இரத்த வாந்தி 639
சிரைகள் வீங்கித் தடித்துக் காணப்படும் இந்நிலை யில் இருமல் அல்லது முக்குதல் காரணமாகச் சிறு அழுத்தம் ஏற்பட்டால் கூடக் கட்டுக்கடங்காத இரத்த வாந்தி ஏற்படும். காசநோய், ஈரிதழ் வால்வு இறுக்கம் போன்ற நோய்களால் சிவசமயம் நுரையீரல்களிலிருந்து இரத்தம் வெளிவருவதும் உண்டு. இது சளியுடன் கலந்து காணப்படும். சளியுடன் காணப்படும் இரத்தத்தை, இரத்த வாந்தியிலிருந்து வேறுபடுத்தி அறிவது அவசியம். ஏனெனில் இரண்டிற்கும் மருத்துவம் வெவ்வேறு ஆகும். இரத்த வாந்தி ஏற்பட்டவரின் உடலில் இரத்தக் குறைவிற்கான அறிகுறிகள் சுமார் 500 மி.லி. லிருந்து 1000 மி,லி. இரத்தம் வெளியேறும் வரை தெரியாது. சிறிய அளவில் இரைப்பையில் இரத்தக் கசிவு இருப்பின் வாந்தியில் வரும். இரத்தம் கருநிற மாகக் காணப்படும். நோயாளிக்குச் சோர்வு, மயக்கம், நாடித்துடிப்பு அதிகரிப்பு, இரத்த அழுத்தக் குறைவு. வியர்வை, தாகம், வாந்தி முதலியன ஏற்படும். கை கால் குளிர்ந்த நிலை போன்ற அறிகுறிகள் உண்டா கும். இந்நிலை தோன்றியபின் உடல்நிலை சீர்கெட்டுக் காணப்படும். இத்தகைய அறிகுறிகளுடன் இதயம் சிறுநீரகம், கல்லீரல் இவற்றில் பழுது இருப்பின் நோயாளிக்கு இறப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மது அல்லது மாத்திரை அருந்திய பின்பு இரைப் பையில் புண் அல்லது புற்று இருப்பதை அறிந்த நிலையில் நோயாளிக்கு இரத்த வாந்தி ஏற்பட்டால் இறப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. ஐம்பது வயதிற்குமேல் இரத்தவாந்தி ஏற்பட்டாலும் இறப்பு ஏற்படும். இரத்தக்குழாய்கள் தடிப்புடன் இருப்பது தான் இதற்குக் காரணம். குடலில் இரத்தம் கசிந்து செல்லும்பொழுது பல மாறுதல்கள் நிகழும். இரத்தக் கசிவு குறைவாக இருந்தால் வாந்தி யாக வாராமல், மலத்துடன் சேர்ந்து கருமலமாக வெளியேறும். ஆனால் இரத்தக் கசிவே இரத்த ஒழுக் மாறி அதிகமாக ஏற்படும் நிலையில் வாந்தி ஏற்படுவதோடு மலமும் கருநிறமாக வெளிவரும். இரத்தம் உடலில் செரிக்கப்படும்போது இரத்தத்தில் யூரியா அதிகமாகி மேலும் கெடுதலை விளைவிக்கும். காக இரத்த வாந்தியின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்க எரிச்ச புண்ணில் உதவும் அறிகுறிகள். குடல் லும். கல்லீரல் வாயிற்சிரை இரத்த அழுத்த நோயில் கல்லீரல் வீக்கமும், வயிற்றில் நீரும் காணப்படும். மது அருந்தியதால் ஏற்பட்ட வாந்திக்குப் பொதுவாக உணவுக் குழாயில் வெடிப்பு ஏற்படும். பின் போன்ற இவை தவிரத் தலைவலி, இழுப்பு நோய்களுக்கான மருந்து உட்கொண்டதை அறிந்து இரத்த வாந்தி 639 பேரியம் எக்ஸ் கதிர்படம் எடுத்தபின் இரைப்பை உணவுக் குழாய் நோய்களை அறிந்து கொள்வது எளிது.மிகத் துல்லியமான முறையில், இரைப்பை உள் நோக்கிக் கருவியை வாயினுள் நுழைத்து, உணவுக் குழாய், இரைப்பை முன்சிறுகுடல் முதலியவற்றில் உள்ள நோய்களையும் நேரடியாக இரத்தம் ஒழுகும் இடத்தையும் அறியமுடியும். மருத்துவம். இரத்த வாந்தி ஏற்பட்டவுடன் நோயாளியைப் படுக்கையில் கிடத்தி ஓய்வு எடுத்துக் கொள்ளச் செய்யவேண்டும். இந்நிலையில் நோயாளி உணர்ச்சி வசப்படாமல் அச்சமின்றி இருக்க இது உதவும். பெருமளவில் ஏற்படும் இரத்த வாந்திக்கு மருத் துவம், மாற்று இரத்தம் செலுத்துவதேயாகும். அதா வது இரத்தம் உடலிலிருந்து எவ்வளவு வெளியேறி உள்ளது என்பதை அறிந்து உடனே இரத்தம் கொடுக்க வேண்டும். மேலும் இரத்த ஒழுக்கு இருந்து கொண்டே இருந்தாலும், அல்லது இரத்த ஒழுக்குக் குப் பின் இரைப்பையில் இரத்தக் கசிவு இருந்தாலும் ரப்பர்க் குழாய் கொண்டு உறிஞ்சி எடுத்த பிறகு சிறிது உப்புடன் ஐஸ் நீரைக் கலந்து, அதே குழா யின் மூலம் செலுத்தி இரைப்பையைக் குளிர் நிலை யில் இருக்கச் செய்து, மறுபடியும் நீரை உறிஞ்சி எடுத்துவிட வேண்டும். இதனால் இரைப்பையில் கசிந்த இரத்தமும் வெளியேறிவிடும். இரைப்பைப் புண்ணிற்குத் திரவமாக அமில எதிர்ப்பு மருந்து களையும் அக்குழாய் வழியாகச் செலுத்த வேண்டும். போர்ட்டல் சிரை அழுத்தத்தினால் உண்டாகும் உணவுக் குழாயின் சிரைப்புடைப்பு வெடிப்பிற்கு செங்ஸ்ட்டேக்கன் என்ற குழாய் மிகப் பயன்படு கிறது. இரைப்பை உள்நோக்கு கருவி மூலம் உணவுக் குழாய் இரத்தப் புடைப்பிற்கு நேரடியாகச் சிரைமூலம் அதன்மீது மருந்தைச் செலுத்திக் குணப் படுத்தமுடியும். இதயப் பழுதற்ற நோயாளிகளுக்கு வாசோபிரி சின் மருந்தைச் சிரை வழியாகச் செலுத்தினால் பயன் உண்டு. இரத்த வாந்தியிலிருந்து விடுபட்ட நோயாளிகள் நலமானபின் காபி, டீ, சிகரெட், மது போன்ற வற்றை அருந்தக் கூடாது. மசாலாப் பொருள்களை யும், சூடான பொருள்களையும் உணவில் இருந்து ஒதுக்கிவிட்டு வாழ்வதால் மறுமுறை இரத்த வாந்தி ஏற்படாமல் தடுக்கலாம். அறுவை மருத்துவம், மருந்துகளின் மூலம் குண மாகாத நிலையில் பொதுவாக 45 வயதிற்கு மேல் அறுவை மருத்துவம் தேவைப்படும். இரத்த ஒழுக் குடன் வயிற்றுவலி அல்லது தொடர்ந்து இரத்தம்