பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 இருப்புப்பாதைப்‌ பொறியியல்‌

692 இருப்புப்பாதைப் பொறியியல் குறிப்புக்களும் கட்டுப்பாடும். சிறப்பு இருப்புப்பாதை கள் அனைத்திலும், தொடர் வண்டிகளின் பாதுகாப் பிற்காகக் குறிப்பு முறைக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும் இக்குறிப்பு முறைகள் இருவழிச் செய்தித் தொடர்பால் தொடர்வண்டிப் பணியாள ரோடு இணைக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தானியங்கள், சிமெணட் மாவு மற்றும், உலர்ந்த பொருள்களை ஏற்றிச் செல்லும் மூடிய பெரும் வண்டிகள் குறிப்பு முறைகள். தன்னியக்க வழியோரக் குறிப் புகள் (automatic way side signal) இருப்புப் பாதைக் கருகேயுள்ள கம்பங்களில் அல்லது இருப்புப் பாதை யில் உள்ள பாலத்தின் தாங்குமானத்தில் நிறுவப் படுகின்றன. இவை தொடர்வண்டிகளின் இயக்கத் தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாக்கவும் உதவு கின்றன. தொடர்வண்டி இயக்கிகளுக்கு உள்ளே அமைக்கப்பட்ட தன்னியக்கச் சைகைகள் சில தடங் களில் பயன்படுத்தப்படுகின்றன. பெருகி வரும் இருப் புப் பாதைகளில் மையப்படுத்தப்பட்ட போக்குவரத் துக் கட்டுப்பாட்டமைப்புகள் பயன்படுத்தப்படுகின் றன. இவை ஒன்றாக நிறுவப்பட்ட சைகைகளி லிருந்து கட்டுப்படுத்தப்பட்டு, நெடுந்தூரம் வரையில் தட நிலைமாற்றிகளை அனுப்பவும் பயன்படுகின்றன. மையப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் கட்டுப் பாட்டமைப்புக் கொண்ட ஒரு அல்லது இரு தடப் பாதையில் ஏற்படும் போக்குவரத்தைக் கட்டுப் படுத்தவல்லதாக அமைகிறது. நெடுஞ்சாலையும், இருப்புப்பாதையும் குறுக்கிடும் இடங்களில், சாலைப் பயணிகளை எச்சரிக்கும் சைகை, தன்னியக்கக் கதவு கள் போன்றவற்றை வடிவமைத்தல், நிறுவுதல், பரா மரித்தல் ஆகியவை இருப்புப்பாதைச் சைகைப் பொறியாளரின் பணிகளாகும். செய்தித் தொடர்புகள். இருப்புப்பாதைகள் இயங்கு வதற்காகத் தேவைப்படும் தொலைபேசி, தந்தி, தொலைச்செய்தி, தொலையச்சு, நுண்ணலை, வானொலி, மூடிய சுற்றுவழித் தொலைக் காட்சி, அமைப்புகள் போன்றவற்றிற்கு இருப்புப்பாதைச் செய்தித் தொடர்புப் பொறியாளரே பொறுப்பா வார். இத்தகைய செய்தித் தொடர்பு முறைகள் தற்காலத்தில் பெருகி வருகின்றன. சில இருப்புப் பாதை நிறுவனங்களில், சைகை, செய்தித் தொடர்பு கள் தனித்துறையின் பொறுப்பாகவும், மற்ற சைகை நிறுவனங்களில் இச்செயல்கள் பொறியியல் துறை யின் பொறுப்பாகவும் உள்ளன. A தன்னியக்கம். இருப்புப்பாதைப் பொறியியலில் செய்திகளைத் தொகுத்தல், சேர்த்து வைத்தல், செய்தி நிகழ்த்தல் ஆகியவற்றிற்கு மின்னியக்கக் கணிப் பொறிகள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொலைத்தண்டவாளத் தன்னியக்கச் செய்தி அமைப் புகள் பெரிய அளவிலுள்ள அனைத்து இருப்புப் பாதை நிலையங்களிலிருந்தும் இருப்புப்பாதைக்குழு மற்றும் இருப்புப்பாதை நிலையங்களுடன் கணிப் பொறியின் உதவியால் தொடர்பு கொண்டு, எந் நேரத்திலும் சரக்கு வண்டிகளின் இருப்பிடம், சேரு மிடம் ஆகியவற்றை அறிவதற்கு உதவுகின்றன. பெருமளவில் பயன்படும் மற்றொரு தன்னியக்கக் கருவி வெப்பப்பேழை ஒற்றி (hot box detector ) ஆகும். நகரும் தொடர்வண்டிகளில் அதிகவெப்பமா யுள்ள பெட்டியின் இருசுத்தாங்கிகளின் (overheated car axle bearings) இருப்பிடத்தைக் காட்டுவதால், பழுதுபட்ட பெட்டியைத் தடம்புரளுவதற்கு முன்னர் அகற்ற இந்த ஒற்றிகள் உதவுகின்றன. காண்க, இருப்புப்பாதைக் கட்டுப்பாட்டமைப்புகள்; போக்கு வரத்துக் கட்டுப்பாட்டமைப்புகள். நிலையான இயல்புகள். வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு முதலிய நிலையான இயல்புகளைக் கை யாளுவதில் இருப்புப்பாதைத் துறை பெரும் பங்கு வகிக்கிறது. பலவி தமான நிலையான இயல்புகளை மேற்கொள்வதற்கு உட் கோட்டங்கள் தேவைப்படு கின்றன. இவ்வுட்கோட்டங்கள் இருப்புப்பாதையின் அளவைப் பொறுத்தே அமைகின்றன. இருப்புப்பாதை. இருப்புப்பாதையின் நிலையான தன்மைக்குச் சாலைவழியும், தடமும் மிகப்பெரிய அணியாகும். இதற்குப் பராமரிப்புச் செலவுகள் மிகுதியாகத் தேவைப்படுகின்றன. யான தடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மை தண்டவாளங்கள் பற்ற வைத்த (welded ) மூட்டுகளைக் கொண்டுள்ளன. மரையாணிகளின் இணைப்பை நீக்குவதால் வழவழப்பு, அமைதியான ஓடுதளம், நீண்ட காலம் நீடிக்கும்தன்மை போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன. 39 அடி (11,9 மீட்டர்) நீளமுள்ள தண்டவாளங்கள், மைய நிலையத்தில் தொடர்ச்சியாக 1200 அடி நீளம் (365 மீட்டர்) வரை பற்ற வைக்கப்படுகிறது. சில வேளைகளில் தண்டவாளத்தைத் தடத்தில் வைத்தபின்னர் பற்ற வைக்கப்படுகிறது.