இராமன் விளைவு. 659
இராமன் 1970 ஆம் ஆண்டு பெங்களூரில் உயிர் நீத்தார்.காண்க. இராமன் விளைவு. இராமன் விளைவு கொ.க.ம. ஒற்றை நிறெஒளி (monochromatic light) அல்லது ஒரு குறுகிய அதிர்வெண் பட்டைக்குள் அடங்கிய கதிர் வீச்சு, ஊடுருவிச் செல்லக் கூடிய ஒரு சீரான பருப் பொருள் ஊடகத்தின் வழியாகச் செல்லும்போது சிதறலுக்கு உள்ளாகின்றது. சிதறிய ஒளி, படுகதிரின் அதிர்வெண்ணைத் தவிர, அவ்வதிர்வெண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட அளவில் கூடுதலாகவும், குறைவாக வும் உடைய அதிர்வெண்களையும் பெறுகின்றது. மேலும் அதன் நிலைக் கட்டத்தில் (phase) ஒரு தொடர்பிலா மாறுதலும் காணப்படுகின்றது. இந்தச் சிறந்த இயற்பியல் நிகழ்வுதான் இராமன் விளைவு (Raman effect) எனப்படுகின்றது. இராமன் சிதறல், டின்டால் இராலே ஆகிய சித றலிலிருந்து மாறுபட்டது. டின்டால், இராலே ஆகிய சிதறலில், சிதறலுறும் ஒளி, படுகதிரின் அதிர் வெண்ணை மட்டுமே பெற்றிருக்கின்றது; மேலும் அதன் நிலைக்கட்டம், வரையறுக்கப்பட்ட ஒரு தொடர்பில் படு கதிரிலிருந்து வேறுபட்டிருக்கின் றது. சாதாரண இராமன் சிதறலில், சிதறலுறும் ஒளியின் செறிவு, இராலே சிதறலில் காணப்படு வதைவிட ஆயிரம் மடங்கு குறைவானதாகும். இராமன் சிதறல், காம்ட்டன் சிதறலிலிருந்தும் மாறு பட்டது. ஏனெனில் காம்ட்டன் சிதறலில், படுகதிரை விடக் கூடுதலான அலை நீளமுடைய (அல்லது குறை வான அதிர்வெண்ணுடைய) கதிர்கள் மட்டுமே விளைகின்றன. இராமன் விளைவில் உள்ளதுபோல, அதிர்வெண் பெயர்ச்சி படுகதிரின் அலை நீளத்தைப் பொறுத்து இருப்பதில்லை என்றாலும், இராமன் விளைவிற்கு மாறாகக் காம்ட்டன விளைவில் இது சிதறலை ஏற்படுத்தும் பருப்பொருளின் தன்மையைச் சார்ந்திருப்பதில்லை. கண்டுபிடிப்பு. ஊடகத்தில் விளையும் ஒளிச்சிதறல் பற்றி முன்னரே அறிவியலார் முற்றும் அறிந்திருந்த போதிலும் தாழ்ந்த செறிவின் காரணமாக, இராமன் விளைவு 1928 ஆம் ஆண்டு வரை கண்டுபிடிக்கப் படவில்லை. எலெக்ட்ரான்களால் எக்ஸ் கதிர்கள் சிதறும்போது, அவற்றின் அதிர்வெண் ஒரு குறிப் பிட்ட வரைமுறையில் மாறுதலுக்கு உள்ளாகின்றது என்பதை எ.ஹச்.காம்ட்டன் கண்டறிந்தார். வானமும் கடலும் நீல நிறமாகக் காட்சி அளிப் பதற்கு இந்தச் சிதறலே காரணமாயிருக்க வேண்டும் எனற எண்ணத்தால் தூண்டப்பட்டு, அ.க.4-42அ ராமன், இராமன் விளைவு 659 கிருட்டிணன் என்ற இரு இந்திய இயற்பியல் அறி ஞர்கள், சூரிய ஒளி எங்ஙனம் நீர்மங்களால் சிதற் லுக்கு உள்ளாகின்றது என்பது பற்றி விரிவாக ஆராயத் தொடங்கினர். தகுந்த ஒளி (நிற) வடிப் பான்களைக் (filters) கொண்டு, சிதறலுறும் ஒளி, வடிக்கப்பட்ட ஒளியின் அதிர்வெண்ணைவிடக் குறைந்த அல்லது கூடுதலான அதிர்வெண்களையும் பெற்றிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இவை முறையே ஸ்ட்டோக்ஸ் கோடு எதிர் ஸ்ட்டோக்ஸ் கோடு என்று குறிப்பிடப்படுகின்றன. பின்னர் பாத ரச ஆவி விளக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட ஒற்றை நிற ஒளியை மட்டும் பயன்படுத்தி, சிதறலுறும் ஒளி யில் காணப்படும் அதிர்வெண் வேறுபாடு அல்லது பெயர்ச்சி, சிதறலை ஏற்படுத்தும் ஊடகத்தில் உள்ள உட்கூறின் தனிச் சிறப்புப் பண்பாகும் என்பதை நிறுவினர். இவ்வதிர்வெண் வேறுபாட்டை இராமன் பெயர்ச்சி என்று குறிப்பிடுவர். பொதுவாக இதன் அளவு 100 செ,மீ - 1 இலிருந்து 3000 செ.மீ-1 வரை இருக்கும். மின்காந்த நிறமாலையில் இவை சேய்மை அண்மை அகச்சிவப்புப் பகுதிகளில் அமைவதால், இராமன் விளைவுக்கோடுகள் மூலக்கூறுகளின் சுழற்சி அதிர்வு நிலைப் பரிமாற்றங்களோடு தொடர்புடைய னவாக இருக்க வேண்டும் என்பதையும் இவர்கள் உறுதிப் படுத்தினர். இராமன் நிறமாலையியல். இராமன் சிதறலை நிர லியல் முறைப்படிப் பகுப்பாய்வு செய்தபோது, ஒரு ஒற்றைநிறஒளி ஒரு பொருளால் சிதறலுக்கு உள்ளாகி ஏற்படுத்தும் நிறமாலையில் காணப்படும் புதிய அலைகளின் தொகுப்பு, சிதறலுக்குக் காரணமான அப்பொருளின் சிறப்புப் பண்பாகும் என்பது கண்ட றியப்பட்டது. சிதறலுறும் ஒளியின் இந்த நிறமாலை இராமன் நிறமாலை என்றழைக்கப்படுகிறது. அணுக் களால் சிதறலடித்து இராமன் விளைவை ஏற்படுத்த முடியும் என்றாலும் இது உண்மையில் மூலக்கூறு, படிகங்கள் ஆகியவை சார்ந்த நிறமாலையியலில் மிக வும் பெரும் பங்கு உடையதாக இருக்கின்றது. லேசர் கண்டுபிடிப்பால் இராமன் விளைவு சார்ந்த ஆய்வுகள் புத்தெழுச்சிப் பெற்றன. இராமன் விளைவு தொடர்பான பல உண்மைகள் கண்டுபிடிக் கப்பட்டன. லேசர் ஒளிக்கற்றை, செறிவுமிக்கதும். தளவாக்கம் செய்யப்பட்டதும், நிலைக் கட்டத்தால் ஒருங்கிணைந்ததும் ஆகும். இதை ஓர் ஒற்றைநிற ஒளியாகக் ஏற்படுத்திக்கொள்ள முடியும். மிகவும் நுட்பமாக ஒருதிசைப்படுத்தவும் ஒரு முனைப்படுத்தவும் முடிவதால், அதன் குறுக்குப் பரப்பை வேண்டிய அளவு சுருக்கிக் கொள்ள விளைவை முடிகின்றது. லேசர் ஒளி இராமன் கூ மிக எளிதில் தூண்டக் கூடியதாக இருப்பதால், இராமன் விளைவு ஆய்விற்கு, மிகவும் சரியான ஒளி மூலம் லேசர் என்றே கூறலாம். சாதாரண ஆய்வு