பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 இரத்தம்‌ ஏற்றல்‌ (கால்நடை)

620 இரத்தம் ஏற்றல் (கால்நடை) காரணி IX இன் அடர் துகள்கள் அல்லது குளிரில் உறைய வைத்த புதிய பிளாஸ்மாவை அளிக்கலாம். கிரையோபிரிசிபிடேம் பயன்படுவ இவர்களுக்கு, தில்லை. சிலருக்கு மீண்டும் மீண்டும் இப்பொருள் களைக் கொடுக்கும்பொழுது அதற்கெதிரான விளைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இவர்களுக்குக் காளை போன்ற விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட அடர் காரணிகளை அளிக்கவேண்டும். இரத்த இழப் பினால் சோகை ஏற்பட்டால் இரும்புச்சத்து மாத் திரைகளும் சத்துணவும் அளித்தல் வேண்டும். மேற் பரப்பில் ஏற்படும் சிறு காயங்களை அழுத்திப் பிடித் துத் திராம்பின் நீர்மத்தில் தோய்த்த சல்லாத்துணி கொண்டு கட்டுதல் வேண்டும். காயத்திற்குத் தையல் போட வேண்டும் என்றால் கிரையோபிரிசிபிடேம் கொடுத்த பிறகே செய்ய வேண்டும். காயம் ஏற் பட்ட இடத்தை அசையாமல் வைத்து அழுத்திக் கட்டி, மிதமான தூக்க மருந்தை அளிக்க வேண்டும். இதில் இரத்த ஒழுக்கு குறையவில்லை எனில் தேவை யான காரணிகளைச் சிரை மூலம்அளிக்க வேண்டும். நாக்கு, தொண்டை, கழுத்து, மூளை ஆகிய களில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டால் உடனடி மருத்துவம் செய்ய வேண்டும். மூட்டுக் குழியில் இரத்த ஒழுக்க ஏற்படுகிறது என்ற ஐயம் எழுந்த உடனே அழுத்தமாகக் கட்டி அடர்காரணித் துகளை அளித்தல் வேண்டும். இரத்தம் உறைவது இயல்பான உடன் குழியில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி வலியைக் குறைக் கலாம். பெரிய அறுவை மருத்துவம் தேவையெனில், மிதமான குறைபாட்டில் மூன்று நாள்களும், கடும் குறைபாட்டில் ஏழு நாள்களும், தொடர்ந்து 40 விழுக் காட்டிற்கு மேல் காரணி இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்நோயாளிகளுக்குத் தசை ஊசி போடுவதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். குழந்தைப் பருவத்தில் ஊமைக் காயங்கள் ஏற்படா மல் கண்காணித்தல் வேண்டும். உடல் உழைப்பு அதிகம் தேவையற்ற,விபத்துகளுக்கு வாய்ப்பில்லாத தொழில்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். டங் ஞா.இராஜராஜேஸ்வரி நூலோதி. Maxwell Wintrobe, Clinical Haenea- tology, Seventh Edition, 1976. இரத்தம் ஏற்றல் (கால்நடை) ஓர் இனத்தைச் சேர்ந்த விலங்கிற்கு இரத்தம் தேவைப் படும்போது அதே இனத்தைச் சேர்ந்த விலங்கிட பெற்றுச் மிருந்து இரத்தத்தைப் செலுத்துதல் இரத்தம் ஏற்றல் ஆகும். கடுமையான இரத்த இழப்பு, தீக்காயங்களால் பிளாஸ்மா இழப்பு. இரத்தச் சோகைநோய், அறுவை மருத்துவம், நச்சு இரத்தம் ஏற்படுதல், இரத்த உறைகாரணிகள், நுண் தட்டு கள் முதலியன குறைதல் ஆகியவற்றிலும், எதிர்ப்பு உயிரணுக்கள் கொடுப்பதிலும், தன்தடுப்பு இரத்த மழிச் சோகையிலும் இரத்தம் ஏற்றல் இன்றியமை யாததாகும். நாய்களின் இரத்தத்தில் இரத்த அணுக்களின் கன அளவு 15 விழுக்காடு அல்லது அதற்கும் குறை வாகும்போதும் ஹீமோகுளோபின் 5 கிராம் கீழே குறையும் போதும் இரத்த ஏற்றம் தேவை எனக் கொள்ளலாம். கடுமையான இரத்த இழப்பின் போது இரத்த அணுக்கள் பல மணி நேரம் குறை யாமலிருப்பதால் அந்நேரத்தில் இதன் அளவைக் கொண்டு இரத்தத்தின் தேவையை அறிய முடியாது. மிகக் கடுமையான இரத்த இழப்பில் இரத்த அணுக் களின் கன் அளவு 25 விழுக்காட்டிற்குக் குறையும் போதும், நாள்பட்ட இரத்தச்சோகையில் அதன் அளவு 15 விழுக்காட்டிற்குக் குறையும் போதும் இரத்தம் ஏற்றல் தேவையென உணரலாம். ஒவ்வாமையும். இரத்த வகைகளும் தற்சமயம் எட்டு வகையான நாய் இனச் சிவப்பணு எதிர் செனிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் நாய் இனச் சிவப்பணு எதிர்செனி - 1,2, {CEA1, CEA2) மிகவும் சிறப்பு வாய்ந்தன. ஏறத்தாழ 60 விழுக்காடு நாய்கள், நாய் இனச்சிவப்பணு எதிர் செனி - 1 ஐக் கொண்டவையாகவுள்ளன. முன்பே இரத்தம் ஏற்றப் பெற்ற நாய்களுக்கு மீண்டும் இரத்தம் ஏற்றும் போது 2 நாய் இனச்சிவப்பணு எதிர்செனி - 1, 2 ஆகியவற்றால் எதிர்ப்பொருள்கள் ஏற்பட்டுக் கடுமையான இரத்தமழிவு உண்டாகும். இதற்குக் காரணம் எதிர்செனி ஒன்றிற்கும் இரண்டிற்கும் எதிர்ப்பொருள்கள் உற்பத்தியாதலே ஆகும். இயற்கையாக நாய்களின் இரத்தத்தில் நாய் இனச் சிவப்பணு எதிர் செனிகளுக்கு எதிராக எதிர்ப்புப் பொருள்கள் இல்லை. இதற்கு மேலாக, பெரும்பாலான நாய்களின் இரத்தத்தில் காணப் படும், மற்றொரு நாய் இனச் சிவப்பணு எதிர்செனி -1 ஐக் கருத்தில் நிறுத்த வேண்டும். ஆகவே இரத்தம் பெறும்போது நாயினத்தில் 1, 2, 7 என்று மூன்று சிவப்பணு எதிர்செனிகள் இல்லாத நாயிடமிருந்து பெறுவது நல்லதாகும். இவைதவிர, ஏனைய நாய் இனச் சிலப்பணு எதிர்செனிகள் இருந்தாலும் அவை நாய்களை அவ் வளவாகப் பாதிப்பதில்லை. நாய்களிடம் இயற்கை யாகவே இந்த ஒரு சில எதிர்செனிகளுக்கு எதிர்ப்பு பொருள்கள் இருக்கத்தான் செய்கின்றன. இரத்த மழிவு இரத்தம் செலுத்தும் போது ஏற்படும் ஒவ்வாமை ஆகியவை பொருத்தமற்ற இரத்த ஏற்றத் தால் ஏற்படுபவையே. நாய்களை இரத்த வகைப்படுத்தலின் மூலம் ஒவ்வாமையை அறியமுடியாது. ஆதலால், இரத்தப்