பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 இரும்புத்‌ தாதுக்கள்‌ இந்தியாவில்‌ கிடைக்குமிடங்கள்‌

730 இரும்புத் தாதுக்கள் இந்தியாவில் கிடைக்குமிடங்கள் மத்தியபிரதேசம். இம்மாநிலத்தில் பாஸ்டர், தர்க் மாவட்டங்களில் அதிக அளவு இரும்புத் தாதுப் படிவுகளும் ஜபல்பூர், சிட்சி, குவாலியர், கரகான், நரசிங்கஜர் ஆகிய மாவட்டங்களில் தரம் குறைந்த இரும்புத் தாதுக்கள் குறைவான அளவிலும் காணப் எல்லா வகை படுகின்றன. இங்கு காணப்படும் இரும்புத் தாதுக்களும் ஹேமடைட்டு, குவார்ட் சைட்டால் அணி வரிகளாகக் (bonded haemative quartzite) காணப்படுகின்றன. இரும்புத் தாதுக்கள் தின்மையான வடிவில் காணப்படுகின்றன. அண்மைக்காலத்தில் தர்க், பாஸ்டர் மாவட்ட எல்லையோரப்பகுதியில் 16 இடங்களில் நல்ல தர முள்ள இரும்புத் தாதுப் படிவுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அண்மைக் காலக் கண்டுபிடிப்புகளின் படி இவ்வளாகங்களின் மொத்த இரும்புத் தாதுக் களின் அளவு 180 மில்லியன் டன் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. தர்க் மாவட்டத்தில் தரமான ஹேமடைட்டு வகை இரும்புத் தாதுப் படிவுகள் ஜரந்தகல்லி, கோண்டி கோசா தாளி ராஜ்கரா அருகில் காணப் படுகின்றன. இங்கு கிடைக்கும் இரும்புத் தாதுவில் இரும்பின் விழுக்காடு 68-69 ஆகும். காணப்படும் மொத்தப் படிவுகளின் அளவு சுமார் 200 மில்லியன் டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந் திய நில இயல்சார் அளக்கைக் கழகத்தின் ஆய்வுப் படி இது 289.7 மில்லியன் டன் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. தர்க் மாவட்டத்தின் பிற பகுதியில் பந்தே என்ற இடத்திற்கு மேற்கே 1.6 கி. மீ தூரத் தில் தோண்டிலோகரா என்னும் இடத்தில் 8.8 கி.மீ.நீளத்தில் இரும்புத் தாதுப் படிவுகள் ஹேம டைட்டு, குவார்ட்சைட்டு அணிவரிகளாகக் காணப் படுகின்றன. இங்கு காணப்படும் படிவுகளின் அளவு சுமார் 151 மில்லியன் டன் எனக் கணக்கிடப்பட் டுள்ளது. இம்மாநிலத்தில் பாஸ்டர் மாவட்டத்தில் பைலடில்லா என்னும் இடத்தில் 35 கி.மீ. நீளமும், 9கி.மீ. அகலமும் கொண்டு காணப்படும் ஒரு குன் றில் இரும்புத் தாதுப் படிவுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஹிரான் என்பவரின் ஆய்வுப் படி இம் மாநிலத்தில் படிந்துள்ள இரும்புத் தாதுக் களின் மொத்த அளவு 3,063 மில்லியன் டன்க ளாகும். இக்கூற்றின்படி இதைவிடச் சிறந்த இரும் புத் தாதுப் படிவு உலகில் வேறு எங்கும் இல்லை எனலாம். பூம்ரகாட் டேன்கிரி, பின்சூர் டேன்கிரி, பாரியிர் டேன்கிரி ஆகிய இடங்களில் பலவகைப் புது இரும்புத் தாதுப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ் விடங்களில் நடுத்தரமான இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன. உயர்தரமான இரும்புத் தாதுக்கள் ஹரிட்டலாடி குன்றுகள், கட்டபான்ஸ் ஹாலாடி குன்றுகளுக்கு இடையில் காணப்படு கின்றன. மேற்கூறிய மூன்று இடங்களிலும் சுமார் 12.25 மில்லியன் டன் தாதுப் படிவுகள் காணப்படு கின்றன. 1973 ஆம் ஆண்டு நிலவியல் சார் அளக்கை நிறுவனத்தின் கூற்றுப்படி பைலடில்லா, இராஜ ஹரா, டாலி பாகர் இரால்காட்டு முதலிய மத்திய பிரதேச வளாகங்களில் இரும்புத் தாதுப் படிவு களின் அளவு 2624. 77 மில்லியன் டன் எனக் கணக் கிடப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தில் கட்டாக், கியோன்ஜகர், சுந்தர்கார்க், மயூர்பான்ஜ், சம்பல்பூர், கொரபுட், தெனக்கனல் மாவட்டங்களில் இரும்புத் இரும்புத் தாதுப் படிவுகள் காணப்படுகின்றன. இதில் கியோன்ஜகர் மாவட்டத்தில் காணப்படும் படிவுகள் மிகவும் குறிப் பிடத்தக்கவை. இங்கு முதன்மைத் தாதுவாக ஹேம் டைட்டு, சுமார் 55 முதல் 69 விழுக்காடு வரை இரும்பின் செறிவு கொண்டு காணப்படுகிறது. இங்கு ஹேமடைட்டு தாது, குவார்ட்சைட்டு ஜஸ்பர் முதலியவற்றுடன் அணிவரிப்பாறைகளாகக் காணப் படுகின்றது. இம்மாநிலத்தில் உயர்தர இரும்புத் தாதுக்கள் மிகுதியான அளவில் காணப்படுகின்றன. மாவட்டங்களில் கியோன்ஜகர் சுந்தர்கார்க் மாலங்டோலி என்ற இடத்தில் காணப்படும் படிவு களின் மொத்த அளவு 263 மில்லியன் டன் என்றும், இதில் இரும்பின் விழுக்காடு 55 முதல் 63 வரை என்றும் கருதப்படுகிறது. மேற்கூறியவற்றைத் தவிர குர்பன்ட், கால்சா, பெல்குண்டி, இராய்கா, பார்படா, கசியா, ஜோரி, குவாலி, நைவுகான் சுமார் 500 மில்லியன் இடங்களிலும் முதலிய உள்ளன டன் இரும்புத் தாதுப் படிவுகள் என்று இந்திய நிலவியல்சார் அளக்கை நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஒரிசாவில் காணப் படும் இரும்புத் தாதுக்களின் மொத்த அளவு 2677. 8 மில்லியன் டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வளங்கள் பீகார் மாநிலத்தில் நாமுண்டி,கா மாவட்டங் களில் இரும்புத் தாதுக்கள் ஹேமடைட்டு, குவார்ட் சைட்டு அணிவரிகளாக மிகுதியான அளவில் காணப் படுகின்றன. அண்மைக்காலத்தில் கனிம அகழ்வு நிறுவனத்தால் இரும்புத் தாதுக்களின் இம்மாநிலத்தில் சிரியா என்ற இடத்தில் மட்டும் சுமார் 2000 மில்லியன் டன் எனக் கணிக்கப்பட்டுள் ளது. இந்திய நிலவியல்சார் அளக்கை நிறுவனத்தின் ஆய்வுப்படி சிங்பும் மாவட்டத்தில் உள்ள மனேகர் பாரில் மிகுதியான அளவு இரும்புத் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டுப்பலேபேட்டா என்ற இடத்தில் மாக்னடைட் இரும்புத் தாதுக்களில் சுமார் 1.8 விழுக்காடு முதல் 3.0 விழுக்காடு வரை வெனடியம் சுலந்து காணப்படுகிறது. பீகார், ஒரிசா மாநிலங்களில் காணப்படும் இரும்புத் தாதுக்களின் அளவு சுமார் 4,880 மில்லியன் டன் எனக் கணிக்கப் பட்டுள்ளது. நிலவியல் அளக்கை நிறுவனத்தின்