இராமபாணம் 657
இராமபாண GOOT to 657 இராம துளசி இது ஆஸிமம் கிரேட்டிஸிமம் லின் என்று தாவர வியலில் அழைக்கப்படுகிறது. இராமதுளசி, நாய்த் துளசி, திருநீற்றுப் பச்சிலை போன்ற துளசி வகை களைவிட அளவில் பெரியதாகும்; ஏறக்குறைய ஒரு புதர்ச்செடி அளவுக்கு (4-8 அடி உயரம் வரை) வளரக் கூடியதாகும். வங்காளம், கிழக்கு நேபாளம், தக்காண பீடபூமி ஆகிய பகுதிகளில் தோட்டங்களில் பயிர் செய்யப்படுகின்றது. இது இலங்கையிலும் பரவியுள்ளது. மேற்கு இந்தியாவில் இது சாதாரணக் காட்டுச் செடியாகக் காணப்படுகிறது. ஆனால் இது ஓர் இந்தியச் செடியா என்பது ஐயத்திற்குரியது. நீள இராம துளசியின் இலைகள் நறுமணமுள்ளவை; 2-4 அங்குல நீளமானவை; முட்டை வடிவானவை: இலை ஓரங்கள் பல் போன்று வெட்டப்பட்ட தன்மை யுடையவை. இலைக்காம்பு 1-2 அங்குல மானது. மலர்த்தொகுப்பு மெல்லியது. இருபால் மலர்களும் சிறியவை. புல்லிவட்டம் ஒழுங்கற்றது. குழாய் உருக்கொண்டு இரு சிறிய பகுதிகளாகவும் மூன்று பெரிய பகுதிகளாகவும் உள்ளது. அல்லி வட்டம் ஒழுங்கீனமானது; ஏறத்தாழ புல்லிவட்டம் அளவுடைய அல்லி வட்டத்தின் அமைப்பு இரு உதடு களைப் போன்றது ( bilabiate); மேலுதடு நான்கு இதழ்களாகவும், கீழுதடு முழுதாகவும் அமைந்துள் ளன. மகரந்தங்கள் நான்கு இருவேறுபட்ட நீளமுள் ளவை (didinamous); அல்லிவட்டத்தைவிட நீளமா னவை; தாடியுடையவை ; சூல்பை மேல் மட்டமானது; நான்கு அறைகளால் ஆனது. ஒவ்வோர் அறையிலும் ஒரு சூல் நட்லெட் எனப்படும் காய் உள்ளது. இராம துளசியின் இலைச்சாறு பாலின நோய் களுக்கு மருந்தாகவும், விந்து பலவீனத்தைத் தடுக்க வும் பயன்படுத்தப்படுகிறது. இலைப்புகை வாத நோய் குணப்படுத்தும் முறையில் பயன்படுகிறது. விதைகள் தலைவலி, நரம்புத் தளர்ச்சி தொடர்பான நோய்களின் மருத்துவத்தில் பயன்படுகின்றன. 199 வே. சங்கரன் நூலோதி.George Watt, Dictionary of Economic Products of India, Vol. IV, Cosmo Publication, Delhi. 1972; Hooker J.D., Flora of British India, London, 1876-97. இராமபாணம் சிறிய, தட்டையான உடலுடைய, இறக்கையற்ற, லெப்பிஸ்மா என்ற இனத்தைச் சேர்ந்த பூச்சிக்கு அ.க.4-42 . இராமபாணம் என்று பெயர். உடல் வெண்மை யான, வெள்ளிபோன்ற பளபளக்கும் செதில்களால் மூடப்பட்டிருப்பதாலும், விரைவாக இடம்பெயர்ந்து செல்வதாலும், இது வெள்ளிமீன் என்று அழைக்கப் படுகிறது. இப்பூச்சிகள் சுவடிகளையும், நூல்களை யும் தின்று துளைத்து விடுகின்றன. அதனால் இவற்றை எழுத்தாணிப்பூச்சி என்றும் குறிப்பிடுவர். இந்தவகைப் பூச்சிகள் உலகெங்கும் பரவியுள்ளன: ஓலைச்சுவடிகள், நூல்கள், துணிப்பேழைகள் ஆகிய வை இருண்ட, குளிர்ச்சியான இடங்களில் காணப் படுகின்றன. இவை இரவில் இயங்கும் இயல்புடையன; ஏறத்தாழ ஒரு செ.மீ. உடல் நீளமுடையன. உணர் கொம்புகளும் வால் நீட்சியும் உடலை விடக் குறைந் தவை. ஆண், பெண் பூச்சிகள் தோற்றத்தில் ஒத் திருக்கின்றன. இராமபாணம் இப்பூச்சியின் தொல்லியல்புக்கேற்ப இதன் இனப் பெருக்கமும் மற்ற பூச்சிகளிலிருந்து வேறுபட்ட முறையிலேயே நடைபெறுகிறது. விந்தணுக்கள் புணர்ச்சியின்போது நேரடியாக ஆண்பூச்சியிலிருந்து பெண்பூச்சிக்கு மாற்றப்படுவதில்லை. இவற்றில் விந்தையான காதலூடாட்ட இயக்கங்கள் காணப் படுகின்றன. இவ்வியக்கங்களின் மூலம் ஆண்பூச்சி பெண்பூச்சியின் இசைவைத் தெரிந்துகொண்டபின், தரையில் சற்று உயரமான இரண்டு இடங்களுக் கிடையில் தன் புணர்உறுப்பிலிருந்து வெளிவரும் மெல்லிய இழைகளை ஒட்டவைக்கிறது. பின்னர் இந்த இழைகளில் தன் விந்தணுக்குவியலை ஒட்ட வைக்கிறது. பெண்பூச்சி, தன் மயிர் வால்நீட்சியால் இந்த இழைகளைத் தொட்டுணர்ந்து விந்தணுக்குவி யலை வயிற்றுப் பகுதியால் தேடி இனப்பெருக்கப்