646 இரலை மான்
646 இரலை மான் வனவிலங்குச் சரணாலயத்தில் இவற்றைக் காண லாம். புல் பூண்டுகளை உண்டு வாழும் இவை 20 30 இரவைகளுள்ள சிறு கூட்டங்களாக வாழ்கின்றன; பஞ்சாப், இராஜஸ்தான் போன்ற வட இந்தியப் பகுதிகளில் பலநூறு விலங்குகள் கொண்ட பெரும் மந்தைகளாகக் காணப்படுகின்றன. காலையிலும் மாலையிலும் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக் கும். உச்சிவெயில் நேரத்தில் மரங்களின் நிழலில் படுத்து ஓய்வெடுக்கும். இவை கூரிய கண்பார்வையும். வேகமாக ஓடும் திறனும் உடையவை; இவற்றின் ஒலி உணர்வும், நுகர் உணர்வும் ஓரளவே வளர்ச்சி அடைந்துள்ளன. அச்சுறுத்தப்படும்போது முதலில் குதித்துத் தாண்டி ஓடும், பின்னர் வெகுவேகமாக நான்குகால் பாய்ச்சலில் செல்லும். வயது முதிர்ந்த அனுபவமுடைய பெண் முறுக்குமான் ஒன்று மந்தை யின் முதன்மை விலங்காக இருக்கிறது. இவை தை, மாசி மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன; ஒருமுறையில் ஒன்று அல்லது ரண்டு கன்றுகள் ஈனுகின்றன. தாய், இளங்கன்றுகளைப் புதர்களில் மறைத்து வளர்க்கிறது. ஓராண்டு வளர்ந்த இளங் கன்று தாயுடன் மந்தையில் வாழத் தொடங்குகிறது. செ.மீ. நாற்கொம்பு இரலை என்பது மேற்குத்தொடர்ச்சி மலை நீங்கலாக இந்திய முந்நீரகத்துள்ள மர அடர்த் திக்குறைவான மலைக்காடுகளில் வாழும் நான்கு கொம்புகளுடைய இரலைமான் ஆகும். இதன் தோள் மட்ட உயரம் 65 பின் கொம்புகளின் நீளம் முதல் 8-10 செ.மீ. முன்கொம்புகளின் நீளம் 1-3 செ.மீ. கொம்புகளில் குறுக்கு வரிப்பள்ளம் இல்லை; பெண் இரலைகளுக்குக் கொம்புகள் இல்லை; அதனால் இவை போசெலாஃபினே (Boselaphinae) என்னும் தனி உள்குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பின்கால்களின் போலிக் குளம்புகளுக் நன்கு வளர்ச்சியடைந்த சுரப்பிகள் உள்ளன. இச் சுரப்பிகள் மற்ற இரலை வகைகளில் காணப்படுவதில்லை. உடல்நிறமும் முதுகுப்பக்கத்தில் வெளிர் செம்பழுப்பாகவும் வயிற்றுப் பக்கத்தில் வெண்மையாகவுமிருக்கும்; கால்களின் முன்பக்கத்தில் கருநிறக் கோடுகள் உள்ளன; முன்கால்களின் மேற் பகுதியில் இவை அகலமாகவும் தெளிவாகவும் காணப்படுகின்றன. தனித்தனியாகவோ இணைகளா கவோ வாழும் இவை புற்புதர்கள் அல்லது செடி களின் அடியில் தங்குகின்றன. அடிக்கடித் தண்ணீர் குடிக்கும் வழக்கமுடையவை. மழைக்காலம் தொடங்கு கிடையில் படம் 3. ஏலண்டு இரலை மான்