இரும்பும் எஃகும் 735
பட்டது. இந்த முறையில் பதனிட 57 வாரங்கள் ஆகும். அலுமினியப் பதனிட்ட தோலைப் போல இரும்பு பதனிட்ட தோல் கொதி நீர் உப்புடைய தாக இல்லை. கடந்த 50 ஆண்டுகால ஆய்வுகளின் பயனாக ஓர் அளவு நிறைவான தோலை இரும்பு பதனிடுதல் மூலம் பெற இயலும் என்றாலும் பட்டைப் பதனிடு முறை போன்றோ, நிறமியப் பதனிடுமுறை போன் றோ இந்த முறையைச் சிறந்ததாகக் கருத இயல் வில்லை. இரும்பு உப்புக்களைக்கொண்டு பதனிடு நீர்மம் தயாரிக்கும்போது கவனிக்கப்பட வேண்டி யவை; நீர்மம் தயாரிக்கப் பயன்படுத்தும் முறை எளிமையாக இருக்க வேண்டும். தயாரிக்கப்படும் நீர்மத்தின் தன்மை, பதனிடுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்; பயன்படுத்தப்படும் இயைபியல் பொருள் விலை குறைவாக இருக்க வேண்டும். பதனிடும்போது 30-40 விழுக்காடு இரும்பு உப்பு மிகவும் வேகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சுமார் 20 விழுக்காடு அமிலமும் எடுத்துக் கொள்ளப் படுகிறது. எனவே, பதனிட்ட பிறகு தோல்களில் மிகுதியான அமிலம் இருக்கும். பதனிடுதலைப் பீப் பாயில் செய்வதால் இரண்டு மணி நேரத்திற்குள் செய்ய இயலும். நல்ல பதனிடு பொருளின் தேவைகள். தோல்கள் இழைநார்களாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுப் பின்னப்பட்டு இருக்க வேண்டும். அழுகிக் கெட்டு விடாதவாறு வெகுகாலத்திற்கு இருக்க வேண்டும். பதனிட்ட தோல், நீர், அமிலம், காரம் முதலிய வற்றால் பாதிக்கப்பட்டு, பதனிடாத தோலின் தன்மையை அடையக் கூடாது. பதனிட்ட தோல்கள் விரும்பத்தக்க தன்மையுடையவையாக இருக்க வேண் டும். சேமித்து வைக்கும் போதும், பயன்படுத்தும் போதும் நீண்ட காலத்திற்குத் தோல் கெடக் கூடாது. இரும்பு பதனிடுதலைத் தக்க முறையில் செய் தால், மேலே கூறப்பட்ட தன்மையுடைய தோல் களைப் பெற இயலும். ஆனால், இவற்றை அவ்வாறு பயன்படுத்த, நிறமியப் பதனிடுதலுக்குச் செலவாகும் பொருளைவிட மிகுதியாகச் செலவு ஆகும். இது மிகவும் சிக்கலான செயல்பாடுகளை உடையது. இவை தாவரப் பதனிடு பொருளோடு ஒத்துப் போகாத தன்மையுடையவையாக இருப்பதால், இவற்றைத் தாவரப் பதனிடு பொருளோடு சேர்க் கும்போது, கருமையான இரும்பு-பதனிடு கூட்டுப் பொருளான வண்டலைத் தரும். இது அலுமினியப் பதனிடுதலுக்கும் நிறமியப் பதனிடுதலுக்கும் இடைப் பட்டது. இவை வெண்மையான நிறமுடைய தோல் பயன்படா. முன்னர் களை செய்யப் உற்பத்தி செய்யப்பட்ட ஆய்வுகளின் பயனாக இரும்பு பதனிட்ட தோல்கள் உடையும் தன்மை உடையவை யாகவும், பாதுகாக்கும்போது இரும்பும் எஃகும் 735 சிதைந்து போகு தன்மையுடையவையாகவும், காயும்போது சுருங்கும் தன்மையுடையவையாகவும், கருமையான சுருங்கிய புள்ளிகளை மேற்பக்கத்தில் உடையவையாகவும் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இரும்புப் பதனிட்ட தோல்கள் பொதுவாக உறுதியாகவும், கடினமாகவும், கனமாகவும் இருக்கின்றன. எனவே, மிகுதியான எண்ணெய் அல்லது கொழுப்பூட்டம் வேண்டும். இவை கொதிநீர்க் காப்பு அற்றவை. இந்த இரும்பு பதனிடு உப்புகள் இதுவரை சுத்தில் பதனிடப் பயன்படுத்தப்படவில்லை. வணி பழ.முத்தையா நூலோதி. முத்தையா. பழ., தோல் பதனிடும் முறைகள் பற்றிய அறிவியலும் தொழில் நுணுக் கமும், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம், சென்னை 1978. இரும்பும் எஃகும் தூய்மையான இரும்பை எளிதில் பெற இயலாது. இரும்பு மற்ற உலோகங்களுடன் கூட்டு நிலையில் மிகுதியாகப் இருக்கும்போது பயன்படுகிறது. இரும்பு எப்போதும் சிறிது கார்புன் பொருளுடன் சேர்ந்தே காணப்படும். இரும்பில் கலந்துள்ள கார்பன் பொருள்களைக் கொண்டு அதன் தரத்தையும், வலி மையையும் எளிதில் கணிக்கலாம். இவ்விரும்பைக் கார்பன் பொருள்களின் கூட்டை வைத்து வார்ப் பிரும்பு, தேனிரும்பு, எஃகு என்று மூன்று வகை களாகப் பிரிக்கலாம். வார்ப்பிரும்பு, சுமார் 4 விழுக்காடு கரி கலந் துள்ளது. இது கடினமானதன்று; எளிதில் உடையக் கூடியது. இதைச் சூடேற்றிச் சம்மட்டியால் அடித்து நீட்ட முடியாது. உருக்கி அச்சுகளில் எனவே, இதன் பயன்பாடு குறைவேயாகும். வார்க்கலாம். தேனிரும்பில் கரியின் அளவு குறைவாக உள்ளது. பண்டைக் காலத்தில் இவ்வகை இரும்பு மிகுதியாக உற்பத்தி செய்யப்பட்டு, புழக்கத்தில் இருந்து வந் துள்ளது. இதைச் சூடு செய்து தகடாக்க முடியும். இரும்பின் கடினமும், எஃகின் உறுதியும் இதற்கு இல்லை. தேனிரும்புத் துண்டுகள் ஒன்றோடு ஒன்று வெண் சூட்டில் இணையும் பண்புடையவை. கண்டுபிடிப்பதற்கு முன் இது பெருமளவில் பயன் பட்டு வந்தது. எஃகு எஃகில் சுமார் 1.7 விழுக்காடு கரி கலந்து காணப் படும். மேலும், இதன் உட்கூறில் மாங்கனீஸ், சிலிக் கான், கந்தகம், ஃபாஸ்ஃபரஸ் ஆகியவை கலந்து