பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/749

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பு உலோகக்‌ கலவை 725

யில் இரும்பு உலோகக் கலவையும் ஒன்று. சிலிகா, மாங்கனீஸ் போன்ற மிக முதன்மையான மூலகங் களில் இரும்பு உலோகக் கலவையும் (ferroalloy) ஒன்று. அதாவது எளிதான தூய்மையான கரி எஃகு களைத் தயாரிக்க சிலிகா, மாங்கனீஸ் தேவைப்படு வதைப்போல், உயர்தரமான குறைந்த உலோகக் கலவை எஃகுகளைத் தயாரிக்க குரோமியம், வெனே டியம், டங்ஸ்ட்டன், டைட்டோனியம், மாலிப்டினம் முதலிய உலோகங்கள் தேவைப்படுகின்றன. மேலும் பல சிக்கலான உட்கூறு உடைய உலோகக் கலவை கள் உள்ளன. இரும்பு உலோகக்கலவை எளிதில் உடையும் பண்பு கொண்டது. இருப்பினும், பொறி யியல் தொடர்பான உலோகக் கலவைத் தயாரிப்பில் மிகவும் பயன்படுகிறது. து மற்ற வகைத் தூய உலோகத்திலிருந்து இவ்விரும்பு உலோகக் கலவை களை மிக அதிக முதலீடு செய்து தயாரிக்கலாம். இவ்வகை இரும்பு உலோகக் கலவையில் ஒரு குறிப்பிட்ட அளவு இரும்பு உட்கூறில் நிறைந்து, தூய உலோகங்களை விடக் குறைவான உருகுநிலை கொண்டு காணப்படும், ஆதலால்தான் இவ்விரும்பு உலோகக் கலவைகள் குழம்பு நிலையில் உள்ள எஃகால் எளிதில் கரைக்கப்பட்டுவிடும். மேலும் இவ் விலோகக் கலவைகளில் உள்ள மற்ற தனிமங்கள், நீர்ம நிலையில் உள்ள சில குறிப்பிட்ட தனிமங் களை ஆக்சிஜன் ஏற்றம் அடையாமல் தடுத்துப் பாதுகாக்கின்றன. மேலும் இவ்விரும்பு உலோகக் கலவைகள் ஆக்சிஜன் எதிர்ப்பியாகப் பயன்படுத்தப் படுகின்றன. கொண்ட ஒரு குறிப்பிட்ட திறன் எஃகுத் தயாரிப்பில் தனித்த சிறப்பு மிக்க கூட்டுப் பொருளாக இவை பயன்படுகின்றன. பல இரும்பு உலோகக் கலவைகள், இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தேவைப்படும் உலோகக் கலவைகளின் கூட்டாக உள்ளன. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வணிகத் தரமும், கூட்டு உலோகக் கலவை களில் உள்ளன. ஆனால் இதில் மற்றொரு வகை யான நிக்கல் சிலிக்கான் கார்பைடு, மாலிபிடிக் ஆக்சைடு, மிச் உலோகம் (இவ்வுலோகம் பல அரிய மணிகளின் இரும்பு கூட்டாகும்) ஆகியவை கலவை உலோகக் கலவைகள் தயாரிப்பில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பல வகை இரும்பு உலோகக் களும் அவற்றில் கலந்துள்ள மற்ற உலோக விழுக் காடுகளும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அனைத்து வகையிலும் மீதமுள்ள விழுக்காடு இரும்பு ஆகும். ஆங்காங்கே சில மாசுகள் காணப் படும். இவ்வகை மாசுகள் சுமார் 0.10 விழுக்காடு பாஸ்ஃபரமாக இருக்கும். மூன்று வகையான இரும்பு உலோகக் கலவை கள் மொத்த உலோகக் கலவை எடையில் முதன்மை யாக இருக்கும். அவ்வகையில் சிலிக்கான், மாங்கனீஸ் இரும்பு உலோகக் கலவை 725 துலை குரோமியம் முதலிய உலோகங்கள் முதன்மை உலோக மாகக்கலந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐக்கிய ஒன் றிய நாடுகளில் ஒரு டன் எஃகுக்குச் சுமார் 5 கிலோ மாங்கனீஸ் வீதம் கலந்து திறந்த கணப்பு ஊ மூலம் எஃகு உலோகக் கலவை தயாரிக்கப்படுகிறது. மேலும் தாதுவிலிருந்து பிரிக்க முடியாத தனிமங் களும் இவ்வகை இரும்பு உலோகக் கலவையில் கலந்து காணப்படும். இயல்பான நிலையில் காணப்படும் இரும்பு. மாங்கனீஸ் உலோகக் கலவைகள் ஊது உலையில் இருந்து தயார் செய்யப்படும் கலவைகள் ஆகும். இதைத் தேனிரும்புடன் ஒப்பிட்டுக் காணும்போது, இவ்வகை இரும்பு-மாங்கனீஸ் உலோகக் கலவை, மாங்கனிஸ் தனிமம் மிகுதியான உட்கூறு கொண்ட இரும்புத் தாதுவிலிருந்து உருவாக்கப்படுகிறது. இது போல் குறை அளவு சிலிக்கா இரும்பு உலோகக் கலலை மேற்கூறியபடி தயாரிக்கப்படுகிறது. பெரும்பான்மையான இரும்பு உலோகக் கலவை அமிழ்ந்த மின்வில் உலை முறையில் உருவாக்கப்படு கிறது. இவ்வுலையிலிருந்து சுமார் 50 விழுக்காடு இரும்பு - சிலிக்கான் உலோகக் கலவைகளை உருவாக் கலாம். இவ்வுலை 26 அடி விட்டமும், 10 அடி ஆழமும் உடையது. இதன் அடியில் மூன்று கரி மின்முனைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு கரிமின் முனையும் 400 கிராம் சிலிக்கான் உற்பத்தி செய்யும்போது 5 கிலோ வாட்/மணி கொடுக்கும். இவ்வுலையில் ஒரு மணிக்கு சுமார் இரண்டு டன் உலோகக் கலவைகள் தயார் செய்யலாம். இவ்வுலை உச்சி முதல் அடிப்பாகம் வரை தேவையான கனிமப் பொருள்களான சிலிக்கான் டைஆக்சைடு (SiO,) (குவார்ட்சைட்டுப் பாறை), கரிக் கட்டி, இரும்பு (நன்றாகக் காய்ச்சி அடிக்கப்பட்ட இரும்பு) ஆகியவை ஒன்றையடுத்து ஒன்றாக அடுக் காக இடப்படுகின்றன. தேவையான அளவு வெப்பம், கரி மின்முனையிலிருந்து ஒரு வில் வடிவத்தில் தோன்றும், அவ்வப்பொ உருகிச் ழுது கனிமங்கள் சிலிக்கான் இரும்பு உலோகக் கலவை உண்டாகும். கலவை உலையின் அடிப்பாகத்திலிருந்து பெறப் படும். இதில் ஏற்படும் வினைகள் தொடர்வினைகள் ஆகும். இதில் சேர்ந்துள்ள கரிக்கட்டிகள் ஆக்சி ஜன் இறக்கியாகச் செயல்படுகின்றன. குறிப்பிட்ட முறையில் இவ்விரும்பு - சிலிக்கான் உலோகக் கலவையை வார்த்தவுடன் குளிர்படுத்திப் பின்பு அதை ஆவைகளில் இட்டுத் தேவையான அள வுக்குச் சிறு குருணைகளாகப் பெறலாம். இவ்வுலை யில் நிகழும் மொத்த வினைகளைக் கீழ்க்காணும் வேதியியல் சமன்பாடு மூலம் விளக்கலாம். SiO, + C a Si + 200