பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/709

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு நிறப் பண்பு 685

ஸ்பியர்மன் முறையில் SE எளிதாகக் கணக்கிடப் படுகிறது. இதில் SEA M = d k p, (1-p) Σ ni இதன் தரவிலக்கம் ச -வினைச் சார்ந்ததாகும். இயல்நிலை அல்லது இலாகிஸ்டிக் சார்பினைக் கருதி, SD M4 do 2n எனப்பெறலாம்.ஏ பழைய அனுபவ அடிப்படையில் கணக்கிடப்படும். உணர்வு உய்த்தறிதலில் இருநிலைத்துலக்கம். ஒரு. வினாடிக்கு 1000 சுழற்சிகள் என்னும் அளவில் தொடர்ந்து ஒலியானது செலுத்தப்படுகிறது. இதன் நடுவே, சுழற்சிகளில் சிறு அதிகரிப்புகளுடன் ஒலி யானது எழுப்பப்படும். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அதிகரித்த ஒலியை உணர்ந்தாரா இல்லையா எனக் கூற வேண்டும். இத்தகைய அதிகரித்த ஒலிகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு, இறுதியில் எளிதாக உணரத்தக்க அதிக அளவு அதிகரிக்கும் ஒலிகள் செலுத்தப்படும். துலக்க விகிதங்கள், தூண்டுதல் அளவினைச் சார்ந்து, ஸிக்மாயிட் வடிவில் இருக்கும். மருத்துவ ஆய்வில் இருநிலைத்துலக்கம். மருந்து களின் சக்தியானது, ஏதேனும் உயிரியல் கூற்றில் இருநிலைத் துலக்கத்தினைத் தூண்டுவதற்கேற்ற தேவையான மருந்தின் அளவு மூலமாகக் கணக்கிடப் படுகிறது. (மருந்தின் அளவு மடக்கையில் கருதப் படும்.) பேர்கள் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் மருந்து அளிக் கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் பதில் பெறப் படுபவர்களின் விகிதம் 0 முதல் 1 வரை மாறுபடும். வெவ்வேறு மருந்து அளவுள்ள தொகுதிகளுக்கு பேர்களை வாய்ப்பு முறையில் பங்கிடுகையில், மருந்து அளவு-பதில் தன்மை வளைவானது ஸிக்மாயிட் வடிவில் அமையும். பதில் பெறப்படும் விகிதம் ஈருறுப்புப் பரவலாக அமைந்து மதிப்பீட்டு முறைகள் பயன்படுத்தப்படும். மனநிலை ஆய்வுகளில் இருநிலைத் துலக்கம். லாலி (Lawley 1943), லார்ட் (Lord 1952) ஆகியோரின் மனநிலை ஆய்வுகளில், ஒவ்வொருவரின் சரியான பதில் அளிப்பின் நிகழ்தகவு அவரின் திறன் அள வினைச் சார்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. சரியான பதில் நிகழ்தகவு, திறன் அளவு இவற்றினிடையே இறுதித் தொடர்பானது இயல்நிலையாகக் கருதப் படும். 50% சரியான பதில் அளிப்பின் நிகழ்தகவுக்கு இருநிறப்பண்பு 685 ஏற்ற திறன் அளவு இயல்நிலைத் திரள் பரவலின் இடைநிலை ஆகும். இப்பரவலின் தரவிலக்கமானது, நிகழ்தகவினது மாறுபாட்டு அளவாகும். இவரின் வேறுபடுத்தி உணரும் திறனானது, இத்தரவிலக்கத் தின் நேர்மாறு (inverse) மதிப்பாகும். இருநிறப்பண்பு கா. இர. சந்தான கோபாலன் ஒளியைக் கடத்தும் சில குறிப்பிட்ட பல்திசைப் பண்புடைய (anisotropic) ஒளியின் படுகதிருக்கு இரண்டு விலகு கதிர்களைக் கொடுக்கின்றன. இப் படிகம் இயல்புக் கதிரை முழுதுமாக உட்கவர்ந்து விட்டு, சிறப்புக் கதிரின் ஒரு பகுதியை உட்கவர்ந்து எஞ்சிய பகுதியை மட்டும் வெளிவிடுகிறது. இவ் வகையில் வெளிவரும் கதிரில் சிறப்புக் கதிரின் பகுதி ஒரு தள முனைவாக்கப்பட்ட கதிராக (plane polar- ized rays) இருக்கும். இந்நிகழ்ச்சிக்கு இருநிறப்பண்பு (dichroism) என்று பெயர். டூர்மலின் படிகம் தன்மையுடையது. ஹிராபாத் என்ற ஆங்கிலேய அறிவியலறிஞர் 1852 ஆம் ஆண்டு ஹீராபாத்தைட் என்ற குனை னின் அயோடா சல்ஃபேட் படிகத்தைக் கண்டறிந் தார். இப்படிகம் அனைத்து நிறத்தையும் வெளிவிடு கிறது; ஆனால் நிலையற்றது: சிறு அதிர்ச்சிக்குக் கூட இது குலைந்துவிடும். 1934ஆம் ஆண்டு எட்வின் லேண்ட் என்ற அறிஞர் போலராய்டு என்றபெயரில் இப்படிகங்களைத் தகடு வடிவில் உருவாக்கினார். மிகச் சிறு அளவில் இந்தப் படிகங்களைப் பாகுநிலை ஊடகம் ஒன்றில் இணை ணையாக அடுக்கி வைத்தார். இவ்வாறு இணை ணையாக அடுக்கப்பட்ட படிக வரிசைகளுடைய இரண்டு தகடுகள் ஒன்றுக்கொன்று இணையாக் இணைந்தால் ஒளி கடத்தப்படும். இணையாக இல்லா மல் குறுக்காக இணைந்தால் ஒளியைக் கடத்தா. இந்த அமைப்பிற்குப் போலராய்டு என்று பெயர். அ ஆ படம் போலராய்டு அமைப்பு அ, இணை இணைவு ஆ. குறுக்கு இணைவு