இரத்தம் ஏற்றல் (மருத்துவம்) 625
முதலாக இரத்தச் சேமிப்பகம் மாஸ்கோவில் 1931இல் யூடின் என்பவரால் துவங்கப்பட்டது. இரத்த உறைதல் தவிர மற்ற சிக்கல்களும் இருந் தன. 1901 இல் லேண்ட்ஸ்டீனர் என்பவர் இரத்தத் தின் பல பிரிவுகளைக் கண்டறிந்தார். இந்தக் கண்டு பிடிப்பு,எதிர்செனி (antigen) எதிர்ப்பொருள் (an- tibody) என்ற பொருள்களின் எதிர்வினையைப் பொறுத்து இருந்தது. ஒரு குறிப்பிட்டவரின் இரத் தத்தின் சிவப்பு அணுக்கள், வேறு சிலரின் சீரத்தை உறையச் செய்தது. இதன் அடிப்படையில் ஆராய்ச்சி செய்தபோது, உலகிலுள்ள அனைவரின் இரத்தமும் 4 பிரிவுகளில் அடங்கியது. பிரிவு 'A' 'B' 'AB' 'O'. தற்கால ஆராய்ச்சியால் 300 -க்கும் மேற்பட்ட பிரிவு கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், தலையாய பிரிவுகள் நான்கே ஆகும். இரத்தம் பெற இருப்பவரின் இரத்தப் பிரிவும், அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய இரத்தத்தின் பிரிவும் ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது இரத்த தானம் செய்பவரின் பிரிவும், இரத்தம் பெறுபவரின் பிரிவும் ஒன்றாக இருக்க வேண்டும். இது பொருத்தமாக இல்லாத போது, இரத்தம் ஏற்றப்படின் எதிர் விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியலாம். இதனால் தான் இரத்தம் ஏற்றப்படுவதற்கு முன்னர் ஒரு முறைக்கு இரண்டு முறையாக ஆய்வு செய்து, இரத்தத்தின் பிரிவு சரியாக இருக்கிறதா என நிச் சயித்த பின்னரே, இரத்தம் ஏற்றப்பட வேண்டும். மேலும், Rh RhA,, A2ஆகிய துணைப்பிரிவுகளை யும் ஆய்வு செய்து பார்த்தல் அவசியமாகும். அதிர்ச்சி, விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள், தீப்புண்கள் ஆகியவற்றால் ஏற்படும் இரத்த இழப்பை, இரத்தம் ஏற்றல் மூலம் ஈடு செய்ய முடி வதால் லட்சக்கணக்கான உயிர்களைக்காப்பாற்ற முடிகிறது. ஒருவன் இழந்த இரத்தத்தை அளவிடுவது சிரமம். எனினும் அவனது பொதுவான உடல் நிலையை ஆராய்ந்து, ஓரளவு கணக்கிடலாம். அவனது நாடித்துடிப்பு, உடல் வெப்பம், இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கொண்டு, இரத்த இழப் பின் அளவை மதிப்பிடலாம். விபத்துகளால் ஏற் பட்ட காயங்களில் இரத்த இழப்பு ஏற்படும்போதும் இரத்தப் புற்றுநோய் மற்றும் சோகை ஆகியவற்றால் இரத்தம் கெட்டுப்போகும்போதும், எலும்பு மஜ்ஜை நோயில் இரத்த உற்பத்தி தடைபடும்போதும் பெரிய அறுவை மருத்துவத்தின் போதும் இரத்தம் ஏற்றல் பயன்தரும். இரத்த ஏற்றத்துக்குத் தேவையான இரத்தம், இரத்த தானம் செய்பவர்களிடமிருந்து பெறப்படு கிறது. ஒரு தடவையில் 300-450 மி,லி. இரத்தம் தான் ஒருவரிடமிருந்து எடுக்க முடியும். அதை 75 மி.லி.சிட்ரேட் கலந்த நீர்மத்தில் சேமித்துக் குளிர் சாதனப் பெட்டிகளில் வைத்திருந்தால் பல நாள் அக.4-40 . இரத்தம் ஏற்றல் (மருத்துவம்) 625 அவரிட களுக்கு அது கெட்டுப் போகாமல் இருக்கும். இரத்தம் வழங்குபவரிடமிருந்து, இரத்தத்தை அகற்றும் முன்னர், அவரது உடல்நிலை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். குறிப்பாகச் சொறி, சிரங்கு மற்றும் காமாலை, மலேரியா, பால்வினை நோய், எய்ட்ஸ் (AIDS) போன்றவை இருந்தால், மிருந்து இரத்தத்தைத் தானமாகப் பெறக்கூடாது. ஏனெனில் இந்த இரத்தத்தை வேறு யாருக்காவது ஏற்றினால், அவருக்கு இந்த நோய்கள் தொற்றிவிடும். இரத்தம் ஏற்றல் மூலம் பரவும் நோய்களாவன, மலேரியா, மஞ்சள் காமாலை, யானைக்கால் நோய், பால்வினை நோய், எய்ட்ஸ் என்பன. ஆகவே இரத் தம் ஏற்றப்படும் முன்னர், அந்த இரத்தத்தைப் பல ஆராய்ச்சிகளுக்குள்ளாக்கி, தீங்கற்றது. சரியான பிரிவைச் சேர்ந்தது என்று நிச்சயித்த பின்னர்தான், மற்றவருக்கு ஏற்ற வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட எவரும் இரத்த தானம் செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம். பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாயில் இருக்கும் பெண்கள். உடல் நலம் குன்றியவர்கள் ஆகியோரிடமிருந்து இரத்தம் பெறக்கூடாது. ஒரு தடவைக்கு 300-350 மி.லி. இரத்தம் வெளியேற்றப்பட்டு, இரத்தச் சேமிப் பகத்தில் 4 செ. இல் சேமித்து வைக்கப்படலாம். குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் நாள்கள் இரத்தத்தைக் கெட்டுப் போகாமல் வைக்க லாம். அதற்குப் பின்னர் இந்த இரத்தத்தை யாருக் கும் ஏற்ற முடியாது. ஆனால் வீணாகிவிட்ட இந்த இரத்தத்திலிருந்து பிளாஸ்மா முதலியவை எடுக்கப்படுகின்றன. இதைத் தீப்புண்காயங்களுக்குப் பயன்படுத்தலாம். வரை 21 இரத்தம் ஏற்றப்படுவதும், எடுக்கப்படுவதும் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். இரத்தம் பெற வேண்டிய நோயாளி, ஒரு கட்டிலில் மல்லாந்து படுத்திருக்க வேண்டும். ட அல்லது வலக் கையி லுள்ள ஒரு சிரையைத் தெரிந்தெடுத்து அதன் வழி யாக இரத்தம் ஏற்றப்படுகிறது. (விவரம் தெரியாத சிலர், 'நரம்பு ஊசி' என்பர். நரம்பு வழியாக எந்த நீர்மத்தையும் செலுத்த முடியாது. சிரை வழி யாகத்தான் இரத்தத்தையோ. குளுகோஸ் கலந்த உப்பு நீரையோ உட்செலுத்த முடியும்) இரத்தம் உட்செல்லும்போது, ஒவ்வா மை எதிர்வினைகள் தவிர்க்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கையாக, சில டாக்டர்கள் ஏற்றப்படவேண்டிய இரத்தத்தி னுள், ஒவ்வாமை எதிர் மருந்துகளை கலந்து விடு கின்றனர். இரத்தம், சொட்டுச் சொட்டாக நிமிடத் துக்கு 14-16 சொட்டு வரை நிதானமாக உட்செல்ல வேண்டும். துரிதமாகச் செலுத்தப்பட்டால், நோயா ளிக்கு எதிர் வினைகள் தோன்றலாம். இரத்தம் செலுத்தப்படும்போது, இறுதியாக இருக்கும் சில சொட்டு இரத்தம் உட்செல்லும்போது கவனமாக