பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/655

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்த மூட்டு 631

விலுள்ள மஞ்சள் காமாலையை உண்டாக்கும் வேதிப் பொருள்களை (பிலிரூபின் - பிலிவெர்டின் -மற்றும் இவற்றின் கலவை உப்புகள்) வெளியேற்றித் தூய்மையான பிளாஸ்மாவினால் நிறைவு செய் கின்றன. குழந்தையின் எடையில் ஒரு கிலோகிராமுக்கு 20 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் இரத்த மாற்றீடு செய்தல் முழுமையாகப் பயனளிக்கும் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த நோயாளிக்கும் சில வேளைகளில் இரத்த மாற்றீடு தேவையாகலாம். மிகுநுண்ணுயிர்க் கிருமி களால் ஏற்படும் ஈரல் அழற்சியின் விளைவாக மஞ்சள் காமாலை நோய்க்கும், அந்நோயின் தீவிரத் தைப் பொறுத்து இரத்த மாற்றீடு தேவைப்படலாம். குழந்தைகள் பிறந்தவுடனேயே Rh பொருத்த மின்மை மட்டுமன்றி வேறு காரணங்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படககூடும். குறை மாதக் குழந்தைகள், நீரிழிவு நோய்வாய்ப்பட்ட தாய்மார் களின் குழந்தைகள், உயிர்ச்சத்து மிகுதியாதலின் நச்சுத்தன்மை, குளுகோஸ்-6, பாஸ்ஃபேட் - டீஹைட் ரஜனேஸ் என்னும் நொதியின் பற்றாக்குறை, கிரந்தி நோய், சல்ஃபோனமைடு முதலிய மருந்துகள், காலக்டோசீமியா (galectocemia) என்பவை வேறு சில காரணங்களாகும். இவற்றின் உடனடி மருத்து வத்திற்குச் சிற்சில சமயங்களில் இரத்த மாற்றீடு அவசியம். இரத்த மாற்ற முறைகள். ஒரே இரத்தக்குழாய் (சிரை ) மூலம் வெளியேற்றுதலும், உட்செலுத்துதலும், நிகழக் கொப்பூழ்க்கொடியின் சிரையில் ஒருபாலிதீன் குழாய் செருகப்படுகிறது. இதன் மூலம் சிறிது சிறி தாகக் குழந்தையின் இரத்தம் உறிஞ்சப்பட்டு, உடனுக்குடனே புதிய இரத்தமும் உட்செலுத்தப் படுகிறது. இதே முறையில் தொடையில் உள்ள வெளிப்பெருஞ் சிரை வழியாகவும் இரத்த மாற்றீடு செய்யலாம். தமனியிலிருந்து இரத்தத்தை வெளியேற்றி, சிரை மூலம் உட்செலுத்துதல்; இரு தனித்தனிக் குழாய்களில் ஒன்று தமனியுடனும் மற்றொன்று சிரையுடனும் இணைக்கப்பட ஒரே சமயத்தில் இரத்தம் வெளி யேற்றுதலும், உட்செலுத்துதலும் செய்யப்படும். கொப்பூழ்க் கொடியின் தமனியும், சிரையும், அல்லது மணிக்கட்டிலுள்ள தமனியும் காலிலுள்ள வெளிப் பெருஞ்சிரையும் இம் முறைக்குப் பயன்படுகின்றன. இரத்தமாற்றுதல் - செய்முறையின் ஆபத்துகள். இரத்த ஓட்டத்தில் காற்றுக்குழாய்களின் இணைப்பு கள் சரியாகப் பொருந்தாவிடினும், கவனக் குறை வால் குழாய் திறந்தவாறே சற்றுநேரம் விடப்பட்டா லும் காற்று இரத்த நாள அடைப்பான்கள் embolism) ஏற்படலாம். (air இரத்த மூட்டு 631 கொப்பூழ்க் கொடிச்சிரைச் சேதத்தால் இரத்த வோட்டத்தில் செல்ல வேண்டிய இரத்தம் நேரடியாக வெளியேறிவிடலாம். உடலில் உள்ள அமில, கார நடுநிலைமையில் மாறுதல்கள் ஏற்படலாம். சேமித்த இரத்தம் உறையாமல் காக்கும் சிட் ரேட்டின் அளவு மிகுதியாலும், பொட்டாசியம் மிகுதியாலும் கேடுகள் விளையலாம். இரத்தவோட்டப்பாதை, இதயத்தில் செயல்திறன் ஆகியவற்றின் மீது கூடுதல் சுமை ஏற்படலாம். சிரைகளில் பாக்டீரியா கிருமிகளால் அழற்சி ஏற்படலாம். தேவைக்காகச் சரியானமுறையில் மிகுந்த கவனத் துடன் செய்யப்படும் இரத்த மாற்றீடு பல உயிர் களைக் காக்கும் அரியதொரு மருத்துவச் சாதனை யாகும். கா.கோ. விவேகானந்தன் நூலோதி, P.L, Mollison, Blood Transfusion in Clinical Medicine, Sixth Edition, Blackwell Scientific Publication, 1979; Frank A. Oski and J. Lawrence Naiman, Major Problems in Clinical Paediatrics Vol-IV, W.B. Saunders Company, Philadclphia. இரத்த மூட்டு என்பன மூட்டுக்குள் இரத்த ஒழுக்கு ஏற்படுவதால் உண்டா கும் நிலைக்கு இரத்த மூட்டு (haemarthrosis) என்று பெயர். இது உடன் ஏற்படும் இரத்த மூட்டு, நாட் பட்டு மீண்டும் மீண்டும் ஏற்படும் இரத்தமூட்டு என இரு வகைப்படும். அடிபடுதல் இதற்கு ஒரு முக்கிய மான காரணமாகும். மூட்டுத்தேய்வழற்சி (osteoar- thritis) நோயில் இது தானாகவே ஏற்படக்கூடும். பலமான அடி அல்லது மூட்டில் தீடீரென்று ஏற்படும் சுழல்தாக்கம் மூட்டுச் சவ்வின் இரத்த நாளங்களைச் சேதப்படுத்துவதால், இரத்தக் கசிவு ஏற்பட்டு மூட்டுக்குள் இரத்தம் சேர்கிறது. மேலும் மூட்டுக்குத் தொடர்புடைய எலும்புகளில் ஏற்படும் முறிவு அல்லது மூட்டுகளில் செய்யப்படும் அறுவை களாலும் இரத்தமூட்டு ஏற்பட வாய்ப்புண்டு, ஹீமோஃபீலியா எனப்படும் இரத்தம் உறையா நோய் உள்ளவர்களுக்கு இரத்தமூட்டு முக்கிய அறிகுறியாகும். என்பது இந்நோய் பெரும்பாலும் முழங்கால் மூட்டையே பாதிக்கிறது. பின்னர் முழங்கை, கணுக்கால் மூட்டு முதலியவை பாதிக்கப்படுகின்றன. முழங்கால், கீல்