இருபால் ஒருவர் 709
சிறிது சிறிதாகப் பின்நோக்கி நகர்ந்து இறுதி யில் மறைந்துவிடுகிறது. இப்போது வளர்கருவில், வெளிப்புறமுள்ள புறப்படை, மூலக்குடற்குழியின் கூரையாகவுள்ள அகப்படை, இவை இரண்டிற்கும் இடையேயுள்ள இடைப்படை ஆகிய மூன்று கருப் படைகள் உள்ளன. முயல். முயலின் கருமுட்டை மிகச் சிறியதாக இருப்பதாலும், கருவுணவு மிகக் குறைவாக முட்டை முழுதும் பரவலாக இருப்பதாலும் பிளவுற்றுப் பெருகுதல் எளிதாக நடைபெறுகிறது. மேலும் இதன் கருவளர்ச்சி முழுதும் தாயின் கருப்பையிலேயே நடக்கிறது. முயலின் சுருக்கோளத்திற்கு மையக் கருக்கோளம் (blastocyst) என்று பெயர். ஓரடுக்குச் செல்களாலான இதன் வெளிப்படலத்தை ஊட்டப் படலம் (trophoblast) என்றும், அதனுள் அடங்கி யுள்ள குழியைக் கருக்கோளக்குழி என்றும் குறிப்பிடு வர். ஊட்டப் படலத்துடன் இணைந்துள்ள ஒரு செல் தொகுதி இக்குழிக்குள் நீட்டிக்கொண்டிருக் கிறது. ஒரு குமிழ் போலக் காணப்படும் இச்செல் தொகுதியே கருவாக வளர்கிறது. அதனால் இதனைக் கருக்குமிழ் (embryonic knob) எனக் குறிப்பிடுவ துண்டு. கருக்குமிழ்ச் செல்கள் விரைவாக பிளவுபடுவ தால் அவற்றின் கீழ்ப்பகுதியில் சற்றே வேறுபட்ட தோற்றமுடைய அகப்படைச்செல்கள் உண்டா கின்றன. அவை கீழ்நோக்கி நகர்ந்து ஊட்டப்படலத் உட்செல் தொகுதி பிரைஸ்டுலா குழி உட்படை உயிர் செல்கள் இருபால் ஒருவர் 709 திற்கு உள்ளே மற்றுமொரு படலமாக அமை கின்றன. அகப்படைச்செல் படலத்தால் சூழப்பட் டுள்ள குழிக்கு மூலக்குடற்குழி என்று பெயர். இத னைக் கருவுணவுப்பை அல்லது யோக் பை எனவும் கூறுவதுண்டு. ஏனென்றால் இது பறவைகள், ஊர்வன ஆகியவற்றின் வளர்சுருவில் காணப்படும் யோக் பைக்கு ஒப்பானது. இந் நிகழ்வுகள் நடை. பெறும் காலத்திலேயே, கருக்குமிழுக்கு மேலேயுள்ள ஊட்டப்படலம் சிதைவுற்றுக் கருக்குமிழ்ப்பைக் கோளத்திலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது. கருக் குமிழ் இப்போது இரண்டு அடுக்குச் செல்களாலான வட்டமான தட்டையான கருத்தட்டாகக் (embryonic disc) காணப்படுகிறது. இவ்விரண்டு அடுக்குச் செல்களுள் மேலடுக்குச்செல்கள் யாவும் புறப்படை, இடைப்படையாகும் செல்களாகும். கீழடுக்குச் செல் கள் அகப்படையாகும் செல்களாகும். கருத்தட்டுப் பகுதியில் செல்கள் நகர்வதால் நீளவாட்ட நடுக் கோட்டில் மூலக்கீற்று வரிக்கோடு (primitive streak) உண்டாகிறது. வரிமேட்டின் முன்முனையிலுள்ள மூலமுடிச்சு மேட்டிற்கு முன்னுள்ள பகுதியில் நடுக் கோட்டில் முதுகுத்தண்டு உண்டாகிறது. மூலக் கீற்றுப் பகுதியில் உள்நோக்கி நகர்ந்து பின்னர் மருங்குகளில் பரவும் செல்கள் இடைப்படையாக அமைகின்றன. கீழ்ப்பக்கத்தில் எஞ்சியுள்ள செல்கள் அகப்படையாக அமைகின்றன. இந்த மூன்று அடுக்கு களிலிருந்து கருவின் அனைத்துப் பகுதிகளும் உரு வாகின்றன. ச. மகாலிங்கம் . நூலோதி. Balinsky, B.I., An Introduction to Embryology, W.B.Saunders Company, Philadelphia, 1970; Verma, P.S., Agarwal, V.K., Tyagi, B.S., Chordate Embryology, S.Chand and Company Ltd., New Delhi, 1978. வளரும் தட்டு வயிற்றுக் குழி வயிற்றுக்குழி படம் 6. முயலின் இருபடைக் கருக்கோள் முறை 8. 1.பிளாஸ்டுலாவின் இறுதிக் கட்டம் 8. உட்செல்தொகுதியி லிருந்து செல்கள் பிரிந்து உட்படை உருவாதல், இருபடைக் கருக்கோள். இருபால் ஒருவர் ஒருவரிடம் இரண்டு பாலின உறுப்புகளும் வெவ் வேறு அமைப்பில் காணப்படுவதையே இருபால் ஒருவர் (intersex) என்று அழைக்கலாம். இவ்வாறு ஒருவரிடம் இரண்டு பால் இனவுறுப்பும், துணை யுறுப்பும் காணப்படுவதைப் பலவகையாகப் பிரிக் கலாம். ஆனால் ஆண் என்றோ பெண் என்றோ இவரை பிரித்து அறிவதுதான் கடினம். 46 குரோமோசோம்களில் 44 வகைகளை உடல் குரோமோசோம் (autosome) என்றும், இரண்டைப் பால் குரோமோசோம் என்றும் அழைக்கலாம். பெண்ணிடமுள்ள பால் குரோமோசோம்களை x, x என்றும், ஆணிடம் உள்ளவற்றை x,y என்றும்