இரத்தமழிச் சோகை 627
ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரத்த தானம் செய்பவரை முழுமை யாகப் பரிசோதிப்பதிலிருந்து எடுத்த இரத்தத்தைச் சுத்தமான முறையில் சேமித்து வைத்து, உரியவருக்கு உரிய காலத்தில் உரிய முறையில் செலுத்துவது வரையில் கவனமாக இருந்தால் எந்த விதச் சிக்கலும் வாராது, நல்ல பலனும் கிடைக்கும். இரத்தமழிச் சோகை அ.கதிரேசன் இரத்தத்தில் காணப்படும் மற்ற அணுக்களைப் போன்றே சிவப்பணுக்கள், மஜ்ஜையில் உள்ள ப்ளூரி பொடென்ட், ஸ்டெம் செல்களிலிருந்து தோன்றி வளர்கின்றன. இந்த ஆதி அணுவின் தோற்ற முறை, அமைப்புகள், மூலக்கூறுகள் முதலியன தெளி வாகவில்லை. சிறுநீரகங்களிலிருந்து சுரக்கும் ஹார் மோன் எரித்திரோபோயிடின், மஜ்ஜையில் உள்ள ஆதி அணுவைத் தூண்டி இரத்தச்சிவப்பணுப் பெருக்கத்தை விளைவிக்கிறது. எரித்ரோபாய்டினைத் தூண்டுவதும் இரத்தத்தின் ஆக்சிஜன் ஆக்சிஜன் அளவே யாகும். ஆக்சிஜன் குறைவு எரித்ரோபாய்டினைச் சுரக்க வைக்கிறது. நுரையீரலையடைந்து சிவப்பணுக்களின் தலையாய பணி, காற்றின் ஆக்சிஜனை நுரையீரல் வாயிலாகப் பெற்று, உடல் திசுக்கள் அனைத்திற்கும் கொடுத்து அத்திசுக்களிட கார்பன் டை மிருந்து, கழிவுப்பொருளான -ஆக் சைடை அகற்றி மீண்டும் அல்லளிமத்தை வெளியேற்றுவதுதான். யைச் செய்வது ஹீமோகுளோபின் ஆகும். இப் புரதப்பொருளில் ஹீம் என்னும் இரும்புச் சத்தும், குளோபின் என்ற புரதமும் ஒன்றியுள்ளன. குளோ புலின் என்ற பல பெப்டைடு தொடர்களும் உள்ளன. இப்பணி சிவப்பணுக்கள் தம் வளர்ச்சியின் போது நியூக் ளியஸ், ரைபோசோம். மைடோகாண்ட்ரியா போன்ற கூறுகளை இழந்து விடுகின்றன. அணுவின் மூல எரிபொருள் குளுக்கோஸ்தான். குளுக்கோஸ் வளி யிலாக் கிளைகோலிடிக் முறையிலும், சிறு பகுதி ஹெக்சோஸ் மோனோபாஸ்ஃபேட் முறையிலும், சிதைவுற்றுச் சக்தியளிக்கும் அடினோசின் ட்ரை பாஸ்ஃபேட்டை விளைவிக்கின்றது. சிவப்பணுக்கள் இருதலக்குழியுள்ள தட்டை வடி வம் கொண்டவை. இவற்றின் விட்டம் 7. 2 மைக் கிரான். அணுச்சுவர் நன்கு வளையக் கூடியது. இவ்வாறாக இவ்வணுக்கள் இரத்த இரத்த நுண்குழாய் களில் கூட நெளிந்து, பிறழ்ந்து, வழுக்கிக்கொண்டு சென்று தம் பணியைத் தொடர்கின்றன. அ க.4-40.அ இரத்தமழிச் சோகை 627 தோற்றமுறை, அமைப்பு முறை, வளர்முறை. நொதி முறை இவற்றில் ஏதாவது இடர் ஏற்படின் அணுக்கள் அழியலாம். அத்தறுவாயில் மஜ்ஜை முயன்று, அணு உற்பத்தி அளவை ஆறிலிருந்து எட்டு மடங்கு வரை பெருக்க வழியுண்டு. அந்த அள வையும் மீறி இடர் ஏற்படின் சோகை விளையும். சோகை என்பதை இரத்த நிறமிக் குறை எனக் கொள்ளலாம். இதனுள் அணுக்குறை நிறமிக்குறை ஆகியவை அடங்கும். உலகில் பரவலாகக் காணப் படும் நோய்களில் சோகையும் ஒன்று. இதன் காரணங் களை மூவகையாகப் பிரிக்கலாம். அவை இரத்த இழப்பு (மிகை இழப்பு, மற்றும் தொடர் மித இழப்பு), சிவப்பணுத் தோற்றக்குறைவு, சிவப்பணு அழிவு எனப்படும். எதிர்ப்பொருள்களாலும், தடுப்பாற்றல் குறை வாலும், காயம் ஏற்படுவதாலும், இதயத்தில் செயற் கை வால்வுகள் பொருத்துவதாலும், மலேரியா நோயினாலும், நச்சு மருந்துகளாலும், இரத்தமழிச் சோகை ஏற்படலாம். கிளை அணுச் சோகை, இரத்த நிறமி இராஇழிவு நோய், (paraxysmal nocturnal haemoglobinurea) பாரம்பரிய உருளை, அணு நோய் முதலியவற்றில் சிவப்பணுச் சுவர்க் குறைபாடுகள் இருப்பதால் இரத்தமழிச் சோகை ஏற்படலாம். நொதிக்குறைவாலும், ஹீமோகுளோபின் குறைவு போன்ற அணு உட்செல் குறைபாடுகளாலும் இரத்த மழிச் சோகை உண்டாகலாம். சோகை எவ்வகையால் ஏற்படினும்.விளையும் வேகம், அளவு இவற்றைப் பொறுத்து நோய் அறிகுறிகள் தென்படும். சாதாரண மாக ஒருவருக்கு 100 மி. லிட்டரில் 14 மி. கி. இருக்க வேண்டிய (ஆண்) ஹீமோகுளோபின் திடீரென்று (சில நாள்களில்) 3 மி.கி. அளவிற்குக் குறைந்து விட்டால் அவர் மிகவும் அவதியுறுவார். ஆயின் அவருக்கு இக்குறைவு சில மாதங்களில் படிப்படியாக ஏற்பட்டால் நோய்க்குறி இல்லாமலேயே இருக்கக் கூடும். அறிகுறிகள். மற்ற சோகைகளைப் போன்றே இரத்தமழிச் சோகையிலும் நோயாளிக்குக் களைப்பு, சோர்வு, வெளிர்நிறம், பணி செய்ய முற்பட்டால் மூச்சுத்திணறல், இதயப்படபடப்பு, பசியின்மை, சீரணக்குறைவு, மயக்கம், பார்வைக் கூர்மையிழப்பு, தலைவலி, துயிலின்மை, கைகால் விரல்களில் குறை யான தொடு உணர்வு மற்றும் எரிச்சல், மாத வடாய் மாறுபாடுகள், புணர் உணர்வுக்குறை போன்றவை காணப்படும். வயது முதிர்ந்தோர்க்கு நெஞ்சுவலி ஏற்படலாம். நோயாளியை ஆய்வு செய்து பார்க்கும் போது வெளிர் நிறத்தோல் மற்றும் சவ்வுகள், இதய வேகத்துடிப்பு, இதய விரிவு, இதயச் சுருக்க முணுமுணுப்பு. தீவிர நிலையில் கணுக் கால் பாத் நீர்க்கட்டுப் போன்றவை ஏற்படுவது தெரியவரும்.