இராமன் விளைவு. 661
வகுக்கப்பட்டு விரவலுக்கு உள்ளாகும்போது, அவற் றின் ஆற்றல் ஓர் ஒளிப்பெருக்கியால் (photomultiplier) உணரப்படுகின்றது. சமிக்கை அலையைத் தேவை யான அளவு, தக்க அலைப்பெருக்கி (amplifier) களைக் கொண்டு பெருக்கிக் கொள்ளலாம். இவற்றை வரைகோடு அலைவியால் (strip - chart recorder) ஒரு நாடாத்தாளில் பதிவு செய்துகொள்ள முடியும். இந்தப் பதிவு செய்யும் கருவியும், ஒற்றைநிற அளவீட்டுமானியும், ஒருங்கிணைந்த வகையில் செயல் பட D என்ற தகுந்த ஒருங்கிணைப்பு அமைப்புகளை இணைத்துக் கொள்ள வேண்டும். M, என்ற குழியாடியைப் பயன்படுத்தி - 90° இல் சிதறலுற்றுச் செல்லும் ஒளியை எதிரொளித்து + 90 இல் சிதறலுற்றுச் செல்லும் ஒளியைச் செறிவுள்ளதாக்கிக் கொள்ள முடியும். லேசர் ஒளி ஒருபடிச் சார்பில் தளவாக்கமுற்றிருப்பதால், சிதற லுற்றுச் செல்லும் ஒளியின் தளவாக்கப் பண்பு, ஆய் விற்குரிய ஒரு சிறப்புக் கூறாகும். தளவாக்கத் தரத்தை மதிப்பிட P என்ற பகுப்புணர்வான் (analyser)களை L க்கும். ஒற்றைநிற அளவீட்டுமானிக்கும் இடையில் புகுத்திக்கொள்ளலாம். கார்பன் டெட்ராகுளோரைடு நீர்மத்தை ஹீலி யம் - நியான் லேசரின் 632.8 vm (6328A) அலைநீள முடைய சிவப்பு நிற அலைகளால் தாக்கி, ஒளிமின் இராமன் விளைவு 661 பெருக்கியின் துணை கொண்டு பதிவு செய்யப்பட்ட காட்டப் படம் 2 இல் இராமன் நிறமாலை பட்டுள்ளது. இதில் சிதறலுறும் ஒளியின் ஒளிச்செறிவு ஒரு தன்னிச்சை அலகில், அதன் அலை எண்ணைச் சார்ந்த வரை படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அலைஎண், செ. மீ -1 அலகாலும் இடப் பெயர்ச்சியின் மதிப்பாலும் (அதாவது சிதறலைத் தூண்டும் அலையின் அலையெண்ணைச் சுழியெனக் கொண்டும்) குறுப்பிடப்படும். ஆய்வு முறை வசதிக் காக இராமன் நிறமாலையில் விவரங்களை அதிர் வெண்ணில் குறிப்பிடாமல், அலை எண்ணில் குறிப் பிடுவது வழக்கமாகக் கொள்ளப்படுகின்றது. (அதிர் வெண் = ஒளியின் திசைவேகம் x அலை எண்). படம் 2 இல் காட்டப்பட்டுள்ள இராமன் நிறமாலையில் மிகவும் செறிவுமிக்க ஓர் ஒளியை (460 செ.மீ. -1 ஸ்ட்டோக்ஸ் கோடு) பகுதிறன் மிக்க ஓர் உணர் வானால் ஆயும்போது, அது படம் 3 இல் காட்டப் பட்டப்படி அமைந்திருக்கின்றது என்பது தெரியவந் தது. இதிலிருந்து ஒவ்வொரு வரியும், உண்மையில் பல (10 நுணுக்கமான இடைவெளியுடன் கூடிய மடங்கு பகுப்புத்திறன் கூட்டி எடுக்கப்பட்டது) கூறு களை உள்ளடக்கி இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இது குளோரினின் C1 -35 மற்றும் CI -37 என்று குறிப்பிடப்படுகின்ற ஐசோட்டோப் ஏற்படுகின்றது. இதனால் கார்பன், புகளால் 1 - எதிர் ஸ்ட்டோக்ஸ் கோடுகள் ஸ்டோக்ஸ் கோடுகள் வளிமம்- 6398.173 A வெற்றிடம் = 25807 Cm cm-1 -1000 -750 -500 -250 0 +250 +500 +750 6700 6600 6500 6400 6300 6200 6100 6.000 Å படம் 2. லேசரின் 6328 A கோட்டால் தூண்டப்பட்ட கார்பன் டெட்ராகுளோரைடின் இராமன் நிறமாலை