பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/755

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்புத்‌ தாதுக்கள்‌ இந்தியாவில்‌ கிடைக்குமிடங்கள்‌ 731

கண்டுபிடிப்புகளின்படி பீகாரில் ஹேமடைட்டு இரும் புத் தாதுக்களின் அளவு மட்டும் சுமார் 1137.63 மில்லியன் டன் ஆகும். கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் இருவகைப் படிவுகளாகக் காணப்படுகின்றன. இலேட்டரைட், ஹேமடைட் படிவுகளும் இவற்றுடன் சிறிதளவு இலிமோனைட், கோயித்தைட் கனிமங்க ளும் காணப்படும். மற்றொன்று மாக்னடைட் தாதுப் படிவாகும். ஹேமடைட் படிவுகள் சுமார் 55 முதல் 63 விழுக்காடு வரை இரும்பு உட்கூறு கொண்டும் 0.05 விழுக்காடு முதல் 0.12 விழுக்காடு வரை ஃபாஸ்ஃபரஸ் உட்கூறு கொண்டும் காணப் படும். இம்மாநிலத்தில் பெல்லாரி, பீஜப்பூர், சிக்மக ளூர், சித்ரதுர்க், வடக்கு கன்ரா, தெற்கு கன்ரா, ஷிமோகா, தும்கூர் மாவட்டங்களில் காணப்படுகின் றன. இவற்றில் பெல்லாரி, சிக்மகளுர் மாவட்டத்தில் காணப்படும் இரும்புப் படிவுகள் சிறப்பு வாய்ந்தவை. பெல்லாரி மாவட்டத்தில் சாந்தூர் என்ற இடத்தில் இரும்புத் தாதுப் படிவுகள் ஹேமடைட், குவார்ட் சைட் அணிவரிகளாகக் காணப்படுகின்றன. இப் படிவுகள் தொடர் முகடுகளின் உச்சிப் பகுதியில் காணப்படுகின்றன. இந்திய நிலவியல் அளக்கை மாவட்டத் நிறுவனத்தின் ஆய்வுப்படி பெல்லாரி டன் தில் உள்ள டோனிமலையில் காணப்படும் இரும்புத் தாதுப் படிவுகளின் அளவு 151.3 மில்லியன் எனவும், இப்படிவில் இரும்பின் விழுக்காடு 64 என வும், இராமன்டர்க் என்ற இடத்தில் 212 மில்லியன் டன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இரும் பின் விழுக்காடு 63 எனவும் 182 டன் இரும்புத் தாதுப் படிவுகளில் இரும்பின் உட்கூறு விழுக்காடு 64 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலச் சுரங்க வியல் மற்றும் நிலலியல் துறையின் அகழ் ஆய்வின் படி இப்பகுதியில் சுமார் 1.253 மில்லியன் இரும்புத் தாதுப் படிவுகள் உள்ளன. இதில் 583 டன் நிலவியல் சார் அளக்கை நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. பீஜப்பூர் மாவட்டத்தில் அமின்கார்க் குன்றுகளுக்கு அருகில் மிகுதியான அளவில் இரும்புத் தாதுக்கள் உள்ளன என அறியப்பட்டுள்ளது. இப் படிவுகளின் தரத்தை ஆராய்ந்தபோது இதில் 64.5 விழுக்காடு இரும்பு உள்ளது அறியப்பட்டது. சிக்மகளூர் மாவட்டத்தில் மிகவும் குறிப்பிடத் தக்க இரும்புத்தாதுப் படிவுகள் குதிரைக் குளம்பு வடிவில் தொடர் குன்றுகளாகப் பாபுதான் குன்று களில் காணப்படுகின்றன. இத்தொடர் குன்றுகளின் அகலம் கிழக்கு மேற்கு திசையில் 22 கி.மீ ஆகவும். வடக்கு-தெற்கு திசையில் 19 கி.மீ. ஆகவும் இக் குன்றுகளின் உச்சிப் பகுதியில் சீரில்லாத் தொடராகச் சுமார் 100 மீட்டர் அடர்த்தி கொண்டும் இரும்புப் சுமார் 100 படிவுகள் காணப்படுகின்றன. இங்கு மில்லியன் டன் இரும்புத் தாதுப் படிவுகளில் 55 முதல் 65 விழுக்காடு வரை இரும்பு உட்கூறு இரும்புத் தாதுக்கள் இந்தியாவில் கிடைக்குமிடங்கள் 731 கொண்டு காணப்படுகிறது. இம்மாவட்டததில் மல நாடுக்கு அருகில் குதிரேமூக் என்ற இடத்தில் பரந்த அளவு மாக்னடைட்டு இரும்புத் தாதுக்கள் படிந் துள்ளன. குதிரேமூக் - கங்கமுலா என்ற இடத்தில் படிந்துள்ள படிவுகளின் அளவு 1,014 மில்லியன் டன் ஆகும். இதில் 38 முதல் 40 விழுக்காடு வரை இரும்பு காணப்படுகிறது. பின் ஆய்வின்படி கர்நாடக மாநிலத்தில் மொத்த மாகனடைட்டின் அளவு 1.467 மில்லியன் டன் என அறியப்படுகிறது. இது கனிச் செறிவூட்டலின் மூலம் 67 விழுக்காடு வரை இரும்பு உட்கூறு கொண்டதாக மாற்றப்படுகிறது. இங்கு காணப்படும் படிவுகளை, ஐக்கிய அமெரிக்க நாட்டின் மார்கோண நிறுவன மும், ஜப்பானின் M.O.N. குழுவும் அகழ்வுப் பணி யில் ஈடுபட்டு ஓர் ஆண்டிற்கு சுமார் 18.75 மில்லி யன் டன் தாதுப் படிவுகள் அகழப்படுகின்றன. த் தாது ஜப்பான், ஹங்கேரி, ஜெர்மனி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சித்திராகர்க் மாவட் டத்தில், சிவகங்கா, ஹரிபூர் இடங்களில் மிகுந்த செறிவுள்ள இரும்புத் தாதுக்கள் கண்டறியப் பட் டுள்ளன. இங்கு தரைக்குக்கீழ் சுமார் 16 மீட்டர் ஆழத்தில் 68 விழுக்காடு இரும்பு உட்கூறு கொண்ட படிவு சுமார் 276 மில்லியன் டன் கிடைக்கிறது. 1973 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி கர்நாடக மாநிலத்தின் மொத்த ஹேமடைட்டுப் படிவுகளின் அளவு 1,052,16 மில்லியன் டன்னாகும். டைட்டானி பெர்ரஸ், மாக்னடைட் படிவுகள் பங்களுர்,சிக்மகளுர், ஹாசன் வடக்கு கன்ரா,தும் கூர் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இப்படிவுகள் சுமார் 7.56 முதல் 8.41 வரை டைட் டானிய உட்கூறு கொண்டு காணப்படுகின்றன. தும்கூர் மாவட்டத்தில் மிகுதியாகப் பரந்த டைட்டானியைப் பெர்ரஸ் மாக்னடைட்டு படிவு களில் 55 முதல் 61 விழுக்காடு வரை இரும்பு உட்கூறு காணப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இரத்தின கிரி, பந்தாரா, சந்திராபூர் (சண்டா) மாவட்டங் களில் அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளின்படி இரும்புத் தாதுப் படிவுகளின் அளவு சுமார் 407 மில்லியன் டன்னாகும். இங்கு காணப்படும் இரும்புப் படிவுகளில் 55 முதல் 66 விழுக்காடு வரை இரும்பு காணப்படுகிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஹேமடைட் படிவுகளை விட மாக்னடைட படிவுகள் மிகுதியாகப் பரந்து காணப்படுகின்றன. இங்கு ஹேமடைட் படிவு கள் காணப்படுகின்றன. இப்படிவுகளில் இரும்பின் அளவு 55 முதல் 60 விழுக்காடு வரை காணப்படு கிறது. சித்தூர் மாவட்டத்தில் நாயுடு பெட்டா விற்குத் தென்மேற்கே 7.2 கி.மீ. தூரத்தில், ஹேமடைட் கனிமப் படிவுகள் 58,59 விழுக்காடு இரும்பு உட்கூறு கொண்டு காணப்படுகிறது.