பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பு 721

பெசிமர் உலையைச் சாய்த்து கனி இரும்பையும்,எஃகையும், வெளியேற்றலாம். உருகிய எஃகு எரிவளிமங்களின் வெளியேற்றம் ஈசடு உதுலைக் குழாய் உவை அடியிலிருந்து காற்று உட்செலுத்தப்படுகிறது கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும் உலையை எப்பக்கமும் தேவைக்கேற்பச் சாய்த்துக் கொள்ளும் படியும் இதன் அமைப்பு உள்ளது. உலையைச் சாய்த்து உருகிய இரும்புக் குழம்பை அதனுள் செலுத்தியபின், உலையை நிமிர்த்தி அதனுள் கீழிருந்து வெப்பக் காற்று செலுத்தப்படுகிறது. இக் காற்று கசடாக இருக்கும் சிலிக்கான், மாங்கனீசை முறையே சிலிக்காவாகவும் மாங்கனீஸ் ஆக்சைடாக வும் ஆக்சிஜனேற்றம் செய்து அதனைக் கசடாக வெளியேற்றி விடுகிறது. Si + 0, 2 Mn + 0, SiO, 2MnO MnSiO (கசடு) SiO, + MnO ஃபாஸ்ஃபரஸ் மாசாகக் கலந்திருந்தால் கார முறை யில் தாமஸ் கசடாக (Thomas slag, Ca (PO,),) மாற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறது; P, +50, 6 CaO + P On P,00 2 Ca (PO,), (தாமஸ் கசடு) பின் இவ்வாறு மாசுகள் கசடாக மாற்றமடைந்த கரியானது கார்பன் மோனாக்சைடாக ஆக்சிஜ னேற்றம் அடைந்து உலைவாயிலில் நீல நிறச் சுவாலையுடன் எரிகிறது. சுவாலை முழுதும் வெப்பக் காற்றுச் செலுத்துவது அணைந்தவுடன் நிறுத்தப்பட்டுத் தேவையான அளவு இரும்பு, மாங்க னீஸ், கரி கலந்த ஸ்பைஜெலீசன் சேர்க்கப்பட்டு எஃகு பெறப்படுகிறது. அ.க.4.46 இரும்பு 721 திறந்த அடுப்பின் இன்றியமையாமை. இம்முறை மெதுவாக நடக்கக் கூடிய முறையாகையால் வேலை செய்வது எளிதாகும். உலையின் வெளிப்புறத்தில் வெப்பப்படுத்துவதால் வெப்பநிலையை எளிதில் கட்டுக்குள் வைக்கலாம். தேவையான நேரத்தில் மாதிரிகளை எடுத்து அவற்றின் இயைபுகளை ஆய்வு செய்யலாம். இவ்வுலையில் கசடு ஆக்சிஜ னேற்றமடையும் போது அதனுடன் இரும்பும் ஆக்சிஜ னேற்றமடைவதில்லை. இவ்வடுப்பின் மூலம் எஃகைப் பெற 8-10 மணி நேரம் ஆகிறது; ஆனால் பெசிமர் உலையில் அரைமணி நேரமே ஆகிறது. பெசிமர் உலையை விடத் திறந்த அடுப்பு முறை சிறந்ததாக விளங்குவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வார்ப்பிரும்பில் இருக்கும் மாசுகள் லோம டைட்டினால் ஆக்சிஜனேற்றப்படுகின்றன. ஆனால் பெசிமர் உலையில் வெப்பக் காற்றினால் ஆச்சிஐ னேற்றப்படுகின்றன. உலையில் இடப்படும் இரும்பி லுள்ள கரி, சிலிக்கனின் அளவு, குறைதரத் தேனிரும் பையும் எஃகுத் துண்டுகளையும் சேர்ப்பதன் மூலம் குறைக்கப்படுகின்றன. ள டியூப்ளக்ஸ் முறை (duplex process). இது பெசி மர் முறையும் திறந்த அடுப்புமுறையும் இணைந்த ஒன்றாகும். டியூப்ளக்ஸ் முறையில் உருகிய வார்ப் பிரும்பு முதலில் அமில பெசிமர் உலையில் (acid Bessemer converter) இடப்பட்டு சிலிக்கான், மாங் கனிஸ், கார்பன் போன்ற வேண்டாதவை நீக்கப் படுகின்றன. பின்னர் உருகிய உலோகக் குழம்பு கார திறந்த அடுப்பில் (basic open hearth ) இடப் பட்டு ஃபாஸ்ஃபரஸ், எஞ்சிய கரி போன்றவை நீக்கப் படுகின்றன. இந்தியாவில் டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலையில் இம்முறை பயன்படுத்தப்படு கிறது. எல் - டி முறை {L - D Process). ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த லின்ட்ஸ் (Lintz) டியூசென் வெர்ஃபாரென் (Dusenverfahren) என்பவர்களால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட முறை சுருக்கமாக எல் - டி முறை என அழைக்கப்படுகிறது. ரூர்கேலா இரும்பு எஃகுத் தொழிற்சாலையில் இம்முறை பயன் படுத்தப்படுகிறது. இம்முறை பெரும்பாலும் பெசிமர் முறையை ஒத்தது. இதில் பெசிமர் உலையில் கசடு களை நீக்கக் காற்றை ஆக்சிஜனேற்றியாகப் பயன் படுத்தாமல் ஆக்சிஜனையே பயனபடுத்துகின்றனர். மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் சுழலக் கூடிய உலை யின் நடுவே உள்ள குழாய் வழியாக ஆக்சிஜன் 4-12 வளிமண்டல அழுத்தத்தில் செலுத்தப்படுகிறது. அரைமணி நேரத்தில் கந்தகம், ஃபாஸ்ஃபரஸ் போன்ற எல்லா மாசுகளும் அறவே நீக்கப்படுகின் றன. பின்னர் ஆக்சிஜன் செலுத்துவதை நிறுத்தி தேவையான அளவு ஸ்பைஜெலிசனையும் வேறு