பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்புப்பாதைப்‌ பொறியியல்‌ 693

பாலங்களும் கட்டடங்களும். நிலையான இயல்பி லுள்ள வசதிகளில் மற்றுமொரு சிறப்பு அணி, பாலம், கட்டடம், கட்டுமானங்கள் ஆகியவையாகும். புதுமையான முற்றங்களும், முடிவிடங்களும். தன்னியக்கப் புவிஈர்ப்பு இயக்கவகை முற்றங்கள் குறைந்த அளவுத் தொடர்வண்டி இயக்கிகளின் ஆற்றலைக்கொண்டு சரக்கு வண்டிகளின் போக்கு வரத்தை மேற்கொள்கின்றன. இந்த முற்றங்கள், மிகுந்த திறனைப் பெறுவதற்காகத் தன்னியக்க முறையை மேற்கொள்கின்றன. அனைத்துத் தொடர் வண்டிகளும் செயற்கையான குன்றின் மேல் தொடர்ச்சியாகத் வண்டிகள் தள்ளப்படுவதால், குன்றின் உச்சியில் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, புவிஈர்ப்பின் மூலம் அதனதன் பிரிவுத்தடங்களில் நாற்பது அல்லது ஐம்பது எண்ணிக்கையில் சேரு மிடங்களுக்குச் செல்கின்றன. ஒவ்வொரு வண்டியின் சேருமிடமும், எண்ணிக்கை, தன்னியக்கக் கருவி, எடை, உருளும் தன்மை, காற்று, வெப்பநிலை ஆகிய வற்றால் தேர்வு செய்யப்படுகிறது. மேலும், வேகத் தைத் தன்னியக்கப் பெட்டி ஒடுக்கிகளினால் (automa- tic car retarders) சரிசெய்வதும் உண்டு. சாலை, இருப்புப்பாதை நிகழ்ச்சி. இக்குழு நெடுஞ் சாலை-இருப்புப்பாதைச் சரிவுக் குறுக்கீடு, போக்கு வரத்துக் கட்டுப்பாட்டமைப்புகள் ஆகியவற்றின் கட்டுமானத்திலும், பராமரிப்பிலும் உதவுகின்றது. புறநிலை அமைப்புகள் ன தள அளவு (track gauge). பொதுவாக அனைத்துப் பாதைகளும் அடிப்படை அளவாகிய (standard அளவு உள்ளன. மலைப் gauge) 1.4351 மீட்டர் பாங்கான நாடுகளில் சில பாதைகள் குறுகிய அளவுப் எனப்படும். அவை மீட்டர் அகலமுள்ளனவாக இருக்கும். மடைந்த சில பகுதிகளில், குறிப்பிட்ட அளவுக்கு மேற்ப்பட்ட பாதைகளும் உண்டு. பாதைகள் 0.9144 நாகரிக் இருப்புப்பாதைக்குரிய நிலவரைத்திட்டம், தளத்தின் நேரமைப்பும் இயக்கத்தின் வேகமும் ஆய்வு செய்யப் பட வேண்டும். குறிப்பாக 0830' கொண்ட பெரும் வளைவில் ஒரு மணி நேரத்திற்கு 160 மீட்டர் வேகமே செல்லலாம். பிற இருப்புப்பாதை வளைவு களில் மிகுதியான வேகம், ஒரு மணி நேரத்திற்கு 100 மீட்டர் என்ற அளவில் பயன்படுத்தப்படுகின்றது. 2° வளைவுகளில் ஒரு மணி நேரத்திற்கு 80 மீட்டர் வேகம் இருக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு 60 மீட்டர் வேகமுள்ள சரக்கு வண்டிகளுக்கு வளைவு இருப்புப்பாதைப் பொறியியல் 693 கள் 2°30′ ஆக இருக்கலாம். குறுகிய வளைவு களுக்குக் குறைந்த வேகமே தேவைப்படுகின்றது. குறைந்த வேகமுடைய முற்றத் தடங்களில் (slow speed yard track), அங்கேயே அமைக்கப்பட்ட கருவிகளால் வளைவுகளின் எல்லையைக் காண முடியும். நவீன தொழிற்சாலைத் தட வளைவுகளின் கோணம் 12 இருத்தல் நன்று; போக்குவரத்தைக் கையாளுவதற் கும், நிலத்தில் மேடுபள்ளங்களைப் பொறுத்தும் சரிவு வடிவமைக்கப்படவேண்டும். மேலும், குறைந்த சரிவுள்ள பாதையின் பொருளாதாரத்தையும். செங் குத்தான பாதையின் பொருளாதாரத்தையும் ஒப்பு மைப்படுத்திச் சரிவுகள் வடிவமைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தொடர்வண்டி இயக்கிகளின் மிகுதியான சரிவு, ஆற்றல் அளவின் தேவையை முடிவு செய் கிறது. சிறப்புப் பாதையின் இயக்கங்களில் 0.5 விழுக்காட்டிற்கும் குறைவான சரிவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைகிறது. ஆனால் பொது வாகத் தட்டையான பரப்புகளில் 0.3 விழுக்காடு மிகுதியான பயன்படுத்தப்படுகின்றன. சரிவுகள் மலைப்பாங்கான நாடுகளில் சிறப்புப்பாதைச் சரிவு கள் 1-5 அல்லது 2.0 விழுக்காடு பயன்படுத்தப்படு கின்றன. இடைவெளி. இருப்புப் பாதைக்கு மேல், நேர் குத்தாகக் குறைந்த அளவு 28 அடி (6.7 மீட்டர்) இடைவெளி (clearances) இருப்பது குறிப்பிடத்தக்க தாகும். பல கட்டுமானங்களுக்கு இவை தேவை யானவையாகும். குறைந்த அளவு பக்கவாட்டு இடை வெளி இருப்புப்பாதையின் மையத்திலிருந்து 2.6 மீட்டர் இருப்பது குறிப்பிடத்தக்கது. வளைவு களில் உள்ள பக்கவாட்டு இடைவெளி, வளைவில் ஆரம்மாற்று இருப்புகளின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றது. தண்டவாளம். முற்காலத்தில், தண்டவாளங்களின் கட்டுமானம் 28 கி.மீ-31கி.மீ.ஆக இருந்தது. தண்ட வாள் வெட்டு முகங்களின் முறைகள் மாற்றப்பட்டு, தற்போது 77 கி.மீ. ஆக உள்ளது. எடை பல குறுக்குக் கட்டைகள். இருப்புப் பாதைகளுக்குப் பயன்படுத்தப்படும் குறுக்குக் கட்டைகள் அழுத்தத் திற்கு உட்பட்ட ஒரு வகை மரக்கட்டைகளாகும். அவற்றின் வெட்டு முகத்தின் அளவுகள் 15 செ.மீ. X 15 செ.மீ. இலிருந்து 18 செ.மீ X 23 செ.மீ. வரை வேறுபடுகின்றன. குறுக்குக் கட்டைகளின் நீளம் 2.6 அல்லது 2.7 மீட்டராகும். 1900 ஆண்டில் முன்தகை வேற்றப்பட்ட கற்காரையினாலான குறுக் குக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. சுற்காரைக் குறுக்கு கட்டைகள் மிகுந்த விலையானாலும், சற் றுத் தொலைவு இடைவெளியில் வைக்கப்படுகின்றன. கற்காரைக் கட்டுகள் மிகுந்திருப்பினும் அவற்றின்