இரு சவுக்கிகள் 673
இரியால்கர் இப்பெயர் அராபிய மொழியிலுள்ள ராகி அல்கர் (rahialghar) என்ற சொல்லிலிருந்து உருவான சுரங் கத்தினுடைய தூள் என்னும் பொருளில் பயன்பட்டு வரும் ஒரு கனிமமாகும். இது ஒரு தளச்சாய்வுத் தொகுதியில் படிகமாகிறது. இதன் படிக அச்சுக் களின் நீளம் a:b:c 0.7203:1:0.4858 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. குறும்படிக அச்சிற்கும் (clino - axis), செங்குத்துப் படிக அச்சிற்கும் இடைப் பட்ட குறுங்கோண அளவு (8) 66° 15' ஆகும். இதன் படிகங்களின் அமைப்பு குறுமையாகப் பட்டகப் பக்கத்திற்கு இணையாகவும், செங்குத்துப்படிக அச்சிற்கு இணையாகவும், நெருங்கி அமைந்துள்ள வரிகளால் நிரப்பப்பட்டனவாகக் காணப்படும். சில வேளைகளில் கனிம மணிகளாகவும். முன்பே உரு வான ஏனைய பாறைகளில் காணப்படும் குழிகளில் படிந்தும், உருவற்றும் காணப்படும். இதன் கனிமப் பிளவு இருவகையாகும். அதில் ஒன்று குறும் படிக அச்சிற்கு இணையான பக்கத்திற்கு இணையாகவும் (010), மற்றொன்று அடி இணைப்பக்கத்திற்கு (001) இணையாகவும் இருக்கும். இதன் கனிம முறிவு சங்கு (concoidal) முறிவாகும். இது மிருதுவானதும், கத்தியால் அறுக்கப்படக்கூடிய (sectile) தன்மை புடையதும் ஆகும். இதன் கடினத்தன்மை 1.5-2 ஆகும். அடர்த்தி எண் 3.56 ஆகும். ஆனால் இதன் ஒளி அச்சுப்பக்கங்களுக்கு இணையான ஒளி விலகல் எண் 2.54 விரைவு ஒளி அச்சிற்கும் (a), 2.68 இடை ஒளி அச்சிற்கும் (8), 2.70 மெது ஒளி அச்சிற்கும் (Y) மாறுபட்டு இருப்பதாகக் கண்டுள்ளனர். இதன் ஒளி விலகல் தன்மையின்படி இக்கனிமத்தை எதிர்மறைக் கனிமம் என்று குறிப்பிடுகின்றனர். இதன் விரைவு ஒளி அச்சும், மெது ஒளி அச்சும், சாய்வு இணை வடிவுப் (clinopinacoid) பக்கத்திற்கு இணையான தளங்களில் (axial plane) காணப்படுகின் றன. இது ஒளி சாய்வு மறைத்தல் (inclined extinction) தன்மை யுடையது. அச்சாய்வு அளவு விரைவு ஒளி அச்சிற்கும் செங்குத்துப் படிக அச்சிற்கும் இடையே 110 என்று கணக்கிடப்பட்டுள்ளது. விரைவுஒளி அச்சிற்கும் மெது ஒளி அச்சிற்கும் இடைப்பட்ட ஒளிக்கோணம் 400 என்ற று அறிந்துள்ளனர். இதன் ஒளிப்பிரிதல் (dispersion) தன்மை மிகவும் தெளிவானதாக இருக்கும். இதில் விரைவு அல்லது மெது ஒளி அச்சுக் களின் முனைகளுக்கு இடையில் உண்டாகும் சிவப்பு வெளிச்சம் உண்டாகும் நிலையில் இரு சிவப்புப்புள்ளி களுக்கு இடைப்பட்ட கோணம் அதேபோல் நீல ஒளி கிடைக்கும்போது உருவாகும் கோணத்தைவிடப் பெரியதாக (P > V) இருக்கும். இதன் ஒளி மிளிர்வு பிசினைப் போன்று இருக்கும். இயற்கைப் படிகங்கள் அரோரா சிவப்பு அல்லது ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் உராய்வுப்பொடி அரோரா அ.க.4-43. இரு சவுக்கிகள் 673 சிவப்பு நிறத்தையோ, ஆரஞ்சு நிறத்தையோ கொண்டு இருக்கும். இப் படிகங்களில் ஒளி, ஊடு ருவுந்தன்மையிலிருந்து கசிவுத்தன்மை வரை இருக்கும். வை அர்சனிக் சல்பைடு என்னும் வேதியியல் அமைப்பைக் கொண்டிருக்கும். இவற்றை ஒளி படும் படியாகத் திறந்தவெளியில் கொணர்ந்தால் ஆர்சனிக் டைசல்பைடாகவும் (Asz S,), ஆர்சனிக் டைஆக்சை டாகவும் (As, O₁) மாறும். இக்கனிமங்கள் ஆர் சனிக்குத் தாதுக்களை உலர்த்தும் உலைகளின் உயர் விளிம்புகளில் படிந்து காணப்படும். இக் கனிமங்கள் ஆர்சனிக்கின் ஏனைய கனிமங்களுடனும், ஆர்பி மெண்ட் போன்ற கனிமங்களுடனும், ஈயம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகத் தாதுக்களோடும் தொடர் புற்றுக் காணப்படுகின்றன. சுண்ணாம்புப் பாறை களிலும், மக்னிஷியம் கலந்த சுண்ணாம்புப் பாறை களிலும் சில களிமண் பாறைகளிலும் இவை பொதிந்து காணப்படும். எரிமலை வாய்களில் பதங்க மாகிய பொருள்களாகவும், வெப்ப நீர் ஊற்றுகளின் அருகில் படிவுப் பாறைகளாகவும் காணப்படு கின்றன. உலகில், வெள்ளி, ஈயத் தாதுக்களோடு தொடர்புற்று ருமேனியா நாட்டிலும், ஸ்லிட்சர் லாந்து நாட்டிலுள்ள டோலோமைட்டுப் பாறை களிலும், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வியாமின் மாநிலத்தில் இருக்கும் வெப்பநீர் ஊற்றுப்பகுதி களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. வா வேடிக்கைகளில் ஒளிரும் வெண்மை ஒளி உருவாக்க இவை வெடி உப்புகளுடன் கலந்து பயன்படுத்தப் படுகின்றன. ஞா.வி.இராசமாணிக்கம் நூலோதி. Ford..EW., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern, Limited New Delhi, 1985; Winchell.A.N., Winchell.H., Elements of Optical Mineralogy, Optical Mineralogy, IV Edition Wiley Eastern Private Limited, New Delhi, 1968. இரு சவுக்கிகள் இவ்வுயிரிகள் இரண்டு நீளிழைகள் அல்லது சவுக்கி களைப் (flagella) பெற்றிருப்பதால் இரு சவுக்கிகள் (dinoflagellates) என அழைக்கப்படுகின்றன. இவை முன்னுயிரிகள் (protozoa) தொகுதியில் நீளிழை உயி ரிகள் (mastigophora) வகுப்பைச் சேர்ந்தவை. நன் னீரிலும் கடல் நீரிலும் காணப்படும் மிதவையுயிரி களில் (plankton) இரு சவுக்கிகள் கணிசமான அளவில் காணப்படுகின்றன. சில காலங்களில் இவற் றின் எண்ணிக்கை ஒரு லிட்டர் நீருக்கு 5,000,000 வரை பெருகிவிடுகிறது. அப்போது நீரின் நிறம் மாறுபடுகின்ற காரணத்தால் அது செந்நீர் என்றும்