பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 இரும்புத்‌ தாதுக்கள்‌ இந்தியாவில்‌ கிடைக்குமிடங்கள்‌

726 இரும்புத் தாதுக்கள் இந்தியாவில் கிடைக்குமிடங்கள் இவ்வாறு உருவாகும் சிலிக்கா நீர்ம நிலையில் இரும்பில் காணப்படும். கரைந்து தேவையான இரும்பு - சிலிக்கா உலோகக் கலவை பெறப்படுகிறது. இவ்வகை சிலிக்கான் டைஆக்சைடு பல தாதுப் படுகைகளில் கசடாகக் கிடைப்பதாலும் சிலிகேட் கசடுகள் குறைவான உருகுநிலை கொண்டு காணப் படுவதாலும் இவ்வகை சிலிக்கான் - இரும்பு உலோகக் கலவைகளில் சிலிக்காவின் அளவை எளிதில் கட்டுப் படுத்தலாம். சிலிக்கான் மற்றவகைச் உட்கூறு கொண்ட இரும்பு உலோகக் கலவையை எளிதாகத் தயாரிக்கலாம். சிலிக்கான் உலோகக் கலவையில் சுரி யின் கரைதிறன் குறைவாக இருப்பதால் தேவை யான அளவு கூட்டு விழுக்காடு கொண்ட கலவை தயாரிக்க மிகவும் பயன்படுகிறது. மேலும் இவ்வகை யில் குறை அளவு சிலிக்கான் இருந்தால் மிகவும் பய னுண்டு. அவ்வாறு அல்லாமல் மேலும் இதில் பல உலோக ஆக்சைடுகளைக் கலக்கும்போது சிலிக்கான் டை ஆக்சைடு மீண்டும் உருவாக்கப்படும். இதைக் கீழ்காணும் சமன்பாட்டைக் வேதிச் கொண்டு அறியலாம் 2MO + Si + SiO, + 2M இவ்வகையான இரும்பு-சிலிக்கான் உலோகக் கலவை, மற்ற வகை இரும்பு உலோகக் கலவை தயாரிப்பதில் ஓர் இடைப்பட்ட பொருளாக விளங்குகிறது. மேலும் இத்திட்ட விளக்கம் பொதுவான ஒன்று. இதுபோல் அலுமினியம் ஓர் ஆக்சிஜன் இறக்கி செயல்பாட்டை யாகச் செயல்படுகிறது. இந்தச் வெப்ப ஆக்கி வினை (thermit reaction) என அழைப்பர். இதைக் கீழ்காணும் வேதிச் சமன்பாட் டால் அறியலாம். 2Al + Fe,O, → 2Fe + Al,0+ வெப்பம் இவ்வகையான முறையில் கால்சியம், மாங்கனிஸ்- இரும்பு உலோகக் கலவைகள் செய்ய அலுமினியத் தைப் பயன்படுத்தலாம். ஆனால் இவ்வகை வினை களில் சிலிக்கான் கரியின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். எனவே, உலோகக் கலவையில் பயன்படுத்தப் படும் தாதுக்களின் ஆக்சிஜன் இறக்க வினையின் தன்மையைப் பொறுத்து, உருவாகும் இரும்பு உலோகக் கலவையில் கரி, சிலிக்கான் இரும்பு இவற்றின் அளவு அடிக்கடி மாற்றமடையும். மேலும், ஊது உலையில் பொருளாதார அடிப்படையில் இவ்வுலோகக் கலவைகளின் உருவாக்கத்தைப் பொறுத்தும், மின் வில் உலையில் ஏற்படும் வெப்பத் தைப் பொறுத்தும், அலுமினா வெப்ப உமிழ்வு வினையைப் பொறுத்தும் மேற்கூறிய கனிமங்களின் அளவு மாறுபட்டுக் காணப்படும். இவ்வகையான இரும்பு உலோகக் கலவைகள், எஃகுத் தயாரிப்பில் ஆக்சிஜன் எதிர்ப்பிகளாகவும், உலோகக் கலவையில் கூட்டுச் சேர்மங்களாகவும் பயன்படுகின்றன. இரும்புத் தாதுக்கள் இந்தியாவில் கிடைக்குமிடங்கள் - சு. ச இரும்புத் தாது உற்பத்தியில் கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசம், பீகார், ஒரிசா, கர் நாடகம், மகாராட்டிரம், ஆந்திரப்பிரதேசம், இரா ஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பங்கு கொள் கின்றன. இந்தியாவில் 1980 ஆம் ஆண்டு பல்வேறு நிறுவனங்களின் ஆய்வின்படி இரும்புத் தாதுக்களின் இருப்பு 17,573 மில்லியன் டன்களாகும். கனிமத் தேட்டமும் அகழ்ந்து எடுப்பும். தேசியக் கனிம அகழ்வு நிறுவனம் ஏற்றுமதிக்காகவே இரும்புத் தாதுவை அகழ்ந்தெடுக்கும் நிறுவனமாக அமைந் துள்ளது. பைலடில்லா 11- சி என்ற இரும்புத்தாது அகழ்விடம், பைலடில்லா 14 என்ற அகழ்வு இடத் திற்குத் துணையாக அகழப்பட்டுள்ளது. 11-சி என்ற அகழ்விடத்தின் உற்பத்தித்திறன் சுமார் 3.2 மில்லியன் டன் ஆகும். இதில் 45 விழுக்காடு திண்மையாகவும், 55 விழுக்காடு துகளாகவும் அமைந்துள்ளன. இங்கு அகழ்ந்து எடுக்கப்படும் பெரும்பான்மையான இரும்பு விசாகப்பட்டின தொழிற் எஃகுத் தாதுக்கள் சாலைக்குப் பயன்படுத்த ஏதுவாக உள்ளது. இந் நிறுவனத்தினர் இரும்புத் தாது தூய்மைப்படுத்தப் பட்ட பின்பும் எஞ்சியுள்ள கழிவிலிருந்து சுமார் 8 மில்லியன் டன் இரும்பை மீண்டும் பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர். திறந்த வெளிச்சுரங்கம் மில்லியன் டன்கள் 50 40 35 30 .1974 76 78 80 82 83 படம் 1. 1976ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு முடிய இந்தியாவில் இருந்த தாது உற்பத்தியை விளக்கும் வரைபடம்