652 இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம்
652 இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் களுக்கும் இதில் பங்கு உண்டு. இம்முறை அதிக நாள் எடுத்துக் கொண்டாலும், பயனும் முடிவும் நன்றாக அமைவதோடு மீண்டும் ஏற்படுவதையும் குறைக்கிறது. சிறுநீர்ப்பைப் பயிற்சிகள். சிறுநீர்ப் பையினை நன்கு விரிவடையச் செய்தல் நல்ல பயிற்சியாகும். பகல் நேரங்களில் குழந்தை எவ்வளவு நேரம் சிறுநீர் கொள்ள கழிக்காமல் தாங்கிக் முடிகிறதோ அவ்வளவு நேரம் தாங்கிக் கொள்ளுமாறு பழக்க வேண்டும். சிறுநீர்ப்பை நிரம்பி அதன் முழுமையை உணர்ந்த உடனேயே சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கப் பழக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்பை விரிவாகும். ஒரு நாளில் பகல் வேளையில் ஒரு முறை யாவது குழந்தையை ஓர் அளக்கும் ஜாடியில் சிறுநீர் கழிக்கச் செய்து அதன் அளவினைக் குறித்துக் கொண்டு, பின்னர் ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும்போது அதிக அளவு சிறுநீர் கழிக்க இயலு கிறதா என அறிதல் வேண்டும். குழந்தைகளின் சிறுநீர்ப்பை அதிக அளவு சிறு நீரை இரவு நேரங்களில் கொள்ளாது என்றும், ஆகவே அதனை விரிவடையச் செய்யல் பகல் நேரங் களில் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது பெற்றோரின் கடமையாகும். குழந்தைப் பருவத்தில் சிறுநீர்ப் பையின் கொள்திறன் ஒவ்வோர் ஆண்டும் 30-45 மி.லி. ஆகும். எடுத்துக்காட்டாக நான்கு வயதுக் குழந்தையின் சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 120-180 மி.லி. ஆகும். பெரியவர்களின் சிறுநீர்ப்பைக் கொள் திறன் அதிக அளவு 600 மி.லி. ஆகும். கூறிய காரணங்களால் நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரவில் படுக்கையை நனைப்பது ஓர் இயற்கையின் மாறுபாடே.. நான்கு வயதிற்கு மேலும் இப்பழக்கம் தொடர்ந்தால் மருத்துவ உதவி பெறு வது அவசியமாகும். மேற் இயல்பான சிறுநீர்ப்பைக் கொள்திறன் உள்ள குழந்தைகளுக்குச் சிறுநீரோட்டத் தடைப் பயிற் சிகளைக் கற்பிக்க வேண்டும். இப்பயிற்சிகள் படுக் கையில் சிறுநீர் கழித்தலைத் தவிர்க்கும் திறனை அதிகரிக்கும். ஆனால் இதற்குப் பகல் நேரங்களில் அதிக அளவில் பயிற்சிகள் தேவைப்படும். அதிகமான அளவு நீர்மங்களைக் காலை நேரங் களில் அளிப்பது சிறுநீர்ப்பையின் கொள்ளளவை அதிகப்படுத்தும். அதிகப்படியான சிறுநீர் உற்பத்தி யாதல் குழந்தைகளுக்குச் சிறுநீர்ப் பையினை விரி வாக்கும் பயிற்சியையும், சிறுநீரோட்டத் தடைப் பயிற்சியினையும் செயல்படுத்த அதிக வாய்ப்பை அளிக்கும். திரவங்கள் கொடுப்பதை மதிய வேளை யிலிருந்து குறைத்துக் கொள்ளவேண்டும். இரவுச் சிறுநீர்க் கூக்குரல் மணிகள். புதுமையான இரவுச் சிறுநீர்க் கூக்குரல் மணிகள் மேலை நாடு களில் உள்ளன. இரவு நேரத்தில் குழந்தைக்குச் சிறுநீர் வரும்போது குழந்தையை இவை தூக்கத்தி லிருந்து எழுப்பிவிடும். இவை மிகவும் எடை குறை வானவை. சிறிய மின்கலங்களால் இயக்கப்படும் இவற்றை எங்கும் எடுத்துச் செல்லலாம். இவற்றைக் குழந்தைகளின் உள்ளாடைகளில் இணைத்துவிட லாம். இக்கூக்குரல் மணிகள் குழந்தைகள் இரவில் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தச் சிறுநீர்ப்பை விரிவடைந்தவுடன் குழந்தைகளை விழிப்படையச் செய்துவிடுகிறது. இவை சிறிய சிறுநீர்ப்பையினை விரிவாக்கும் பயிற்சியினைக் கடைப்பிடித்து வரும் குழந்தைகளுக்கும் மிகவும் பயன்படும். ஒரு குழந்தையை எழுப்பச் சிறந்த நண்பன் தானாக அக்குழந்தையேதான். ஏற்படுத்திக் கொள்ளும் மன இணக்க நினைவுகள் பயனுடைய வையாக இருக்கும். குழந்தை தூங்கப் போகுமுன் சிறுநீர் வரும் சமயத்தில் எழுந்து சிறுநீர் கழிக்கு மிடம் செல்ல வேண்டும் எனத் தானே நினைவூட்டிக் கொள்ள வேண்டும். மேலும், தானே படுக்கையி லிருந்து எழுந்து குளியல் அறைக்குச் சென்று சிறுநீர் கழிக்கும் தொடர் நிகழ்ச்சிகளை நினைவூட்டிக் கொள்ளுதல் அவசியம். படுக்கைக்குப் போன பின்னர் நான்கு மணி நேரம் கழித்து எழுமாறு கூக்குரல் கடிகாரத்தினை அமைத்துக் குழந்தையின் கைக்கெட்டாத தூரத்தில் வைத்து விடுதலும் இரவில் எழுந்துகொள்ள ஒரு வழியாகும். தானே ஏற்படுத்திக் கொள்ளும் மன இணக்க முறை நாள்தோறும் இரவு நேரங்களில் ஐந்து வயதிற்கு மேலுள்ள குழந்தைகளுக்குப் பய யனுடையதாக இருக்கும். அவ் வப்போது பெற்றோர்கள் குழந்தைகளை எழுப்பிக் கழிப்பறைக்கு நடக்கச் செய்து அல்லது தூக்கிக் கொண்டு சென்று சிறுநீர் கழிக்கவும் செய்ய வேண்டும். மருத்துவமுறைகள். சிறிய சிறுநீர்ப்பை கொள் திறன் இருக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தும், நற்பலனளிக்கத் தக்கதுமான மருந்துகள் எதுவு மில்லை. இயல்பான சிறுநீர்ப்பைக் கொள்ளளவுடன் எப்போதாவது இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்க முடைய குழந்தைகள் சில மருந்துகளால் நல்ல பயன் பெறலாம். சிறுநீர்ப்பை இசிவை முறிக்கும் மருந்துகளும் (antispasmodic drugs) சிறுநீர் அளவைக் கட்டுப் படுத்தும் மருந்துகளும் (antidiuretic drugs) தற்காலி கமாகச் சிறுநீர்த் தேக்கத்தை ஏற்படுத்தி ஓரளவு வெற்றியினை அளிக்கும். பொதுவாக இம் மருந்து களை எட்டு வயதிற்கு மேலுள்ள குழந்தை களுக்குத்தான் அளிக்கவேண்டும். வயது சார்ந்த அணுகுமுறைகள். நான்கு வயதி லிருந்து ஆறு வயதுக்குள் ஊக்குவிப்பு அறிவுரை களும், ஆறு வயதிலிருந்து எட்டு வயதுக்குள் சிறு