670 இரிடியம்
670 இரிடியம் கனிமம் இராஸ்பைட்டு (raspite) ஆகும். இதன் வேதி யியல் உட்கூறு Pbwo4. இக்கனிமம் ஸ்டோல சைட்டை ஒத்த பண்புடையதாக உள்ளது. ஸ்டோல சைட்டும் இராஸ்பைட்டின் வேதியியல் உட்கூறைக் கொண்டுள்ளது. ஆனால் நாற்கோணப் படிகத் தொகுதியில் படிகமாகியுள்ளது. இராஸ்பைட்டு இயற்கையில் படலங்களாகவும், பிற உல்பரமைட்டு கனிமங்களுடன் சேர்ந்து படிசு உருவிலும் காணப் படுகின்றது. இது பழுப்பு, மஞ்சள் வண்ணம் கொண்டும், செவ்விணை வடிவப்பக்கத்தில் (100) கனிமப் பிளவு கொண்டும் இதன் படலங்கள் செவ் விணை வடிவப் பக்கத்திற்கு (100) இணையாக நீண்டும், அதே செவ்விணை வடிவப் பக்கத்தில் (100) இரட்டுரல் (twinned) கொண்டும் காணப்படும். இதன் கடினத்தன்மை 2.5 ஆகவும், இளகுந்திறன் 2.5 முதல் 3 வரையிலும், அடர்த்தி மிகுந்தும் காணப் படுகிறது. இக்கனிமம் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் சிதைவடையக்கூடியது. மேற்கூறியவாறு இது ஒற்றைச் சரிவுத் தொகுதியில் படிகமாகியுள்ளது. இதன் படிக அச்சு விகிதங்கள் a:b:c = 1. 345:1:1. 114 இது ஒளியியல் பண்பில் நேர்மறைக் கனிமம்; இதன் ஒளியியல் அச்சுத்தளம் குறுயிணை வடிவப் பக்கமாக (010) உள்ளது. தன் ஒளியியல் அச்சுக்கோணம் 2V மிகவும் குறைவானது. இதன் ஒளி விலகல் எண் விரை ஒளி அச்சுத் திசையில் (Z) 2.300 ஆகவும், மெதுஒளி (X), இடையொளித் (Y) திசையில் 2.270 ஆகவும் உள்ளன. ஒளியின் விரவல் விரை ஒளித் திசையில் பழுப்பு மஞ்சள் நிறம் மிகுதியாகக் காணப் படும். ஆஸ்திரேலியாவில் உள்ள புரோக்கன் ஹில் சுரங்கத்தில் ஸ்டோலசைட்டுடன் இக்கனிமம் காணப் படுகிறது. நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் சுமிடோ ரோ என்ற இடத்தில் தங்க மணல்களுடன் படுகின்றது. பிரேசிலில் உள்ள காரஸ்மினாஸ் என்ற இடத்திலும் காணப்படுகிறது. என்று காணப்படுகின்றன. காணப் பயன். இது மிகுதியாகக் கிடைக்கப்பெற்றால் ஈயம், டங்ஸ்ட்டன் ஆகியவற்றின் முதன்மையான கனிமத் தாதுவாகப் பயன்படும். ஆனால் மிகுதி யாகக் கிடைப்பது அரிது. இரிடியம் சு. ச இது தனிம வரிசை அட்டவணையில் எட்டாவது தொகுதியின் (VIII) மூன்று வரிசைகளில் மும்மை களாக (triads) உள்ள தனிம வரிசையில், மூன்றாவ தாக அமைந்துள்ள வரிசையில் ஆஸ்மியத்திற்கும், பிளாட்டினத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் அணு எண் 77; அணு எடை 192.2; குறியீடு Ir . இரிடியம் (iridium), கி.பி.1804 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்மித்சன் டென் னன்ட் (Smithson Tennant) என்பவரால் அமிலத்தில் கரையாது எஞ்சியிருக்கும் (residue) பிளாட்டினத் தாதுப் பொருள்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 'ஐரிஸ்' (iris) என்னும் சொல் கிரேக்க மொழியில் வானவில் கடவுளைக் குறிக்கும். இரிடியம் அமிலத் தில் கரையும் போது வானவில்லையொத்த பல வண்ணங்களை அடுத்தடுத்துத் தருவதால் இவ் வுலோகத்திற்கு 'இரிடியம்' என்ற பெயரை அவர் சூட்டினார். இயற்கையில் கிடைக்கும் இரிடியம் இரு நிலைத்த ஐசோட்டோப்புகளின் (isotope) கலவையாக உள்ளது. இதில் Irh1 37.3 விழுக்காடும், Ir193 62.7 விழுக் காடும் உள்ளன. பூஜ்யத்திலிருந்து +6 வரை ஆக்சிஜ னேற்ற நிலைகளைக் கொண்ட இரிடியம் சேர்மங் கள் ( +2 நிலை தவிர) இருந்தபோதும் இரிடியத்தின் வேதிவினைகள், குறிப்பாக இதன் + 1, +3, +4 ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பொறுத்தே அமைந் துள்ளன. இயற்கையில் கிடைத்தல். பிளாட்டினத் தொகுதி உலோகங்கள் அனைத்தும் இயற்கையில் மிக அரி தாகக் கிடைக்கும் உலோகங்களாகும். புவி மேலோட் டில் ஏறக்குறைய 1077% இரிடியம் உள்ளது. ஆஸ் மிரிடியம் (osmiridium) என்பது ஆஸ்மியமும் (osmiun) இரிடியமும் இணைந்து இயற்கையில் கிடைக்கும் உலோகக் கலவையாகும். மற்ற பிளாட் டினத்தொகுதி உலோங்களும் மிகச்சிறிய அளவுகளில் இத்துடன் இணைந்தே இருக்கும். இரிடியம் இயற்கை யில் தூய நிலையில் கிடைப்பதில்லை; உயர் உலோகங் களுடன் (noble metals)சேர்ந்து கலவையாகக் கிடைக் கின்றது. இரிடோஸ்மினில் 77% வரையிலும் பிளடே டினிரிடியத்தில் 77% வரையிலும், ஆரோஸ்மிரிடியத் தில் 52% வரையிலும், இயற்கைப் பிளாட்டினத்தில், 7.5% வரையிலும் இரிடியம் உள்ளது. இரிடியமும் மற்ற பிளாட்டினத் தொகுதித் தனிமங்களும் பொது வாகத் தொழில் முறையில் நிக்கல் அல்லது செம்புத் தயாரிப்பில் துணைப் பொருள்களாகப் பெறப்படு கின்றன. பிளாட்டின உலோகங்களின் பொதுவான பண்புகள். பிளாட்டினத் தனிமங்கள் அனைத்தும் சாதாரண நிலையில் மந்தமாகச் செயல்படுபவை. இவை மிக உறுதியானவை; வினையூக்கிகளாகச் செயல்படு பவை. இவற்றின் கடைநிலை எலெக்ட்ரான் அமைப் புப்பற்றி ஐயப்பாடு உள்ளது. இவ்வுலோகங்கள் ஏறத்தாழ ஒரே அணு ஆரங்களைக் கொண்டிருப்ப தால் இவற்றின் இயற்பியல் பண்புகள் பெரிதும் ஒத்துள்ளன. செயலறு நிலையை எய்தும் போக்கு இவற்றின் உயர்தன்மையைக் கூட்டுகின்றது. இவை