பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/758

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 இரும்பு பதனிடுதல்‌

734 இரும்பு பதனிடுதல் மரபியல் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படு கிறது. பெரும்பாலும் குழந்தைகளிடமும், இளைஞர் களிடமும் இது காணப்படுகிறது. மூச்சுச் சிற்றறை யில் இரத்தம் கசிவதாலும், அதனால் சிறுகச் சிறுக உடலில் ஹீமோகுளோபின் குறைவதாலும், நோயின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இக்குழந்தைகள் இருமல், சளியில் இரத்தம், மூச்சிறைப்பு, இழுப்பு, முதலிய நுரையீரல் குறிகளால் வருந்துகிறார்கள். உடல் வெளுப்பு, களைப்பு, சில வேளைகளில் நீலம் பூரிப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றுகின்றன. பெரும் பாலான நேரங்களில் நிமோனியா எனக் கருதக் கூடிய நோய் தோன்றுகிறது. இதய வீதமும், மூச்சு வீதமும் அதிகரிப்பதுடன் சுரம், மூச்சிறைப்பு போன்றவையும் தோன்றுகின்றன. எக்ஸ்கதிர் படத்தில் மூச்சுச் சிற்றறைகளில் பாதிப்புத் தோன்று கிறது. குழந்தையைப் பல நாள்கள் கணிகாணித்து வருவதாலேயே இதனை நிமோனியா விலிருந்து பிரித்துநோயுறுதி செய்ய முடியும். சிறுபான்மையான குழந்தைகளிடம் இரத்தச் சோகையின் வெளிப்பாடு முதலில் தோன்றலாம். நுரையீரல் அறிகுறிகள் பின்னர் ஏற்படலாம். ரத்தத்தில் சீரம் இரும்பு குறைந்து, குறை வண்ண சோகை குறைவிட்டச் தோன்றுகிறது. பிலிருபின், யுரோபிலினோஜன் அளவு சீரத்தில் உயர்கிறது. பின்னலணு எண்ணிக்கை அதிகரிக்கிறது; மலத்தில் இரத்தம் காணப்படும்; ஹீமாசிடரின் படிந்த மாக்ரோபேஜ் அணுக்களைச் சளியிலும் இரைப்பைச் சுரப்புகளிலும் காணலாம். இந்நிலையை ஆய்வே ஐயப்பாடின்றி உறுதி செய்யும்.மார் பறையைத் திறந்து அதில் சிறுதுண்டு திசுவை எடுத்து ஆய்தல் வேண்டும். மூச்சுச் சிற்றறைகளில் இரத்தக் கசிவு, ஹீமோசிடரின் படிந்த மாக்ரோ பேஜ், சிற்றறைகளில் சிற்றறைகளில் சளிப்படலம், நார் நலிவு ஆகியவை தோன்றுகின்றன. தந்துகிகளிலும், நார் நலிவு காணப்படலாம். எக்ஸ் கதிர் படத்தில் நிமோனியா நுரையீரல் சீர்குலைவு, சிற்றறை விரிவு முதலிய மாற்றங்களைக் காணலாம். நோயாளி பெரும்பாலும் நோய் கண்டு ஐந்து ஆண்களுக்குள் இறந்துவிடுவார். திடீரெனத் தோன்றும் இரத்தக் கசிவும், நுரையீரல் பணிக் குறைவுமே இதற்குக் காரணங்களாகும். பிரட்னிசோன் 1 மி.கி/கி.கி என்ற அளவில் கொடுத்தால் ஓரளவிற்குத் துன்பம் குறை யலாம். முதன்மை இரும்புப் படிவு வேறு சில நிலை களுடன் இணைந்து காணப்படலாம். பசும்பால் ஒவ்வா விளைவு, இதயத் தசை அழற்சி ஆகிய மூன்றும் இதில் அடங்கும்.பால் ஒவ்வா விளைவில் நுரையீரல் இரும்புப் படிவுக் குறிகளுடன், சீரத்தில் பாலுக்கு எதிரான புரதங்களைக் காணலாம். தோலில் பல் வேறு பால் புரதங்களைச் செலுத்திக் காப்பியல் விளைவுகளை உண்டாக்கலாம். இக்குழந்தைகளிடம் நெடுநாள் மூக்கு ஒழுகுதல், வாக நடுச்செவி அழற்சி, உணவுப்பாதைக் கோளாறுகள் இணைந்து காணப் படும். சிலருக்கு நுரையீரல் துன்பத்தின் கிளை விளை டான்சில் இதய அயர்வு தோன்றுகிறது. அடினாய்டு பெருக்கம் அடைவதால், அவற்றை நீக்கும் பொழுது, சற்று குணமுண்டாகிறது. கார்ட்டிசோன் மருந்துகள் தீவிர நிலையில் பயனளிக்கலாம். இதர வகைகளைவிடப் பால் ஒவ்வா விளைவு நோயின் போக்கு, சற்று மிதமாக அமைகிறது. இதய அழற்சி இணைந்து காணும்பொழுது, நுரையீரல், இரும்புப் படிவுடன் இதயம் பெருத்துத் தோன்று கிறது. மின்னலைப் பதிவில் மாற்றங்கள் தோன்ற லாம். கிளாமெருலிகளில் (glomeruli) கிளைக்கும் அழற்சியுடன் இணைந்து காணும் நேரங்களில் படிப் படியாகச் சிறுநீரகப் பணி குறைந்து - பிணியாளிகள் மரணமடைகின்றார்கள். ஈரிதழ் வால்வுக் குறுக்கத் தில், நுரையீரல் தந்துகி அழுத்தம் உயருவதால். நுரையீரலில் இரத்தக்கசிவு ஏற்படலாம். இரத்தக் குழாய்களில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய கொலாஜன் நோய்கள், ரூமட்டாய்டு மூட்டு அழற்சி, பெரி ஆர்ட்டரைட்டிஸ் நோடோசா (periarteritis nodosa) போன்ற நோய்களின் பக்க விளைவாகவும் நுரை யீரலில் இரும்புப் படிவு ஏற்படலாம் ஞா. இராஜராஜேஸ்வரி நூலோதி. Weatherall, D, J., Ledingham. J.G G., and Warrell, D.A.. Oxford Text Book of Medi- cine, First Edition, Oxford University Press, 1984. இரும்பு பதனிடுதல் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரும்பு உப்புகளைக் கொண்டு பதனிடும் முயற்சிகள் எடுக் கப்பட்டன. தாவரப் பதனிட்ட தோல்கள் மிகவும் நிறைவு தந்த போதும், பதனிடுவது மிகவும் கடினமானதா கவும் இருந்தது. மாறாக அலுமினியப் பதனிடு முறை எளிதானதாகவும், விரைவானதாகவும் இருந்த போதிலும் உண்டாக்கப்பட்ட தோல்கள் முற்றிலும் விரும்பத்தக்க தன்மைகளை உடையவையாக இல்லை. எனவே, இரும்பு பதனிடு முறையைப் பயன்படுத்தி, பட்டைப் பதனிட்ட தோல்களைப் போன்ற தன்மை யுடைய தோல்களை விரைவாகவும் எளிதாகவும் பெறஇயலும் என்று கருதப்பட்டு ஆய்வுகள் செய்யப் பட்டன. ஆனால், கடந்த 160 ஆண்டுகளாக இந்த முயற்சியில் பயன் எதுவும் கிட்டவில்லை. 1770 ஆம் ஆண்டு ஜான்சன் என்னும் ஆங்கி லேயரால் இரும்பு உப்பு பதனிடுதற்குப் பயன்படுத்தப்