பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதனிமச்‌ சேர்மம்‌ 679

காணும் வரிசைப்படி எழுதவேண்டும்; உலோகம், கரி, நைட்ரஜன், ஃபாஸ்ஃபரஸ், ஆர்சனிக், ஹைட் ரஜன், சல்ஃபர், ஹாலோஜன்கள், ஆக்சிஜன். (எ.கா.) NaBr - சோடியம் புரோமைடு C10, -குளோரின் டைஆக்சைடு இவற்றுள் சோடியம் நேர்மின் திறனும், புரோமின், குளோரின், ஆக்சிஜன் ஆகியவை எதிர்மின் திறனும் உள்ள தனிமங்களாகும். இருதனிமச் சேர்மங்களில் சேரக்கூடிய இரண்டு தனிமங்களும் அலோகங்களாகவோ, அல்லது ஒன்று உலோகமாகவோ மற்றது அலோகமாகவோ இருக் கலாம். சில உலோகக் கலவைகளை (alloys) அதிக வெப்பத்திற்குட்படுத்தினால் இருதனிமச் சேர்மங்கள் உருவாகும். உலோகமும் அலோகமும் இணைந்த இருதனிமச் சேர்மங்கள். எல்லா உலோகங்களும் அலோகத்துடன் சேர்ந்து இருதனிமச் சேர்மங்களை உண்டாக்கு கின்றன. அலோகத்தின் எலெக்ட்ரான் கவர்தன்மை யைவிட (electronegativity) உலோகத்தின் எலெக்ட் ரான் கவர்தன்மை மிகவும் குறைவு. தனிமங்களுக் கிடையேயுள்ள எலெக்ட்ரான் தவர் தன்மை வேறுபாடு அதிகமாக இருப்பின் அயனிப் பிணைப்பு electrovalent bond) உள்ள இருதனிமச் சேர்மங்கள் உண்டாகும். (எ.கா.) NaCI - சோடியத்தின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் 0.9 குளோரினின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் 3.0 அலோகமும் அலோகமும் சேர்ந்த இருதமனிச் சேர் மங்கள். இரு அலோகங்கள் ஒன்றாகச் சேர்ந்து இவ் வகைச் சேர்மங்களை உண்டு பண்ணுகின்றன. சேரக் கூடிய இரண்டு தனிமங்களுக்கிடையே உள்ள எலெக்ட் ரான் கவர் தன்மை பெரும்பாலும் குறைவாக இருக்கும். எனவே சகபிணைப்புச் (covalent bond) சேர்மங்கள் உண்டாகும். (எ.கா.) CH₁ கரியின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் 2.5 ஹைட்ரஜனின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் 2.1 முக்கிய பிரிவுகள் கார்பைடுகள். சிலிகனும், மற்ற உலோகங்களும் கரியுடன் சேர்ந்து கார்பைடு எனும் இருதனிமச் சேர்மத்தை உண்டாக்குகின்றன. (எ. கா.) Li,C, Be_C, CaC2, A1,Ca, Fe,C, MoC, SiC இருதனிமச் சேர்மம் 679 sic சக பிணைப்பு உள்ள சேர்மமாகும். இது கார்போரண்டம் என்று அழைக்கப்படுகிறது. இது சாணை பிடிக்க உதவுகிறது. இடைநிலைத் தனிமங் களின் கார்பைடுகள் இடைச்செருகல் சேர்மங்களைக் (interstitial compounds) கொடுக்கும். நைட்ரைடுகள். உலோகங்கள் நைட்ரஜனுடன் சேர்வதால் நைட்ரைடுகள் உண்டாகின்றன. (எ. கா.) AIN, Mg,N, சக அயனிப்பிணைப்பு நைட்ரைடுகளும், பிணைப்பு நைட்ரைடுகளும் உள்ளன. இடைநிலைத் தனிமங்களின் (transition elements) நைட்ரைடுகளில், நைட்ரஜனின் அளவு குறைந்துவிடும். ஆக்சைடுகள். எல்லாத் தனிமங்களும் ஆக்சிஜ னுடன் சேர்ந்து ஆக்சைடுகளைக் கொடுக்கின்றன. ஆக்சைடுகள் அவற்றின் வினைகளின் அடிப்படையில் பலவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை அமில ஆக்சைடுகள் (SO,), கார ஆக்சைடுகள் (Na,O), ஈரியல்பு ஆக்சைடுகள் (amphoteric oxides, oxides. ZnO), நடுநிலை ஆக்சைடுகள் (NO), கலப்பு ஆக்சைடுகள் (Fe,O, ), என்பன. பெர்ஆக்சைடு களும் உள்ளன. (எ.கா.) ஹைட்ரஜன் பெர் ஆக் சைடு (H,O,), சோடியம் பெர் ஆக்சைடு (Na,O,), பேரியம் பெர்ஆக்சைடு (BaO2). ஹாலைடுகள். எல்லாத் தனிமங்களும் ஹாலோ ஜன்களுடன் சேர்ந்து ஹாலைடுகளைக் (halides) கொடுக்கின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹாலோஜன் அணுக்கள் சேர்ந்து சேர்மம் கிடைக் கின்றது. (எ.கா) NaF, AsF5, KCl, BaCl2, AICI3, PBrs ஹாலோஜன்கள் தங்களுக்குள் சேர்வதால் ஹாலோஜன் இடைச்சேர்மங்கள் (interhalogen com- pounds) உண்டாகின்றன. (எ.கா.) IC1, BrF, IC1 IF, சேர்வதால் ஹைட்ரைடுகள். தனிமங்கள் ஹைட்ரஜனுடன் ஹைட்ரைடுகள் உண்டாகின்றன. உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜன் எதிர்மின் அயனியாக இருக்கும். எனவே அவை அயனிப் பிணைப்புடையவை. (எ.கா) LiH, NaH, CaHg இவற்றை உப்புசார் ஹைட்ரைட்டுகள் (saline hydrides) என அழைக்கலாம். சில ஹைட்ரைடுகளில் அதிகமான சகபிணைப்பு உண்டு. (எ.கா.) BeH,, BiH,, NH, இடைநிலைத் தனிமங்களும் உள் இடைநிலைத் தனிமங்களும் (innertransition elements) ஹைட்ரஜ னுடன் சேர்ந்து ஹைட்ரைடுகளைக் கொடுக்கின்றன.