பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 இருசு

676 இருசு இனப்பெருக்கம் இரு சமபிளவு அல்லது பல பிளவு முறையிலும் அரும்புதல் முறையிலும் நடை பெறுகிறது. ச.ஷேக் அலாவுதீன் நூலோதி. Ekambaranatha Ayyar, M., Manual of Zoology part - { Invertebrata, S. Viswanathan Pvt. Ltd., Madras, 1986; Hall, R.P. Provozoology, Asia Publishing House, Bombay, 1961; Hyman. L.H., The Invertebrates Vol. I. Protozoa through Ctenophora McGraw Hill Book Co., Inc., New York, 1940; Publications, Kotpal, R.L., Protozoa, Rastogi Meerut, 1980. இருசிறகுப் பூச்சிகள் காண்க ஈரிறக்கைப் பூச்சிகள். இருசு சக்கரத்தைத் தாங்கும் உறுப்பு இருசு (axle) எனப் படும். சுழலும் இருசு, சக்கரத்திற்குத் திறனைச் செலுத்தலாம் அல்லது சக்கரத்திலிருந்து திறனைப் பெறலாம். ஒரு தானியங்கியின் பின்புற இருசு, சுழலும் இருசாகும். சில இருசுகள் தாம் சுழலாமல் சக்கரத்தைமட்டும் தன்னிச்சையாகச் சுழல விடுவ துண்டு. ஒரு சரக்கு உந்தின் இருசு இங்ஙனம் சுழலாமல் செயல்படுகின்றது. வகைகள். மகிழுந்துகளிலுள்ள (cars) பின்புற இருசுகளின் கூ இடவல இருசுத்தண்டுகளைச் சுமக்கி றது. இந்த இருசுத் தண்டுகளின் (axle shafts) வெளிப் புற முனைகளில் சக்கரங்கள் பூட்டப்பட்டிருக்கும். இவ்வகை இருசு, வில்சுமக்காவகை (unsprung type) இருசு எனப்படுகிறது. வில்சுமக்கும் வகை (sprung type) இருசுகளில் இருசின் கூடு அதன் நடுமையத்தில் தானியங்கிச் சட்டகத்துடன் (frame) பொருத்தப் பட்டிருக்கிறது. சக்கரங்களும் இருசுத் தண்டுகளின் வெளிப்புற முனைகளும் பிணைப்புகள் மூலம் சட்டகத்துடன் இணைக்கப் படுகின்றன. இவை நடுமையப் பல்சக்கரக் கூட்டுடன் இணைக்கப்படு வதும் உண்டு. பெருவழக்கிலுள்ள வில் சுமப்பு வகை இருசு, சுழலும் வகை (swinging type) இருசு என அழைக்கப்படுகிறது. சக்கரங்களைத் தாங்கும் கட்டகம் (structure) இதன் நடுப்புள்ளியிலிருந்து சுழலுகிறது. ஒவ்வொறு வகை இருசும் அதற்கேயுரிய சிறப் பியல்புகளை உடையது. மகிழுந்து ஓடும் சாலையைப் பொறுத்து அதற்கேற்ற இருசு வகையைத் தேர்ந் தெடுக்க வேண்டும். வில்சுமக்கா வகை இருசு எளியது; பின்புறச் சக்கரங்களை எளிதாக வழிப்படுத்த வல்லது. எளிய வடிவமைப்புடையது. இந்த வடிவமைப்பு முடுக்கத்தின் போது பின்புற முனையின் கீழே அமிழும் அளவைக் குறைக்கிறது. அதேபோல ஊர்தியை நிறுத்தும்போது பின்புற முனை ஏழு கின்ற அளவையும் குறைக்கிறது. மிக முரடான சாலைகளுக்கு வில்சுமப்பு வகை இருசே மிகவும் ஏற்றது. வில்சுமப்பு வகை இருசுகளில் பின்புறச் சக்கரங்களிலமையும் சுமக்கா பகுதியின் எடை குறையும். சுமக்கும்வகை இருசில் தக்க அமைப்பில்லா விட்டால், சுமக்கா வகையைவிட மிகுந்த இரைச்சலை உண்டாக்கும். பொதுக்கட்டமைப்பு, ஒரு மகிழுந்தின் வகைமைப் பின்புற இருசு படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் குழாய்கள் அழுத்தப்பட்டுப் பற்றுவைக்கப்பட்ட சுமப்பு வார்ப்படம் ஒன்று அமைந்திருக்கும். குழாய் களில் மணி தாங்கிகள் (ball bearings) பொருத்தப் பட்டிருக்கும். இதன் வெளிப்புற முனைகளில் இருசுத் தண்டுகள் பூட்டப்பட்டுள்ளன. சுமப்பு உறுப்பின் பின்புறம் உள்ள மரையாணியால் இணைக்கப்பட்ட எஃகு மூடியைத் திறந்து வேறுபாட்டுப் பற்சக்கர அணியைப் (differential gear set) பழுதுபார்க்கலாம். பின்புறச் சக்கரங்கள், குடங்கள் (hubs), ரப்பர் வட்டைகள் ஆகியவை சுழலும் இருசுத்தண்டுகளின் இறுதி முனைகளில் அமைகின்றன. இந்த இருசுத் தண்டுகள் தாங்கிகளின் வெளிப்புற முனைகளில் மணி தாங்கிகளால் இணைக்கப்பட்டுள்ளன. சரிவு உருள் தாங்கிகளும் (roller bevel bearing) இருசுத் தண்டுகளைச் சுமக்கப் பயன்படுவதுண்டு. மணி தாங்கிகள் ஆரச் சுமைகளையும் இறுக்கு சுமைகளை யும் (threst load) தாங்க வல்லன. உருள் தாங்கிகள் ஆரச் சுமைகளையும் வெளித்தள்ள, இறுக்கு சுமை களையும் தாங்க வல்லன. உள்புறத் தண்டுச் சுமை கள், மையத் தள்ளு பாளம் (central thrust block) ஒன்றின் வழியாக இருசுத் தண்டுக்குச் செலுத்தப் படுகின்றன. இருசுத்தண்டு இந்தத் தள்ளுவிசையை வெளிப்புறத் தாங்கிக்குச் செலுத்துகிறது. பகுதி மிதவை இருசுகள் (semifloating axle) அவற்றின் உட்புற முனைகளில் ஆரத் துருத்து பிணைப்பால் (coupling) தாங்கப்படுகின்றன. ஆரத் துருத்து பிணைப்புகள் வேறுபாட்டுப் பல்சக்கரங் களுடன் இணைக்கப்பட்டுள்ளன. வேறுபாட்டுப் பற்சக்கரங்கள் சுமப்பு உறுப்புகளிலுள்ள தாங்கி களில் பூட்டப்பட்டுள்ளன. பகுதி மிதவை இருசு