பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பு 715

கலந்திருக்கும். இது சொரசொரப்பும், கடினத் தன்மையும் உடையது. ஆனால் எளிதில் நொறுங்கி விடும். இதைத் தகடாக அடிக்கவோ, கம்பியாக நீட்டவோ முடியாது. தேனிரும்பு. தேனிரும்பையே மனிதன் முதன் முத லில் அறிந்தான். கனிமத்திலிருந்து கிடைத்த இரும்பைப் பழுக்கக் காய்ச்சி, சம்மட்டியால் அடித்து மாசுகளைப் போக்கி இறுதியாகத் தேனிரும்பு தயாரிக்கப்படு கிறது. இவ்விரும்பிலிருந்துதான் அக்காலப் போர்க் கருவிகளும், தளவாடங்களும் செய்யப்பட்டன. தற்பொழுது எதிர் அனல் உலை (reverberatory furnace) மூலம் தேனிரும்பு தயாரிக்கப்படுகிறது. ஊது உலைகளின் மூலம் கிடைக்கும் இரும்பு, கட்டியாகவோ குழம்பு நிலையிலோ இரும்பாலை களில் உள்ள எஃகு உலைகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டு அங்கு எஃகாக மாற்றப்படுகிறது. என பெசிமர் உலை, திறந்த கணப்பு உவை (open hearth furnace), மின்னுலை, எல்.டி.உலை நான்கு வகையான உலைகள் எஃகு ஆலைகளில் பயன்படுகின்றன. கனியிரும்பிலுள்ள கரியையும் கழிவுப் பொருள் களையும் நீக்கிவிட்டுத் தேவைக்கேற்பக் கரியைச் சேர்த்து எஃகு தயாரிப்பது பெசிமர் உலை முறை யாகும். உயர்ந்த வெப்பநிலையைப் பெறவும், எரி பொருளில் சிக்கனம் காணவும் எழுந்த ஆய்வில் தோன்றியதுதான் திறந்த கணப்பு முறை ஆகும். இவ்வுலையில் கல்கரிக்கு மாற்றாக முன் கூட்டியே வெப்பப்படுத்தப்பட்ட காற்றும், வளிமமும் பயன் படுகின்றன. கந்தகம் கலவாத தூய எஃகை மின்னுலை மூலம் பெறலாம். ஆனால் உற்பத்திச் செலவு மிகுதியாகும். இது கலப்பு எஃகுத் தயாரிக்க ஏற்றதாகும். எல்.டி. முறை, தூய எஃகைச் சிக்கனமாகப் பெறக்கூடிய நவீன முறையாகும். இம்முறையில் ஆக்சிஜனை இரும்புக் குழம்பில் செலுத்துவதன் மூலம் அழுக்கு முழுமையாக விரைவில் நீக்கப்படுகிறது. லிண்ட்ஸ்- டோனோவிட்ஸ் என்னும் அறிஞர் கண்டுபிடித்த இம்முறை அவருடைய பெயரால் எல்.டி. முறை என்று வழங்கப்படுகிறது. இது ரூர்கேலா உருக்காலையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வுலைகளில் இரும்புக்குழம்பிலுள்ள மாசு களையும், அவற்றுடன் சுலந்துள்ள பாஸ்ஃபரஸ், கந்தகம் போன்ற பொருள்களையும் நீக்கித் தேவை யான அளவுக்குக் கரியைக் கலந்து எஃகுகளாக மாற்றுகிறார்கள். பல்வகையான தனிமங்களைச் சேர்ப்பதன் வாயிலாகக் கலவை எஃகுகளும் செய்யப் படுகின்றன. இரும்பு 715 இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரிக்க உதவும் ஊதுலைகளும் ஊதுலையிலிருந்து கிடைக்கும் கனி இரும்பை எஃகாக மாற்றும் உருக்கு உலைகளும் கொண்ட பல்வேறு இரும்பாலை முதன் முதலில் ஜாம்ஷெட்பூரில் 1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதற்குப் பின்னர் கர்நாடக மாநிலம் பத்ராவதியில் சிறிய அளவில் இரும்பாலை தொடங்கப் பட்டது. பின்னர் நாட்டின் தேவையைக் கருதியும், கிடைக்கும் இரும்புத் தாதுக்களின் அளவைப் பொறுத்தும் மத்திய அரசு, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் துர்க்காபூர், பிலாய், பொக்காரோ. ரூர்கேலா, பார்ன்பூர், விசாகப் பட்டினம், சேலம், விஜயநகர் ஆகிய இடங்களில் இரும்பாலைகளை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள சேலம் உருக்காலை மட்டும் உருக்காலையாகச் செயல்படாமல் உருட் டாலையாகச் செயல்பட்டு வருகிறது. துர்க்காபூர் உருக்காலையிலிருந்து துருப்பிடிக்காத எஃகுக் கட்டி தளை வாங்கித் தகடுகளாகவும், கம்பிகளாகவும், பட்டாக்களாகவும் மாற்றி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து உருக்காலைகளும் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் இழப்பில் ஓடிக் கொண்டிருப்பதால் பல நவீன உத்திகளைக் கொண்டு உற்பத்தித் திறனை உயர்த்த அனைத்து முயற்சி களையும் எஃகு உற்பத்திக் கழகம் மேற்கொண்டிருக் கிறது. இதனால் எஃகு உற்பத்தி 14.5 மில்லியன் டன்னாக வாய்ப்பிருக்கிறது. நிக்கல் - குரோமியம் எஃகு, குரோமிய எஃகு, சிலிக்கான் எஃகு, மாங்கனீஸ் எஃகு, நிக்கல் எஃகு, கருவி எஃகு (tool steel), அதிவேக எஃகு, (high speed steel), காந்த எஃகு (magnetic steel), துருபிடிக்காத எஃகு (stainless steel) எனக் கலவை எஃகு பல வகைப்படும். இரும்பு மு. காளிமுத்து து அன்றாட வாழ்க்கையில் பெருமளவில் பயன் படும் உலோகம். இதன் குறியீடு Fe அணு எண் 26; அணு எடை 55. 847. புவியின் மேற்பரப்பில் அதிக அளவில் கிடைக்கும் தனிமங்களில் இது நான்காவது இடத்தைப் பெறுகின்றது. இரும்பின் நான்கு முக்கிய ஐசோடோப்புகளும் (isotopes) அவற்றின் இயைபு களும் வருமாறு: 54 (5.82%), 56 (91. 66%)