பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 இரத்த வகைகள்‌

634 இரத்த வகைகள் வடத்துள் செலுத்தியபோது அது மூளையைச் சென்ற டைந்தது. இது இரத்த மூளைத்தடை (blood brain barrier) என்று ஒன்று இருப்பதைக் கண்டறிய உதவி யது. இரத்த மூளைத்தடையின் இருப்பிடம் நீண்ட காலச் சர்ச்சைக்கிடமான ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது.எலெக்ட்ரான் நுண்ணோக்கி, புரத மூலங் கள் ஆகியவை இரத்த - மூளை இருப்பிடத்தைக் காண உதவின. மூளையிலுள்ள நுண்குழாய்களின் எபிதீலி யல் செல்களின் இணைப்பிடமே அவை இருக்கு மிடமாகும். ஆய்வினால் சமீபத்திய அல்ட்ராஸ்ட்ரக்சுரல் நரம்பு மண்டல நீரும் இரத்தமும் சந்திக்குமிடங்களில் இரத்த மூளைத்தடை இருப்பது தெரியவந்தது. கோ ராய்டு பின்னல் உள்ள நுண் குழாய்கள், துளைகள் நிரம்பப் பெற்றவை. அத்துளைகள் புரத நுண்துகள் களை அனுமதிக்கவல்லவை. புரத நுண்துகள்கள் முடி வில் கோராட்டு பின்னலை அடைகின்றன. எனினும் எபிதீலியச்செல்கள் கெட்டியான இணைப்புகளைக் கொண்டவை. சிலந்தி வலையுருவின் வலையுருவின் கீழ்ப்பகுதி அதன் செல்களால் வேயப்பட்டது. இதுவும் இரத்தத் தையும் நரம்பு மண்டல நீரையும் பிரிக்கும் பகுதி யாகும். எனவே இதுவும் இரத்த மூளைத் தடைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். மூளையிலுள்ள வெண்ட் வேயப்பட்டவை. ரிக்கிள்கள் மியானி செல்களால் கார்ட்டெக்ஸ் புறணிமென்ராயி செல்களால் வேயப் பட்டது. மேற்கூறிய இடங்களில் நரம்பு மண்டல நீரும் மூளையும் இணைக்கப்பட்டிருக்கும் செல்களின் இடைவெளி மிகுந்துள்ளதால் நீர்மப் பொருள், மின் பகு பொருள்,புரத நுண்துகள்கள் ஆகியன எளிதில் சென்று வருகின்றன. மேலும் அவ்விடங்களின் நரம்பு மண்டல நீர் வழியாகத் தண்டுவடத்தில் செலுத்தப் பட்ட சாயம் மூளையை அடைய முடிகிறது. மியானி செல்களின் மேற்பரப்பில் பிசிர்கள் உள் ளன. எனினும் இவற்றின் வேலைகள் இன்னும் கண் டறியப்படவில்லை. ஒவ்வொரு வெண்ட்ரிக்கிளிலும் சோராய்டு பின்னல்கள் உள்ளன. இவை நரம்பு மண் டல நீரில் மிதந்த வண்ணம் உள்ளன. கோராய்டு பின்னலின் வெளிப்பகுதி நரம்பு மண்டல நீரைத் தொட்ட வண்ணம் இருக்கின்றது. இந்த வெளிப் பகுதி நுண்ணிய பிசிர்கள் கொண்டது. இப்பிசிர்கள் செல்களின் பரப்பளவை அதிகரிக்கப் பயன்படு கின்றன. இழை மணிகள் கால் கை தொகுப்புகள், சோரய்டின் உள் தோலினிய செல்கள் ஆகியன அதிக வளர்சிதை மாற்றம் உண்டாக்கவல்லவை. கோராய் டின் மேல் தோவினிய செல்களின் உச்சிப்பகுதி இறுக்க இணைப்புக்கொண்டது. இதுவும் ஓர் இரத்த மூளைத்தடையாகும். உருவத்தில் இந்தச் செல்கள் பிறசிறப்பானசுரப்பிச் செல்களைப் போல் உள்ளன. மூளையின் நுண்குழாய்கள் உடலிலுள்ள பிற நுண் குழாய்களைப் போல ஆனவை அல்ல, மூளை நுண்குழாய்களின் செல்கள் இறுக்கமாக இணைக்கப் பட்டுள்ளன. இவை நிறைய இழை மணிகளைத் தம் மகத்தே கொண்டுள்ளன. குறைநீர் வாங்கல் குழி களையும் கொண்டுள்ளன. மூளை நுண் குழாய்களில் செல்கள் எபிதீலியல் செல்களைப் போல் வேலை செய்கின்றன. சேதமுறாத மூளை நுண் குழாய்கள் இரத்தச் செல்களையும் கொழுப்பல்லாத கரையும் பொருள்களையும் உட்செல்ல அனுமதிப்பது இல்லை. எடுத்துக்காட்டாக அயனிகள், புரதங்கள் ஆகியவற் றைக் கூறலாம். மூளைக்கும் இரத்தத்திற்கும் இடையே காற்று மாற்றங்கள் எளிதாக நடை பெறு கின்றன. உள்ள அலை மூளையின் பல பகுதிகள் துளைகள் கொண்ட நுண் குழாய்களைப் பெற்றிருக்கினறன. இரத்தமூளைத் தடைக்கு வெளியே உள்ளன. இப் பகு திகளில் உள்ள இறுக்க இணைப்புகள் உடற்கூற்றுத் தடையை உண்டுபண்ணுகின்றன. மூன்றாவது நாள ன் காவது வெண்ட்ரிக்கிள்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இவை நரம்பு சம்பந்தப்பட்ட ஹார்மோன்கள் உற்பத்தியாகும் இடங்கள் ஆகும். மத்திய குவியலில் சிறப்புச் செல்களுக்கு டானிசட் என்று பெயர். அச்செல்கள் மூன்றாவது வெண்ட்ரிக்கிளின் மியானிப்பரப்பையும் பிட்யூட்டரி முன் பகுதியிலுள்ள போர்ட்டல் சுழற்சியையும் இணைக்கின்றன. இங்கு கீழ்த் தலாமியை (hypo- thalamus) ஆளுகின்ற பொருள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. பிறகு இவை மூன்றாவது வெண்ட்ரிக் கிளில் உள்ள நரம்பு மண்டல நீரில் கலக்கின்றன. அவை அங்கே டீனோசட்டினால் பிட்யூட்டரி முன் பகுதிச் சுழற்சிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பி.ஏ. பாஸ்கர் இரத்த வகைகள் Ale நவீன மருத்துவத்தில் இரத்ததானம் முக்கிய பங் கேற்கிறது. விபத்திலோ, அறுவை சிகிச்சையிலோ, நோயிலோ உண்டாகும் இரத்த இழப்பை ஈடு செய்வதற்கும், மருத்துவத்தில் வேறு பல நோய் களுக்கும் வேறு ஒருவரது இரத்தம் நோயாளிக்குச் செலுத்தப்படுகிறது. ஆராயாமல் எவருடைய இரத்தத்தையும் செலுத்தக்கூடாது. மனித இரத்தம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றது. ஒருவகை இரத்தத்தை மற்றவகை மனிதருக்குச் செலுத்தினால் தீங்கு ஏற்படுகிறது. ஓரின இரத்தம் மற்றோர் இனத்தின் இரத்தத் துடன் கலக்கப்பட்டால் முதலில் இரத்த அணுக்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும். பிறகு பல சிவப்பணுக்கள் உடைபடும். சில சமயங்களில்