பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவில்‌ பார்வைத்‌ தெளிவின்மை (மாலைக்கண்‌) 653

நீர்ப்பைப் பயிற்சிகளும், எட்டு வயதிற்குமேல் இரவுச் சிறுநீர்க் கூக்குரல் மணி அல்லது மருத்துவ முறை களும் வயது சார்ந்த அணுகுமுறைகளாகும். மீண்டும் இப்பழக்கமேற்படுதல் அல்லது மருத்துவ முறைத் தோல்விகள். எல்லா முறைகளிலும் இவை இரண்டுமே பொதுவாக ஏற்படக் கூடியவையாகும். மருத்துவத்தில் பயன் பெற்று, மீண்டும் இப்பழக்கம் தொடருமாயின் மருத்துவர் மறுமுறையும் வெற்றி கரமான மருத்துவமுறைகளைத் தொடங்கலாம். சில நேரங்களில் 2-3 மாதங்களுக்குப் பிறகு எம்முறை யான மருத்துவமும் பலனளிக்காமல் வெறுப்படை யச் செய்யும். அந் நேரங்களில், அட்டவணையைத் சொல்ல பின்பற்றுமாறு வேண்டும். தவறாது மேலும் சிறுநீர்ப்பை இன்னமும் பக்குவமடைய வில்லை என அறிவுறுத்த வேண்டும். இரவில் சிறு நீர் கழிக்கும் பழக்கத்தால் எக்குழந்தையும் இறந் தது கிடையாது. ஆனால் மருந்துகள் குழந்தை களைப் பாதிக்கலாம். ஆகவே எம் மருந்தையும் தொடர்ந்து அளித்தல் கூடாது. இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நலப்படுத்தக் கூடிய குறிப்பிட்ட காலம் வரையுள்ள சிறுநீர்ப் பையின் கொள்திறனில் ஏற்படும் வேறுபாட்டால் ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும். குழந்தையின் வயதும் தற்போதைய மருந்துவ முறைகளும் வெற்றி கரமான முடிவுகளை அளிக்கும். குறிப்பிட்ட மருத் துவ முறைகளை வயதிற்கேற்றவாறு பரிந்துரை செய்வதும் மிகையான மருத்துவத்தைத் தவிர்த்தலும் அவசியமாகும். இதனைப் பெற்றோர் மருத்துவர் இருவருமே உணர்தல் குழந்தையின் எதிர்கால நல் வாழ்விற்கு வழிகோலும். ப.ரா.சந்தானகிருஷ்ணன் நூலோதி Nelson, Text Book of Paediatrics, Eleventh Edition, W. B. Saunders and Company 1979. இரவில் பார்வைத் தெளிவின்மை (மாலைக்கண்) இரவில் பார்வைத் தெளிவின்மையை (night blin- dness) மாலைக்கண் நோய் என்றும் அந்திமாலைக் கண் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்நோய் உள்ள பொழுதிலும், வர்களுக்கு மாலைப் குறைவான வெளிச்சத்திலும் நன்றாகப் பார்க்க முடிவதில்லை. நல்ல பார்வையுடைய ஒருவர் வெளிச்சத்தி லிருந்து இருட்டறைக்குச் சென்றால் சில நொடிகளில் அவர் இருட்டிலும் நன்றாகப் பார்க்க முடிகிறது. ஆனால் இரவில் பார்வைத் தெளிவில்லாதவருக்கு இரவில் பார்வைத் தெளிவின்மை (மாலைக்கண்) 653 அவ்வாறு வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குச் சென் றால் பார்வை துல்லியமாகவும் கூர்மையாகவும் இருந்தால் இராது. ஆனால் வெளிச்சத்திலேயே இந்த நோய் உடையவர் நன்கு பார்க்க முடிகிறது. . இந்த மாலைக்கண் நோய் சத்துக்குறைவான உணவை உட்கொள்வதால் ஏற்படும். வைட்டமின் குறைபாட்டினாலும், சில சமயங்களில் பிறவி யிலேயேயும் ஏற்படுகின்றது. ரெட்டினைட்டிஸ் பிக் மென்டோசா (retinitis pigmentosa) என்ற இப் பிறவிக் கோளாறு, மிகவும் நெருங்கிய. இரத்தத் குழந்தைகளுக்கு தொடர்புள்ள பெற்றோர்களின் ஏற்படலாம். எனவே நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்வது கூடாது. இந்த நோய் உள்ள வர்கள் மாலைக்கண் நோயுள்ளவர்களாக இருப் பார்கள். அதன் பின் மெல்ல மெல்ல அவர்கள் பார்வையை இழந்து நிரந்தரக் குருடர்களாகவும் ஆகி விடுவார்கள். அதிக இரத்தச் சோகை உடையவர்களுக்கும் இந்த நோய் உண்டாகலாம். இரத்தச் சோகை கிராமப்புறங்களில் பரவலாக உள்ளது. இந்த இரத் தச் சோகைக்கு முக்கிய காரணம் வயிற்றிலுள்ள கொக்கிப் புழுக்களே ஆகும். விழித்திரையில் கம்பு போன்ற நரம்பு முனை களும் (Tods) கூம்பு போன்ற நரம்பு முனைகளும் (cones) உள்ளன. இவற்றில் கம்பு நரம்பு முனைகள் வைட்டமின் "ஏ" ஊட்டச்சத்தால் வேதியல் மாறுதல் களை ஏற்படுத்தி நுண்மின் அலைகள் மூலம், இர விலும், பகலிலும் நம்மை எல்லாப் பொருள்களை யும் பார்க்கச் செய்கின்றன. கம்பு நரம்புமுனை இரவுப்பார்வைக்கும், கூம்பு நரம்புமுனை பகல் நேரப்பார்வைக்கும், வண்ணப் பார்வைக்கும் காரணமாயிருக்கின்றன. இந்தக் கம்பு நரம்பு முனைகளுக்கு வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து கிடைக்காதபோது மாலைக்கண் ஏற்படுகிறது. வைட்டமின் "ஏ' சத்துக் குறைவு விழிவெளி இழைமத்தில் (conjunctive) சுருக்கங்களையும் உலர்ந்த நுரைபோன்ற திட்டுகளையும் ஏற்படுத்துகிறது. (xerosis bitct spots,) நிறமிலி இழைமம் (cornea) நெகிழ்ந்து போய் புண்ணாகிக் கரைந்து வெண்மை யாகிச் சில நாள்களில் முழுமையாக அழிந்து விடு கின்றது. இதனால் பல குழந்தைகள் பார்வையை இழக்கின்றார்கள். ஈரல் நோயும், சத்தில்லாத உணவை உட் கொள்ளுவதும் இந்த மாலைக்கண் நோய்க்குப்பிற காரணங்களாகும். வைட்டமின் "ஏ" சத்து கீரை வகைகளிலும், முக்கியமாக முருங்கைக் கீரையிலும், மீன் எண்ணெய் ஈரல் முதலியவற்றிலும் அதிகமாக உள்ளது. இது