630 இரத்த மாற்றீடு செய்தல்
630 இரத்த மாற்றீடு செய்தல் திடீரென இரத்தம் நுரையீரல் உறைகளுக்கிடையே கசியலாம். அறிகுறிகள். மூச்சு விடத் திணறுதல், நெஞ்சு வலி, அத்துடன் இருமல், சளியில் இரத்தம் போன்ற வையாகும். விபத்தினால் இரத்தமார்பு ஏற்பட்டால், விலா எலும்புகள் உடைந்தும், இரத்தப்போக்கும். உடலின் மற்ற உறுப்புகளில் இரத்தம் கட்டியும் காணப்படும். புற்று நோயினால் இரத்தமார்பு ஏற்பட்டால் புற்று நோய்க்குரிய மற்ற அறிகுறி களும் காணப்படும். சுவாசத்திற்கேற்ப மார்பு அசையாமல் அசைவு சற்றுக்குறைவாக இருக்கும்.இரத்தமார்பு ஒருபக்கமே யிருந்தால் மார்பக மற்ற உறுப்புகள் எதிர்த்திசையில் தள்ளப்பட்டிருக்கும். மார்பைத்தட்டிப் பார்க்கும் போது கல்லின் மீது தட்டுவது போன்ற ஒலி கேட்கும். மார்பக ஒலி ஆய்வியினால், (stethoscope) ஆராயும் போது சுவாச ஒலிகள் கேட்கப்படுவதில்லை. சிவ நேரங்களில் இரத்த அடைப்புக்குச் சற்று மேலே முணு முணுப்புக் கேட்கும். விலா எலும்புகளுக்கிடையில் ஊசியை நுரை யீரல் உறைகளுக்கிடையே செலுத்தி உறிஞ்சினால் இரத்தம் வரும். நெஞ்சு எக்ஸ் கதிர் படத்தில் விலாப்பகுதிக்கும் உதரவிதானத்திற்குமிடையே நீர்மம் கட்டியிருப்பது தெரியும். மருத்துவம் செய்யும்போது முதலில் வலி, அதிர்ச்சி, இரத்த இழப்புப் போன்றவற்றை வலி நீக்கி மருந்துகள், இரத்தம், பிளாஸ்மா ஹிமோசில் போன்றவை கொண்டு சரிசெய்ய வேண்டும். மூச்சு விடத் திணறினால் ஊசி மூலம் விலாயெலும்புகளுக் கிடையே குத்தி, இரத்தத்தை அகற்ற வேண்டும். இரத்தம் நுரையீரல் உறைகளுக்கிடையே கசிய ஆரம்பித்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு உறிஞ்சியெடுப்பது பாதுகாப்பானது. நுரை யீரல் உறைகளுக்கிடையே இரத்தம் ஏதுமில்லாத வரை தினமும் உறிஞ்சியெடுக்க வேண்டும். ஊசி மூலம் உறிஞ்சியெடுக்க முடியாவிட்டால் இரத்தம் உறைந்து விட்டது எனலாம். இதில் ஸ்டிரேப்டோ கினேஸ், டிரிப்சின் போன்ற மருந்துகளைச் செலுத்தி இரத்தக் கட்டியை நீர்மமாக்கிய பின்னர் இருபத்து நான்கு மணிநேரத்திற்கு பிறகு ஊசி மூலம் முடியாவிட்டால் உறிஞ்சியெடுக்கலாம். அறுவை மூலம் மார்பைத் திறந்து (thoracotomy) இரத்தக் கட்டியை அகற்றலாம். விபத்துகளில், தேவைக்கேற்ப மூச்சுக் குழலில் துளையிட்டு அதன் மூலம் சுவாசிக்கச் செய்யலாம் (trecheostomy). செயற்கைச் சுவாசம் கொடுக்கலாம். விலாயெலும்புகள் உடை பட்டிருந்தாலோ, உடைந்து மார்புக்குள் சென்றிருந்தாலோ அறுவை மூலம் சரி செய்து ஒட்டுப்பசை வாரால் இணைத்துக் கட்ட லாம். ஆ. வாசுகிநாதன் இரத்த மாற்றீடு செய்தல் பழங்காலத்திலேயே அசுத்த இரத்தம் பலவகையான நோய்க்கு ஏதுவாகிறது என்ற எண்ணத்தில் உடல் இரத்தத்தை வெளியேற்றிவிடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அறுவை மற்றும் விபத்துகளால் ஏற்படும் இரத்த இழப்புக்கு ஈடாகப் பிறரிடமிருந்து பெற்ற இரத்தத்தை உடலுக்குள் செலுத்தும் முறை கள் மருத்துவ முனனேற்றத்தால் தோன்றின. இவற்றின் விளைவாக முறையோடு உடல் இரத்தத்தை வெளியேற்றி மாற்று இரத்தத்தை கொண்டு ஈடு கட்டும் முறையும் தோன்றிற்று. குழந்தைகளுக்கு இரத்த உறைதலின் கோளாறு களால் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவ துண்டு. உயிருக்கே ஆபத்தாகக் கூடிய சில நோய்கள் இவ்வகையில் வெளிப்படுகின்றன. Rh என்னும் இரத்தப்பிரிவில் கருப்பையிலுள்ள குழந்தைக்கும் தாய்க்கும் பொருத்தமில்லாது போகுமாயின் அக் குழந்தை கருவிலேயே நோயுற்று உடல் முழுதும் வீக்கமுற்று உயிரிழக்க நேரலாம். நோயினின்றும் தப்பிய குழந்தை, பிறந்தவுடன் மஞ்சள் காமாலை யால் பாதிக்கப்பட்டு இரத்த இழப்பு அல்லது மூளைப் பாதிப்பு ஆகியவற்றால் இன்னலுறலாம். இவை அனைத்திற்கும் காரணம் அக்குழந்தையின் இரத்தச் சிவப்பணுக்களின் மேல் படர்ந்துள்ள ஓர் எதிர்ப் பொருளேயாகும். இக்குறையால் இந்தச் சிவப்பணுக் கள் தளர்வுற்றுப் பெருமளவில் அழிவடைகின்றன. இந்த அழிவின் விளைவாக ஏற்படும் கழிவுகளே மஞ்சள்காமாலைக்குக் காரணமாகின்றன. கருவி லேயே ஏற்படும் சிவப்பணு இழப்பு, சோகை நோயை உண்டாக்குகிறது. சமயம் Rh பொருத்தமின்மையால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் தீவிரமுற்று மூளையைப் பாதிப் பதற்குள் இரத்தமழி நோய்க்குட்பட்ட குழந்தை களுக்கு இரத்தம் செலுத்துதல் அவசியமாகிறது. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நெருக்கடி. நிலைமையில் செயலாற்றும் இதயத் தசைகளின் சுமையை மிகைப்படுத்தவும் கூடாது. இத்தகு நிலை யில் இரத்தக்குழாய்களிலும் இதயத்தின் கொள்ள ளவிலும் சுமை ஏறாமல், அதே மற்ற வரிடமிருந்து பெறப்படும் இரத்தத்தைக் குழந்தைக் குச் செலுத்தும் இரத்த மாற்றீடு செய்தல் (exchange transfusion) என்னும் முறை பயன்படுகிறது. செய் முறையில் குழந்தையின் உடலிலிருந்து வெளி யேற்றப்படும் இரத்தத்தைவிடச் சற்றுக் குறைவான அளவே உட்செலுத்தப்பட வேண்டும். இரத்த மாற்றீடு செய்தல் இருவழிகளில் பயனளிக்கிறது. இரத்தச் சிவப்பணுக்கள், ஒவ்வாமைப் புரத மேலு றையால் அழிந்து மஞ்சள் காமாலையை ஏற்படுத்து தலைத் தவிர்க்கின்றன. நேரடியாகப் பிளாஸ்மா