இரத்தம் உறையாக் கேடு 619
முதலிய உறுப்புகளில் இரத்த ஒழுக்கு ஏற்படும் பொழுது திடீரெனத் தோன்றும் அழுத்தம் மரணத்தை ஏற்படுத்தும். தசையினுள் இரத்தம் ஒழுகி ஆறி வரும்பொழுது நார்த்திசு மெலிந்து சுருக்கம் ஏற்படலாம். இதனால் தசையின் இயக்கவீச்சுக் குறையலாம். வயிற்றறையில் இரத்த ஒழுக்கு ஏற் படும்பொழுது தீவிர வயிற்றுக் கோளாறு போன்று தோன்றலாம். ஒழுகிய இரத்தம் சல்வமைப்பிற் கேற்பப் பரவி மற்ற இடங்களுக்கு ஊடுருவுகிறது. சிறு விபத்து கூடக் கபாலத்தினுள் இரத்த ஒழுக்கை ஏற்படுத்துவதால் இவர்கள் அபாயத்திற்குள்ளா கிறார்கள். மூளைத் திசுவில் இரத்த ஒழுக்கு உடைய வர்கள் தகுந்த மருத்துவம் இன்மையால் மரணமடை கிறார்கள்.பொதுவாகச் சிறு கீறல்கள், மேலார்ந்த வெட்டுக் காயங்கள் போன்றவை தொடர்ந்து இரத்தக் கசிலை ஏற்படுத்துவதில்லை. இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த ஏற்படும் முதன்மை விளைவான நுண்தட்டுத் தொகுத்தலும், இரத்த நாளச் சுருங்குதலும் உடனே செயல்படுகின்றன. இரண்டாம் விளைவான இரத்த உறைதல் செயல் படாததால் ஆழமான வெட்டுக்காயமும், சற்றுநேரம் கழித்து ஏற்படும் இரத்த ஒழுக்கும் கட்டுப்படுவ தில்லை பலமணிநேரம் அல்லது நாள்கள் தொடர்ந்து இரத்தம் வீணாவதால் நோயுற்றவர்கள் தீவிர சோகைக்கு ஆளாகிறார்கள். பச்சிளங் குழவிக்குத் கொப்பூழ்க்கொடி விழும்பொழுது இரத்த ஒழுக்கு ஏற்படுவதில்லை. குழந்தைக்குச் சுன்னத்துச் (circumci sion) செய்யும்பொழுது பெருவாரியான இரத்த இழப்பு ஏற்படுகிறது. ஒரு தாயின் முதலிரண்டு ஆண் குழந்தைகள் இந்த அறுவை மருத்துவத்தால் இறந்தால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் யூத மதகுரு மூன்றாவது குழந்தைக்கு விதிவிலக்கு அளித்ததாகச் சான்றுகள் உள்ளன. இரத்தக் கட்டி களில் உள்ள இரத்த அணுக்கள் சிதையும்பொழுது வெளியிலுள்ள நீர்மத்தை அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக உள் ஈர்ப்பதால் படிப்படியாகப் பெரிய நீர் நிறைந்த பை உண்டாகிறது. இது ஹிமோஃ பிலியா போலிப்பை (pseudocyst) எனப்படுகிறது. ள இந்நோயின் கடுமை இரத்தத்தில் காணப்படும் காரணி VIII இன் அளவைக் கொண்டு மூன்று வித மாகப் பிரிக்கப்படுகிறது. மிகக்கடுமையான இரத்த ஒழுக்கில் ஒரு மில்லி லிட்டரில் 2 யூனிட்டுகளுக்குக் கீழ் காரணியின் அளவு குறைந்தால் இவர்களுக்குக் கடுமையான மூட்டுக்குழி இரத்த ஒழுக்கு ஏற்பட்டு, முடிவில் மூட்டுகள் ஊனமுற்றுவிடுகின்றன. இரண்டி லிருந்து ஐந்து யூனிட்டு இருந்தால் சுமாரான இரத்த ஓழுக்கு ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படும். இதில் மூட்டுகள் அதிகம் ஊனமுறுவதில்லை. 5-25 யூனிட்டு இருந்தால் பெரும்பாலான நேரங்களில் இவர்கள் துன்பம் எதுவுமின்றிக் காணப்படு ன்றனர். அறுவை மருத்துவம் செய்யும்பொழுது இரத்தம் உறையாக் கேடு 619 அல்லது பெரிய காயங்கள் ஏற்படும் பொழுது இரத்த ஒழுக்கு ஏற்படுகின்றது. பல் பிடுங்குவது போன்ற சிறு அறுவை மருத்துவத்திற்குப் பிறகும், தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகும் இரத்த ஒழுக்கு இருப்பின் மரபியல் நோய் இருப்பது திண்ணம். நோயை சில உறுதி செய்வதற்குச் ஆய்வுகள் தேவையாகின்றன. இரத்தம் உறைவு நேரம் கடும் நோய்களில்தான் உயர்கிறது. இது மிதமான நோய்களில் பயன்படுவதில்லை. காரணி VIII-ம், IX-ம் முதல் படி உறைவில் பங்கேற்பதால் அதற்குரிய வேண்டும். ஆய்வுகளைச் செய்தல் பகுதி திராம்போபிளாஸ்ட்டின் நேரம் புரோதிராம் பின் நகரும் நேரம், திராம்போபிளாஸ்ட்டின் உற்பத்தியாகும் நேரம் ஆகிய மூன்று ஆய்வுகளும் பொதுவாகச் செய்யப்படுகின்றன. இவற்றுள் பகுதி திராம்போபிளாஸ்ட்டின் நேரம் எளிதில் செய்யக் கூடியது. திராம்போபிளாஸ்ட்டின் உற்பத்தியாகும் நேரம் மிகவும் துல்லியமானது. இல் வாய்வு களின் முடிவுகள் அசாதாரணமாக இருந்தால் காரணி XII, XI, IX, VIII-களில் ஏதாவது ஒன்று குறைந்து காணப்படுகிறது என்று பொருள். இதில் எந்தக் காரணி குறைகிறது என்று அறிதல்,மருத்துவம் அளிப்பதற்குத் தேவையாகிறது. ஏற்கனவே தெரிந்த ஹீமோஃபிலியா அல்லது நோயாளிகளின் பிளாஸ் மாவைக் கொடுப்பதால் முதற்படி ஆய்வுகளைச் சரி செய்ய முடியுமா என்று அறியலாம். சில சிறப்பு மையங்களில் காரணி VIII, IX இன் அளவை நேரடி யாக அளவிடுகிறார்கள். தற்சமயம் உடனடி ஆய்வுக் கிடைப்பதால் குப்பிகள் (kits) பல இடங்களில் இவ்வாய்வு வருங்காலத்தில் எளிதாக அமையும். இந் நோயாளியின் மருத்துவத்தில் சிறப்புக் கூறு குறைவாகக் காணப்படும் காரணிகளைத் திரும்ப அளிப்பதாகும். இரத்தம் செலுத்தும் முறை, மருத்து வத்தில் தோன்றிய பிறகே பலர் மரணத்திலிருந்து தப்ப முடிந்தது. ஆரம்பத்தில் முழு இரத்தத்தையும் செலுத்தி வந்தார்கள். ஆனால் தற்சமயம் இரத் தத்தைச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், நுண்தட்டுகள், பிளாஸ்மா எனப் பிரித்துத் தேவை யானவற்றை மட்டும் அளித்து வருகிறார்கள். பிளாஸ்மாவில் உள்ள காரணிகளைத் தனித்தனியா கப் பிரித்து, குளிரூட்டித் துகள்களாக்கிப் பைகளில் விற்பனை செய்கின்றனர். இவற்றுள் கிரையோபிரி சிபிடேட், லைபோப்பிலாஸ்ட் துகள்கள் இருவகைப்பட்டவை கிடைக்கின்றன. நோயாளி தானாகவே தனக்குள் செலுத்திக்கொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட துகள்களும் கிடைக்கின் றன. காரணி VIII அளவை இரத்தத்தில் 25 விழுக் காடு உயர்த்தினால் இரத்த ஒழுக்கை நிறுத்திவிட அறுவை மருத்துவம் செய்யும் நேரங்களில் தொடர்ந்து விழுக்காட்டிற்குக் குறையாமல் காரணி இருத்தல் வேண்டும். கிறிஸ்துமஸ்நோய்க்கு லாம். 30 என