பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இணை தைராய்டு மிகையியக்கம்‌

48 இணை தைராய்டு மிகையியக்கம் தில்லை. அறிகுறிகள் இன்றி மறைந்திருக்கும் நோய் கீழ்க்காணுமாறு வெளிக் கொணரப்படலாம். சோவோஸ்ட்டெக்கின் அறிகுறி. (Chvostek's sign). காதுக்கு முன் தாடைக்கருகில் முக நரம்பினை இலே சாகத் தட்டுவதால் வாயின் ஓரத்திலும், மூக்கின் நுனியிலும். கண்ணிமையிலும் சுளிப்புத் (twicheie} தோன்றும். பட்டையைக் டுரூசே வின் அறிகுறி (Trousseau's sign). கையில் இரத்த அழுத்தமானியின் கட்டிச் சிஸ்ட்டாலிக் இரத்த அழுத்தத்திற்கும் மேலாக அழுத்தம் உயர்த்தப்பட்டு இருநிமிடநேரம் அப்படியே இருக்குமானால் கைத் தோன்றும். தசைகளில் இழுப்புத் தோன்றும் நோயின் நீக்குவதற்கு 10-20 மருத்துவம். விரைந்து அறிகுறிகளை உடனடியாக மி.லி. அளவு 10 விழுக்காடு கால்சியம் குளூக்க னேட்டு மெதுவாகச் சிரை வழியாக இரத்தத்தினுள் செலுத்தப்பட வேண்டும். இதே அளவு மருந்து வேண்டிய போது மீண்டும் கொடுக்கப்பட்டு இரத்தத்தில் கால்சியம் அளவு இயல்பு நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். கால்சியம் குடலில் உ உறிஞ் சப்படுவதை மிகுதிப்படுத்த வாய் வழியாகக் கால் சியம் லாக்ட்டேட் கொடுக்கப்பட வேண்டும். முதலில் 400000 அலகுகள் கால்சிஃபெரால் கொடுக் கத் தொடங்கிய பின்னர் நோயாளியின் தேவைக் கேற்றவாறு நாளொன்றுக்கு 100000 அலகுகள் என்ற அளவில் பல நாள்களுக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். மருந்தின் அளவை முடிவு செய்வதில் இரத்தக் கால்சியம் அளவு கோலாக இருப்பதால் நாள்தோறும் இரத்தக் கால்சியம் அளவு கண்டறியப்பட வேண்டும். சு.நரேந்திரன். நூலோதி. நரேந்திரன்.சு., பொது அறுவை மருத்துவம், முதல் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை. 1985; Harding Rains, David Ritchie, Baily & Love's Short Practice of Surgery, The English Language Book Society, H. K. Lewis and Co. Ltd., London. 1985. ணை தைராய்டு மிகையியக்கம் தைராய்டு சுரப்பியின் இருமருங்கிலும் பக்கத் திற்கு இரண்டாக நான்கு இணை தைராய்டு (para- thyroid) சுரப்பிகள் உள்ளன. ஒன்று அல்லது பல சுரப்பிகளின் புதுப்பெருக்கம் (tumour) நான்கு சுரப் பிகளிலும் ஏற்படும். செல் பெருக்கம் (hyperplasia) அல்லது புற்றுநோய் (carcinoma) ஆகியவை இணை தைராய்டு மிகையியக்கத்தின் (hyperthyroidism) அறி குறிகள் ஆகும். அதிகமாகக் காணப்படுவது ஒற்றைச் சுரப்பிப் புதுப்பெருக்காகும். ஆறு விழுக்காடு நோயா ளிங்ளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரப்பிப் புதுப்பெருக் குகள் இருக்கும். சுரப்பி முழுதும் பெரியதாகி ஆழ்ந்த நிறமுள்ளதாகவும் உறுதியானதாகவும் இயல்பு நிலை யைவிட இரத்த ஓட்டம் அதிகம் கொண்டதாகவும் விளங்கும். சிலநேரங்களில் புதுப்பெருக்கைச் சுற்றிச் சிறிது இயல்பான இணைதைராய்டு திசு காணப் படலாம். இணைதைராய்டு புற்றுநோய் மிகவும் அரி தானது. ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே காணப் படுகிறது. சுரப்பிக்குள்ளும் அருகிலும் ஊடுருவும். அறுவைக்குப் பின் மீண்டும் தோன்றும். இரத்த ஓட்டத்தின் வழியாகப் பிற உறுப்புகளுக்குப் பரவுத லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணைதைராய்டு சுரப்பிப் புதுப்பெருக்கு, சில நேரங்களில் பிட்யூட்டரி, கணையம் மற்றும் அட் ரினல் சுரப்பிகளில் புதுப்பெருக்குடன் சேர்ந்து காணப்படலாம். இது பல நாளமில்லாச் சுரப்பிப் புதுப்பெருக்கு நோய்த் தொகுப்பு எனப்படுகிறது. நோயின் தன்மையும் அறிகுறிகளும். பத்து வய திற்கு முன்பாக மிக அரிதாகவே தோன்றும் இந்நோய் பெண்களையே அதிகம் தாக்குகிறது. பெரும்பாலும் இருபது வயதிலிருந்து அறுபது வயது வரையே அதிக மாகக் காணப்படுகிறது. இரத்தத்தில் வேதியியல் மாற்றங்கள் ஒரே தன் மையுடையனவாக இருப்பினும் நோயின் அறிகுறி கள் பலவாறாயிருக்கலாம். எலும்பு நோய். சீராக எல்லா எலும்புகளினின்றும் கால்சியம் இழப்புத் தோன்றலாம். இந்நோய் நார்த் (fibrous tissve)திசுப்பைகள் கொண்ட எலும்பு அழற்சி நோய் (cystic lesions) அல்லது வான் ரெக்ளிங்ஹாசன் (von reckling hausen's disease) நோய் எனப்படும். இது தவிர ஒன்றோ அதற்கு மேற்பட்ட பைகளோ போலிப் புதுப்பெருக்குக் கட்டிகளோ தோன்றலாம். இரண்டாவதாகக் கூறப்பட்டவை தாடை எலும்பு களில் அதிகமாகக் காணப்படும். முதலில் எக்ஸ்கதிர் பட அறிகுறிகள் மண்டை ஒட்டிலும், விரல் எலும்பு களிலும் தோன்றத்தொடங்கும். எகஸ்கதிர் படத்தில் எலும்பு அடர்த்திக் குறைவும் எலும்பு உறை சவ்வின் கீழ் அரிப்பும் காணப்படும். எலும்புகளிலும் மூட்டுக் களிலும் இனம் காணமுடியா வலியுடன் மருத்து வரை அணுகும் இந்நோயாளிகளின் நோய் சில நேரங்களில் மூட்டு வாதம் என்று தவறாக அடை யாளம் கண்டுகொள்ளப்படுவதும் உண்டு. சிறுநீரகக் கற்கள். இது, இணைதைராய்டு செயல் திறன் மிகையின் குறிப்பிடத்தக்க விளைவாகும்.