பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/648

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 இரத்தம்‌ ஏற்றல்‌ (கால்நடை)

624 இரத்தம் ஏற்றல் (மருத்துவம்) னால் அதைப் பெறும் நாயின் இரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரித்தல், பொட்டாசியம் அதிகமாதல், சிட்ரேட் நச்சுத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். நாய்களின் இரத்தத்தைச் சேமிக்கும்போது ஏற்படும் பொட்டாசிய உயர்வு, மனித இரத்தத்தில் காணும் உயர்வைவிடக் குறைவாகவேயுள்ளது. சிட்ரேட் நச் சுத்தன்மை ஏற்பட்டால் அதன் விளைவைத் தடுப் பதற்கு, ஒரு லிட்டர் இரத்தத்திற்கு 10 மிலி, 10 ஊசி குளுக்கோனேட்டை விழுக்காடு கால்சியம் மூலம் சிரையினுள் செலுத்தவேண்டும். தேவைக்கு அதிகமாக இரத்தம் செலுத்துதல். உடம்பில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும் போது இதயம் அதற்கு ஒத்துழைக்காமல் போக லாம். நுரையீரலில் நீர்கட்டுதல் உண்டாகும். இது பொதுவாக இதய நோய் அல்லது நாள்பட்ட இரத் தச் சோகையால், இதயத் தசை பாதிக்கப்பட்டிருக் கும் வயதான நாய்களிடம் காணப்படும். ஆனால், நோயற்ற நாய்கள், தேவைப்படும் இரத்த ஏற்றத் திற்கு மேலாக 20 விழுக்காடு அதிகமாகச் செலுத்தப் பட்டாலும், அதைத் தாங்கிக்கொள்ளும். ஆதலால் ஐயமுள்ள விலங்குகளில், இதைத் தவிர்ப்பதற்கு ஒரு கிலோ உடலின் எடைக்கு, ஒரு மணி நேரத்திற்கு, ஒரு மில்லி இரத்தம் செலுத்துதல் நலம். இதற்கும் மேலாக, நாய்களிடம் பாதிப்புக் காணப்பட்டால், லேசாக உடம்பைச் சூடேற்றுவதன் மூலம், இரத்தத் தைப் பரவச் செய்யலாம். அத்துடன் டிஜிட்டாக் சின் போன்ற மருந்துகளையும் பயன்படுத்தலாம். பொதுவாக, சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இரத்தத்திலுள்ள நுண் தட்டுகள், ஃபைப்ரின், ஏனைய நுண்மக்கூறுகள் நுரையீரல் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, நுரையீரல் ஏற் கனவே பழுதடைந்திருந்தால், அது நிலைமையை மிகவும் மோசமாக்கும். ஆகவே, இதைத் தடுப் பதற்கு அண்மையில் பெறப்பட்ட இரத்தத்தைத் தமனி மூலம் செலுத்துதல் வேண்டும். இரத்தக் குழாயில் காற்றடைப்பு. பொதுவாக, பிளாஸ்டிக் குடுவைகளைப் பயன்படுத்தும்போது, இது நிகழ்வதில்லை. ஆனால், கண்ணாடிக் குடுவை களைப் பயன்படுத்தும்போது, அதிலுள்ள காற்று புகு அமைப்பு மூலம் இரத்தக் குழாய்களில் காற்றடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்த உறை பாதிப்பு உள்ள விலங்குகளுக்கு இரத்த மேற்றம். மிதமானது முதல் மிதமிஞ்சிய இரத்த உறை பாதிப்புகளுக்கு இரத்த உறைகாரணிகள், நுண் தட்டுகள் ஆகியவற்றின் ஏற்றமே போதுமானது. இவை விரைவில் அழிந்து விடுவதால் இரத்த உறை காரணிகளின் கூறுகள் உள்ள முழு இரத்தமோ, பிளாஸ்மாவோ பெற்ற மாத்திரத்திலேயே உடனடி யாகத் தேவைப்படும் விலங்கிற்குச் செலுத்தப்படல் வேண்டும் அல்லது உடனே 40° - 70°C இல் உறையச் செய்ய வேண்டும். அனைத்து வகையான இரத்தப் போக்கிற்கும், பிளாஸ்மாவை ஒரு நிமிடத்திற்கு நான்கிலிருந்து ஆறு மில்லி என்ற அளவில் ஒரு கிலோ உடம்பின் எடைக்கு ஆறிலிருந்து பத்து மில்லி என்ற நிலையான அளவாகச்செலுத்துதல் நலம். மிக அதிக மான இரத்தப்போக்கு நோய்களுக்கு இந்த அளவில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை, இரண்டி லிருந்து ஐந்து மணி நேரஇடை வெளியில் கொடுக்க வேண்டும் அல்லது இரத்தப்போக்கு நோய் களுக்கு இந்த அளவில் ஒருநாளைக்கு இரண்டு மூன்று தடவை, இரண்டிலிருந்து ஐந்து மணி நேர இடை வெளியில் கொடுக்க வேண்டும் அல்லது இரத்தப்போக்கு நிற்கும் வரை கொடுக்க வேண்டும். எத்தனை தடவை எவ்வளவு நேரம் இந்த அளவு கொடுக்க வேண்டுமென்பது எந்த அளவுக்கு இரத்தம் உறைதல் பாதிப்பு உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். இரத்தச் சிவப்பணுக்கள் ஏற்றம். நாட்பட்ட இரத்தச் சோகை கொண்ட விலங்குகளுக்குக் குவி யல் சிவப்பணுக்கள் ஏற்றம் செய்வது பொருத்தமாகும். இரத்தம் ஏற்றல் (மருத்துவம்) மிகப் பொ.அ.பாலு அடிபட்ட காயங்கள், விபத்துகள், தீப்புண்கள், சோகை நோய் போன்றவற்றால் ஏற்பட்ட இரத்த இழப்பை ஈடு செய்ய இரத்தம் கொடுக்கப்படுவது இரத்தம் ஏற்றல் எனப்படுகிறது. இரத்தம் ஏற்றல் என்பது இரத்த தானத்திலிருந்து மாறுபட்டது. நோயற்ற ஒருவர், தேவைப்பட்ட மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காக, தம் இரத்தத்தை வழங்குவது இரத்த தானம் எனப்படும். ஆரம்ப காலத்தில், இரத்தம் ஏற்றுவதில் சிக் கல்கள் இருந்தன. அகற்றப்பட்ட இரத்தம் உடனடி யாக உறைந்து விடும். அப்படி உறையாமலிருக்க 1914 இல் சோடியம் சிட்ரேட் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, இரத்தம் ஏற்றல் எளி தாயிற்று. இதைத் தொடர்ந்து, இரத்தத்தைச் சேமித்து வைக்க இரத்தச் சேமிப்பகங்கள் உலகெங் கும் தோன்றின. 1667 இரத்தம் ஏற்றல் பற்றிய வரலாறு மிகவும் பழமையானது. இல் மான்ட்பெலியர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஜீன்டெனிஸ் என்பவர், 15 வயதுடைய பையன் ஒருவனுக்கு 9 அவுன்ஸ் இரத்தத்தை ஏற்றினார். அது ஆட்டுக்குட்டியின் இரத்தம். முதன் முத ஓர்