பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 இரத்தம்‌ ஆக்கும்‌ உறுப்புகள்‌

614 இரத்தம் ஆக்கும் உறுப்புகள் தசை, நாண் முதலியவற்றைத் தெளிவாகக் காண வேண்டி அவற்றிலுள்ள இரத்தத்தை உடலுக்குள் ளேயே வடியச் செய்து அது மீண்டும் பாய்ந்து நிரம் பாமல் இருக்க மேலே இறுகக் கட்டுப்போட்டு இரத்தமில்லா அறுவைப்புலம் செய்து கொண்டு அறுவை தொடங்குவர், இதனை, ஒரு குறித்த உறுப்பினின்று இரத்தமகற்றல் என்று கொள்ளலாம். இதயத் திறப்பு அறுவையிலும், இதயத்தினின்று இரத்தம் நீக்கிய நிலைமையிலும்தான் அறுவை செய் வர். இதற்கும் பொறி உதவி தேவைப்படும். இரத்தம் பேரளவில் இழந்து வெளியேறல். விபத்து களில் பெரிய இரத்தக் குழாய்கள் அறுந்து இரத் தம் விரைவில் வெளியேறுவதால் அதிர்ச்சியும் மரண மும் உண்டாகும். ஆடு,மாடுகளைக் கொல்வதற்கு, கழுத்திலுள்ள பெருஞ்சிரையை அறுத்து இரத் தத்தை வடிப்பது வழக்கு. சில நோய்களில் உள்ளு றுப்புகளினின்று இரத்தவோட்டம் காரணமாக அதிர்ச்சி, மூச்சடைப்பு, மரணம் ஆகியவை நேரும். சிறுகச்சிறுக நீடித்து இரத்தமிழக்கப்படுமானால் சோகை (பாண்டு) விளையும், பெண்களுக்கு அதிகச் சூதகப்போக்கு, மகப்பேற்றில் அதிக இழப்பு ஆகியவை காரணமாகவும், இருபாலார்க்கும், கொக்கிப்புழுத்தொற்று, இரத்த மூலம், பரிணாம சூலைப்புண். ஆஸ்பிரின் உண்ணும் பழக்கம் ஆகியவை சோகையுண்டாவது காரணமாகவும் அதிகம். க.ரா. கிருஷ்ணன் நூலோதி. அகத்தியர் இரண்டாயிரம், மூன்றாம் பாகம் (அட்டை விதி), சரசுவதி மஹால் நூல் நிலைய வெளியீடு, தஞ்சாவூர், 1981; R.B. Scott, Price's Text Book of the Practice of Medicine, Eleventh Edition, ELBS, London, 1973. இரத்தம் ஆக்கும் உறுப்புகள் மனித உடலில் உள்ள இரத்தம் உயிருள்ள நீர்மத் திசுவாகும். இரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை யணுக்கள், நுண்தட்டுகள் (platelets) போன்ற உருப்பொருள்கள் பிளாஸ்மா என்ற நீர்மத்தில் மிதக்கின்றன. இரத்த அணுக்களை உற்பத்தியாக்கும் உறுப்புகள் இரத்தம் ஆக்கும் உறுப்புகள் (heamo- poietic organs) எனப்படுகின்றன. அணுக்கள் யாவும் இரத்தத்தில் முழுமை ஆற்றல் மூலச் செல்கள் (totipotent stem cells) பலவாகு ஆற்றல் செல் களாகப் (pluripotent stem cells) பல்கி, வேறு பட்ட பல நிலைகளைக் கடந்து, முதிர்ந்த பின்னர் இரத்தக் குழாய்களை அடைகின்றன. இவை உடலில் சுழன்று தத்தம் பணியைப் புரிகின்றன. கரு உயிர்த்த ஆறாவது வாரத்திலேயே இரத்தம் ஆக்கும் பணி தொடங்கிவிடுகின்றது. கருவின் யோக் பையில் இடைச்சருமியத் (mesoderm) திசுவில் இரத்தம் ஆக்கும் பணி ஆரம்பமாகிறது. இரத்தச் சிவப்பணுக்கள் இத் திசுவில் தோன்றிப் பத்தாவது வாரத்தில் மறைந்து விடுகின்றன. பிறகு சிசுவின் கல்லீரல், மண்ணீரல் மற்றும் எலும்பு (மஜ்ஜை) முதலிய உறுப்புகள் தம் பணியை மேற்கொள் கின்றன. கரு தோன்றிய ஆறாவது வாரத்தில் கல்லீரலிலும், பன்னிரண்டாவது வாரத்தில் மண்ணீரலிலும், இருபதாவது வாரத்தில் எலும்பு மஜ்ஜையிலும் சிவப்பணுக்கள் காணப்படுகின்றன. குழந்தை பிறக்கும் தருணத்தில் எலும்பின் மஜ்ஜையே இப்பணியை முழுமையாக ஏற்கிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் இரத்தம் ஆக்கும் பணியை மேற்கொள்ளும்பொழுதே நிண அணு களும், துகளணுக்களும், நுண்தட்டுகளும் தோன்ற ஆரம்பிக்கின்றன. சிசுவின் பன்னிரண்டாவது வாரத்தில் இவற்றை இரத்தக் குழாய்களில் காணலாம். கர்ப்பப் பையில் டாகிய வாழ்கிறபொழுது உண் இரத்தச் சிவப்பணுக்கள், பிறந்த பின் இயல்பாகக் காணப்படுகின்ற சிவப்பணுக்களி லிருந்து மாறுபட்டுத் தோன்றுகின்றன. இரத்தச் சிவப்பணுக்களின் விட்டம் அதிகரிப்பதோடு அவற் றின் வாழ்நாளும் குறைந்துவிடுகின்றது. இவற்றில் காணப்படுகின்ற ஹீமோகுளோபின் தன்மையில் மாறுபடுகின்றது. மனிதர்களிடம் பெரும்பகுதி ஹீமோகுளோபின்-A காணப்படுகின்றது. ஹீமோ-A இரண்டு ஆல்ஃபா அமினோ அமிலச் சங்கிலிகளும் இரண்டு பீட்டா அமினோ அமிலச் சங்கிலிகளும் கொண்டது. கருத்தரித்த சில மாதங்களில் முதன் முதலாக நான்கு எப்சிலான் அடங்கிய கோவர்-A என்ற ஹீமோகுளோபின் தோன்று கிறது. பின்னர் இரண்டு ஆல்ஃபா சங்கிலி யும் இரண்டு எப்சிலான் சங்கிலியும் கொண்ட கோவர்-II தோன்றுகிறது. மூன்றாவதாக இரண்டு ஆல்ஃபா மற்றும் இரண்டு காமா கொண்ட ஹீமோ குளோபின்-F காணப்படுகிறது. குழந்தை பிறப்ப தற்கு ஆறு வாரங்களுக்கு முன்புதான் ஹீமோ குளோபின் -A தோன்ற ஆரம்பிக்கிறது. ஹீமோ-A மற்றும் F உற்பத்திக்கு எரித்ரோபாயட்டின் என்ற நொதி தேவையாகிறது. இந்நொதியைக் கல்லீரல், மண்ணீரல், மஜ்ஜை முதலிய திசு வளர்ப்புகளில் சேர்த்தோமானால் ஹீமோகுாளாபின் உண்டா வதைக் காணலாம். சிசுவின் உறுப்புகள் ஹீமோ குளோபின் உற்பத்தியில் பெரியவர்களிடமிருந்து வேறு படுவதைப் போன்று டி. என்.ஏ. உற்பத்தியிலும், கதிரியக்கத்திலும் வேறுபடுகின்றன. யோக் பையை விடச் சிசுவின் கல்லீரல் அதிக அளவில் டி. என்.ஏ யைத் தொகுக்கின்றன. இரண்டாவது மற்றும்