் சரக சம்ஹிதை என்ற ஆயுர் வேத நூல் (கி.மு. 200) மூலம் தெரியவருகிறது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத உள்மூலத்துக்கு மீண் டும் மீண்டும் இரத்தம் அகற்றல் நன்று என இந் நூல் விளக்குகிறது. சிரைவெட்டு, அட்டை விடல், கோப்பை ஈர்ப்பு ஆகிய மூன்று முறைகள் மூலம் இரத்தம் அகற்றப் பட்டு வந்தது. கீழ்க்காணும் சில நோய் நிலைகளில் இரத்தம் அகற்றல் பயனளிக்கக்கூடும். 1. வலப்பக்க இதயத்திறனிழப்பால் இரத்தம் சிரைகளில் தேங்கி இரத்தத் தேக்கத்தை ஏற்படுத்தல். 2. மூச்சுக்குழல், மூச்சுச்சிறுகுழல் போன்ற நுரையீரல் அழற்சியின் தொடக்கத்தில் காணும் இதயத்தசை அழற்சி. 3. பக்கவாதம் - இரத்த மிகு அழுத்தத்தால் இரத்தக்குழல் வெடித்து இரத்தம் கசிந்து மயக்க முண்டாலதற்குமுன் இரத்தம் அகற்றப்பட்டால் இரத்த அழுத்தம் குறைந்து, கசியும் இரத்தம் அடை பட வகை ஏற்பட்டு மோசமாவது தவிர்க்கப்படலாம். 4. சூல் வலிப்பு (eclampsia) யூரியா நச்சிரத்தம் (uremia) போன்ற, இரத்த மிகு அழுத்தத் தொடர் புள்ள வலிப்பு நோய்களிலும் இரத்தம் அகற்றல் பயன் தரலாம். பயனுடையதாயிருந்தும் தேவை கருதாமல் எல்லா நோய்களுக்கும் பயன்படுத்தியதாலும், அளவிலும், தவணைகளிலும் வரைகடந்து இரத் தத்தை அகற்றியதாலும் இம்முறை, கடும் எதிர்ப் புக்கு உட்பட்டு வழக்கொழியலாயிற்று, கடந்த அரை நூற்றாண்டில் மருத்துவத்தில் ஏற்பட்ட