பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமானுஜம்‌ 657

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.ஆனால் உடல் நலக்குறைவால் படிப்பைத் தொடர முடியாமல் கும்பகோணத்திற்குத் திரும்பி விட்டார். மீண்டும் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியும் வெற்றி பெறாததால் கல்லூரிப் படிப்பை விட்டு விட்டார். ஆயினும் முழு நேரமும் கணிதத் திலேயே ஈடுபடலானார். பல புதிய கணிதமுறை களை உருவாக்கிக் குறிப்பேடுகளில் குறித்து வைத் தார். 1901 இலிருந்து 1911 வரையிலான காலத்தில், மாயச் சதுரங்கள், தொடர்பின்னங்கள், அதிபர வளைவு வடிவக் கணிதம், பகு நிலை எண்கள், பகா எண்கள், எண்களைப்பிரித்து எழுதுதல், நீள்வளை யத் தொகையீடு போன்ற கணிதப் பிரிவுகளில் பல ஆய்வுகள் செய்து தேற்றங்களைக் குறித்திருக்கிறார். ஆனால் பல தேற்றங்களுக்கு நிறுவனங்கள் குறிக் கப்படவில்லை. ஜார்ஜ் ஷீபிரிட்ஜ்கார் என்ற அறிஞர் தூய, பயன்முறைக் கணிதத்தில் எழுதிய இரு தொகு திக் கட்டுரைகளில் உள்ள தேற்றங்களைத் தாமே தனிப்பட்ட முறையில் எழுதி நிறுவிக் காட்டினார். 1911 ஆம் ஆண்டிலேயே இந்திய கணிதவியற் கழக இதழில் (Journal of the Indian Mathematical society) கட்டுரைகள் எழுதியுள்ளார். 1909 ஆம் ஆண்டில், தம் இருபத்திரண்டாம் வயதில் ஜானகியைத் திருமணம் செய்துகொண்டார். குடும்பப்பொறுப்பின் காரணமாக வேலைதேடும் நிலை அவருக்கு ஏற்பட்டது. 1912 ஆம் ஆண்டு சென்னைத் தலைமைக் கணக்கியல் அலுவலகத்திலும் 1912 ஆம் ஆண்டு முதல் சென்னைத் துறைமுக அலுவலகத்திலும் பணிபுரிந்தார். போதுமான ஊதி யம் கிடைக்காததால் சில மாணவர்களுக்குக் கணிதம் கற்றுக்கொடுத்து, ஓரளவு குடும்பச்செலவுகளைச் சமா ளித்து வந்தார். ஆயினும் அலுவலகத்திலும், கணிதப் புதிர்களையும், தேற்றங்களின் நிறுவனங்களையும் கண்டுபிடிப்பதிலேயே மிகுந்த கவனம் செலுத்தினார். அச்சமயத்தில், கணிதத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட சென்னைப் பொறியியற் கல்லூரிப் பேராசிரியர் திரு.சி.எஸ்.ட்டி. கிரிஃபித் சென்னைத் துறைமுக அலுவலகத்தின் தலைவர் சர். ஃபிரான்சிஸ் ஸ்பிரிங், மாவட்ட ஆட்சித்தலைவர் இராமச்சந்திர ராவ், லண்டன் பல்கலைக் கழகக் கல் ல்லூரி ரிப் பேரா சிரியர் எம்.ஜி.எம்.ஹில், இந்திய வானிலையியல் துறைத் தலைவர் குல்பர் வாக்கர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் பி.ஹனுமந்தராவ், நீதிபதி பி. ஆர், சுந்தரமய்யர், சென்னைத் துறைமுக அலுவலக ஆகியோரின் இராமானுஜம் மேலாளர் சர். எஸ். நாராயணன் ஊக்கத்தாலும், உதவியாலும், தொடர்ந்து கணித ஆய்வில் ஈடுபட முடிந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், கணிதவியல் பேராசிரியராக இருந்த திரு காட்ஃப்ரே ஹெச். இராமானுஜம் 667 கழகத்திலிருந்து ஹார்டி என்பவர், பல்கலைக் வெளிவரும் இதழொன்றில் சில சிக்கலான கணக்கு களைக் குறிப்பிட்டிருந்தார். இவற்றைக் கண்ட இராமானுஜம் உடனே அதில் குறிப்பிட்ட வினாக் களுக்கு, எளிய முறையில் விடைகளை எழுதி அனுப் பியதுடன், 1913 ஆம் ஆண்டு,ஹார்டியுடன் கடிதத் தொடர்பும் கொண்டார். இவ்விடைகளைக் கண்ட ஹார்டி பெரிதும் மகிழ்ந்து, இந்திய நாட்டில் சிறந்த கணித அறிஞர் ஒருவர் வறுமையில் வாடுவதைக் கேட்டு வருத்தமுற்று, அவரை இங்கிலாந்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்த டாக்டர் வாக்கர் என்பவர் தம் வேலை தொடர்பாகச் சென்னைக்கு வந்ததும், இராமானு ஜத்தைப் பற்றிக் கேள்வியுற்று, சென்னைப் பல் கலைக் கழகத்தில் பொருளுதவி பெற்றுக் கணித வியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிய ஏற்பாடு செய்தார். அத்துடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்து சென்னைவந்த மற்றொரு கணித அறிஞர் ஈ.ஹெச் நெவில் மூலமாக, ஹார்டி, இராமானுஜத்தை இங்கிலாந்துக்கு வர ஏற்பாடு செய்யும்படிக் கேட்டுக் கொண்டார். வைதீகக் குடும் பத்தில் பிறந்த இராமானுஜம், குடும்பத்தில் பலரின் எதிர்ப்புக்களுக்கிடையே, நண்பர்களின் உதவியுடனும் சென்னைப் பல்கலைக் கழகப் பொருளுதவியுடனும், 1914 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்று கேம் பிரிட்ஜிலுள்ள ட்ரினிடி கல்லூரியில் கணிதவியல் துறையில் பணி ஏற்றார். தனித்தும், ஹார்டியுடன் இணைந்தும் பல புதிய ஆய்வுகளைக் கண்டுபிடித்து மேனாட்டு அறிவியல் இதழ்களில் அவ்வப்போது அவற்றை வெளியிட்டார். எண் கணிதவியலில், (number கோட்பாடு theory), ஈ யின் தோராய மதிப்புகள், உயர்நிலைப் பகுநிலையெண்கள் (high composite numbers) வரை யறுத்த தொகை (definite integrals), எண் அளவு (modular), அதிவடிவச் சார்புகள் (hyper geometric functions), நீள்வளையத் தொகையீடுகள் (elliptic integrals), ரீமான் தொடர் (Riemann series) போன்ற பல அரிய, கடினமான பகுதிகளில் ஆய்வுகள் நடத்திக் கட்டுரைகள் வெளியிட்டார், அவருடைய தொடர் பின்ன (continued fraction) ஆராய்ச்சியின் முடிவு பல கணித அறிஞர்களை வியப்பில் ஆழ்த் தியது. அவர் உடல் நலம்குன்றி மருத்துவமனையி லிருந்தபோது ஹார்டி அவரைப் பார்க்கத் தம் காரில் வந்தார். காரின் பதிவெண் 1729 என்றதும் இராமானுஜம் அந்த எண் இரண்டு வகைகளில், இரண்டு கணங்களின் கூடுதலாகக் (sum of 2 cubes ) குறிக்கப்படும் மிகச்சிறிய எண் (13+123 =93+ 103 = 1729) என ஒரு விநாடியில் கூறியதைக் கேட்ட ஹார்டி அவரின் கணிதத் திறமையைக் கண்டு வியப்