இரத்த வகைகள் 635
விபத்து முதலியவற்றால் மனிதர்கள் இரத்தம் இழக்க நேர்ந்தால் புதிய இரத்தம் செலுத்த வேண்டிவரும். அப்போதும் சிவப்பணுக்கள் உடைபட நேர்ந்தால் 'ஆபத்தான நிலை தோன்றும். இவ்வாறு இரத்தம் உடலில் சேராத நிலையைப் பொருத்தமின்மை (incompatibility) எனக் குறிப்பிடுவர். சிவப் கி.பி. 1901ஆம் ஆண்டு கார்ல் லாண்ட்ஸ்ட்டீனர் Karl Landsteiner) என்பவர் இதற்கான காரணத் தைக் கண்டறிந்தார். அவர் கூற்றுப்படி இரத்தச் சிவப்பணுக்கள் ஒட்டும் தன்மையுடையன. பணுக்களில் A, B என்ற இரண்டு திரள்செனிகள் உள்ளன. அவற்றின்படி இரத்தம் A, B, O, AB என நான்கு வகைப்படும். A, B வகைகளில் முறையே ஒட்டணுப் பொருள்கள் A-யும், B-யும் இருக்கும். AB வகை இரண்டையும் கொண்டிருக்கும். 0 வகையில் ஒட்டணுப் பொருள்கள் ஒட்டணுப் இல்லை. பொருள்கள் சிவப்பணுக்களின் சவ்வில் (red cell membrane) இருக்கின்றன. குறிப்பாக அசெட்டைல் காலக்டோசமின் என்ற வேதிப் பொருள் A யிலும் D காலக்ட்டோஸ் B வகையிலும் அண்மை யில் காணப்படுகின்றன. வகை இவையன்றிப் பிளாஸ்மாவில் காணப்படும் திரட்டிகள் (agglutinins) ab என இருவகைப்படும். உண்மையில் இவை முறையே A.B திரள்செனிகளின் எதிர்ப் பொருள்களேயாம். அட்டவணை 1 இல் இரத்த வகைகளும் அவற்றில் காணப்படும் எதிர்ப் பொருள்களும் காட்டப்பட்டுள்ளன. சிவப்பணுக்களில் பிளாஸ்மாவில் இரத்தவகை உள்ள ஓட்டணுப் உள்ள ஓட்டுப் பொருள்கள் A பொருள்கள் b A B B a AB A,B இல்லை இல்லை a,b வகை A வகைத் திரள்செனிப் பொருளும் a எதிர்ப்பொருளும் ஒன்று சேர நேர்ந்தால் சிவப் பணுக்கள் திரட்சியடையும். இதனால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு உயிரிழக்க நேரிடும். இதைப்போன்று எதிர்ப் B வகைத் திரள்செனிப் பொருளும் b வகை பொருளும் சேரும்போது இரத்தம் கட்டியாகும். அட்டவணையை நோக்கினால் ஒவ்வொரு இரத்தமும் ஒவ்வாமை ஏற்படாவண்ணமே அமைந் திருப்பதைக் காணலாம். வகை நோயாளிகளுக்கு இரத்தம் செலுத்தப்படும்போது திரளக் கூடிய வகை இரத்தத்தைக் கொடுக்கக் கூடாது.0 வகைச் சிவப்பணுக்களில் திரள்செனிப் இரத்த வகைகள் 635 பொருள்கள் இல்லாமையால் அதனை அனைவருக்கும் வழங்குபவர் (universal donor) என்று கூறுவர். பிளாஸ்மாவில் எதிர்ப்பொருள்கள் இல்லாததால் AB வகை அனைவரிடமும் ஏற்போர் (universal recipient) எனப்படுகிறது. வகையான Rh வகை. கி.பி. 1940 இல் லாண்ட்ஸ்ட்டீனரும், வீனரும் பெரும்பான்மையான மனிதர்கள் உடலில் மற்றொரு திரள்செனி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனை முதலில் ரீசஸ் (Rhesus) வகைக்குரங்கிலிருந்து கண்டதால் ரீசஸ் காரணி என அதற்குப் பெயரிட்டனர். ஆனால் இதற்கு எதிர்ப் பொருள்கள் மனித உடலில் காணப்படுவதில்லை. இவ்வடிப்படையை வைத்து Rh உள்ளவர், இல்லாதவர் என மனிதர்களை இருவகைப்படுத்துவர். பண் Rh Rh- வகையைப் பற்றி அண்மையில் செய்யப் பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாகப் பல உண்மை கள் தெரிய வந்துள்ளன. Cc, Dd, Ee இரத்த கள் பரம்பரையாக வருபவை. எனவே, மெண்டலின் விதிப்படி C,D,E திரள்செனிப் பொருள்கள் ஓங்கு புடையவை. மனிதச் சிவப்பணுக்களில் மூன்று Rh- திரள்செனிப் பொருள்கள் இருக்கும். ஒவ்வோர் இணையிலும் ஒன்றுமட்டுமே காணப்படும். அதாவது CDE, CDE, CDe போன்றவை இருக்கலாம். ஆனால் CCD, cDd போன்றவை இரா. இவ்விதமாகக் கணக் கிட்டால் ஏறத்தாழ 64 வகைகள் இருக்கக்கூடும். இம்முறையில் ஓங்கு பண்புடைய வகைகளை Rh நேர் என்றும். ஒடுங்கு பண்புமிக்கவற்றை Rh- எதிர் என்றும் குறிப்பிடுவர். Rh நேர் வகையைச் சேர்ந்த வர்கள் பெரும்பாலும் D ஓங்கு பண்பைக் கொண் டிருப்பர். Rh- எதிர் வகையினர் d ஒடுங்கு பண் புடையோராவர். D ஐத்தவிர மற்ற திரள்செனிப் பொருள்கள் இரத்த தானத்தில் ஊறுவிளைவிப்ப தில்லை. புதிய இரத்த வகைகள். மேற்கூறிய இரத்த வகை களைத் தவிரப் பல்வேறு இரத்த வகைகள் அறியப் பட்டுள்ளன. பெரும்பாலும் அவற்றை முதலில் கண்டு பிடித்தவர்களின் பெயர்களால் அவை குறிக்கப்படும். (எ.கா) லுத்தரன், கெல், டஃப்பி, கிட். இவற்றைத் தவிர M,N, MN என்ற மூன்று புதிய வகைகளும் காணப்பட்டுள்ளன. இவை A,B,O வகை அல்லது Rh வகை போல இரத்த தானத்தில் முக்கியம் வகிப்ப தில்லை. 0 உலகில் பரவலாகக் காணப்படும் இரத்த வகைகள். மரபியல் முறையில் இரத்த வகைகள் பரம்பரையாக வருவதால் ஒருவரின் வாழ்நாளில் அவருடைய இரதத வகை மாறுவதில்லை, வகை இரத்தம் பெரும்பான்மையோரிடத்தில் காணப்படுகின் றது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா இரத்தம் முதலிய பகுதிகளில் A வகை அதிகம்.