பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{

50 இணைதிறன்‌ பிணைப்புக்‌ கோட்பாடு

50 இணைதிறன் பிணைப்புக் கோட்பாடு தால் அறுவையின்போது அறுவையாளர் நான்கு சுரப்பிகளையும் அடையாளம் கண்டு அவற்றை நன்கு பரிசோதித்துப் பின் அவற்றிலிருந்து சுரப்பிப் புதுப் பெருக்குகள் உள்ள கட்டிகளை அகற்ற வேண்டும். சுரப்பியின் செல்கள் அதிகப் பெருக்கமடைந்திருப் பின், மூன்று சுரப்பிகளும் எஞ்சியதில் பாதியும் அகற் றப்படல்வேண்டும். புற்று நோயாயிருப்பின் சுரப்பிகள் அனைத்தும் அகற்றப்படுவதோடு அருகிலுள்ள புற்றுநோயால் ஊடுருவப்பட்ட திசுக்களும் அகற்றப்படல் வேண் டும். பத்து விழுக்காடு நோயாளிகளில், அனுபவம் வாய்ந்த அறுவையாளருக்குக் கூட இணைதைராய்டு சுரப்பிப் புதுப்பெருக்கைக் கண்டுபிடிப்பது கடினமா யிருக்கலாம். இவ்வாறான நேரங்களில் ஊசிமூலம் சிரையிலிருந்து வெவ்வேறு இடங்களில் இரத்தம் எடுக்கப்பட்டு இணைதைராய்டு சுரப்பு நீர் அளவு கண்டுபிடிக்கப்பட்டால் புதுப்பெருக்கு எங்குள்ளது என்று தெளிவாகக் கண்டறியலாம். நோய் நிலை முன்னேற்றம். வெற்றிகரமான அறு வைக்குப் பீன் எலும்புகள், இழந்த கால்சியத்தை மீண்டும் பெறும். போலிப் புதுப்பெருக்குக் கட்டிகள் மறையும். சிறுநீரகக் கற்கள் அறுவை முறைப்படி அகற்றப் பட்டால் மீண்டும் கற்கள் தோன்றா. சிறு நீரகச் செயல் திறனும் பாதுகாக்கப்படும். மனநோய் அறிகுறிகள் கொண்ட நோயாளிகளிடம் விரைவில் வியத்தகு முன்னேற்றம் தோன்றும். மிகச்சில நோயாளிகளில் இணைதைராய்டு செயல்திறன் மிகப்பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தோன்றலாம். மற்றொரு முறை அறுவை மருத்துவம் தேவைப்படலாம். இரண்டாம் நிலை (பிறகாரணம் சார்ந்த) இணை தைராய்டு செயல் திறன் மிகை. சீரத்தில் குறைந்த அளவு கால்சியம் கொண்ட நோயாளிகளில் (எ.கா) நீண்டகாலச் சிறுநீரகச் செயல்திறன் குறைபாடு, குடல் சத்து உறிஞ்சல் குறைபாடுகள். இக்குறைபா பாடுகளை ஈடு செய்வதற்காக நான்கு இணைதை ராய்டு சுரப்பிகளும் பெரியனவாகும். இவர்களில் சில ருக்குக் குறிப்பாக எலும்புக் கால்சியம் இழப்பும் வலியும் அதிகமாகும் போது மட்டுமே சிகிச்சை தேவைப்படலாம். நூலோதி. நரேந்திரன், சு.நரேந்திரன். பொது அறுவை மருத்துவம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை, 1985. Bailey and Love's Short praetice of Surgery, ELBS, London, 1985. இணைதிறன் பிணைப்புக் கோட்பாடு வேதிப் பிணைப்பைப் பற்றி விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளில் இணைதிறன் பிணைப்புக் கோட்பாடும் (valence bond theory) ஒன்றாகும். இது முலக்கூறு ஆர்பிட்டால் கொள் கைக்கு (molecular orbital theory) முந்தியதாகும். ஆனால் இவ்விரண்டு கொள்கைகளும் அடிப்படை யில் வேறுபட்டிருக்கின்றன. மூது பெருங்கொள்கை யான லூயிஸ் கொள்கையின்படி (lewis theory ) சகபிணைப்பு (covalent bond) என்பது இரு அணுக் களுக்கிடையே எலெக்ட்ரான் இரட்டைகள் (pairs) பங்கிடப்படுவ தால் தோன்றும் பிணைப்பாகும். இது கொள்கைப் பிணைப்புகளின் ஆற்றலைக் (bond energy) கணக்கிடுவதற்கோ, அவற்றின் வலுவை ஒப்பிடுவதற்கோ உதவுவதில்லை. எலெக்ட்ரான் ஆற்றல்களை அறிவதற்கு அவற்றின் இயக்கத்தை நன்கு அறிதல் வேண்டும். எலெக்ட்ரானைப் போன்ற நுண்ணிய துகள்களின் இயக்கத்தை மதிப் பிடுவதற்கு, கண்ணுக்குப் புலப்படும் பொருள்களின் இயக்கத்திற்காக நிறுவப்பட்ட சமன்பாடுகளைப் பயன்படுத்த இயலாது. நுண்ணிய துகள்களை அலைகளாகக் கருதி வருவிக்கப்பட்ட களைச் கொண்ட குவாண்டம் இயக்கவியல் (quantum mechanics) அல்லது அலை இயக்கவியல் (wave mechanics) எனும் கொள்கையின் அடிப்படை யில் இணைபிணைப்பிற்கு விளக்கம் தரப்பட்டது. இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டினை (இ பி.கோ ) பி.வீர்ட்லரும் (P. Heitler) எஃப். லாண் டனும் F.London) உருவாக்கினர். மூலக்கூறு மண்டலக் கொள்கையை ஆர். எஸ். முல்லிகனும் (R.S.Mullikan) எஃப் ஹீண்டும் (F. Hund) நிறுவி னர். இ.பி.கோவுக்கு ஆதரவாக ஆதாரங்களைச் சுட்டியதுடன் இக்கொள்கையைப் பாலிங்கும், ஸ்லேட்டரும் (pauling and Slater) விரிவாக்கினர். இரு கொள்கைகளுள் 1927-இல் உருவாக்கப்பட்ட இ.பி.கோ. காலத்தால் முந்தியதாகும். சமன்பாடு இரு தனித்த அணுக்களை அருகருகே கொண்டு வருவதால் மூலக்கூறு உருவாகின்றது. இரு அணுக் கள் ஒன்றையொன்று நெருங்கும்போது அவற்றின் எலெக்ட்ரான் மண்டலங்கள் (orbitals) ஒன்றோ டொன்று மேல் பொருந்துகின்றன. இதனால் அணுக் களுக்கு இடைப்பட்ட பகுதியில் எலெக்ட்ரான் மேக மூட்டத்தின் அடர்த்தி கூடுதலாகின்றது. இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றையொன்று நெருங்கு வதாகக் கொள்வோம். இவ்விரு அணுக்களில் எலெக்ட்ரான் சுழற்சி (spin) ஒரே திசைவழி இருந் தால், இவ்வணுக்கள் நெருங்கும்போது அவற்றின் எலெக்ட்ரான்கள் ஒன்றையொன்று விலக்கும். இத னால் அமைப்பின் நிலையாற்றல் கூடுதலாகிக் கொண்டே போகும் (படம் 1 அ). மாறாக,